சிறந்த முதலீட்டுத் திட்டம் எது? – சரியான கேள்வி அது
அல்ல; சரியான முதலீட்டு கலவையே முக்கியம்..! Which Investment Product
Is the Best?
ஏ.ஜி.வி ஸ்ரீநாத் விஜய், இணை நிறுவனர், https://gbvmfservices.in/, ARN-148604
முதலீடு
செய்ய விரும்பும் பெரும்பாலானோர் முதலில் கேட்கும் கேள்வி, "எந்த முதலீட்டுத் திட்டம்
சிறந்தது?" என்பதாகும். ஆனால் உண்மையில் இது சரியான கேள்வி அல்ல.
ஏனெனில், எல்லோருக்கும் பொருந்தக்கூடிய ஒரே ஒரு சிறந்த முதலீட்டுத் திட்டம் என்று
எதுவும் இல்லை.
ஒருவரின்
வருமானம், நிதி இலக்கு, முதலீட்டு காலம், ரிஸ்க்கை ஏற்கும் மனப்பான்மை மற்றும்
பணத் தேவையைப் பொறுத்தே சரியான முதலீட்டைத் தேர்வு செய்ய வேண்டும். ஒரு நல்ல முதலீட்டாளர்
தனிப்பட்ட திட்டத்தைத் தேடுவதில்லை; தனது நிதி இலக்குகளுக்கு ஏற்ற முதலீட்டுக்
கலவையை உருவாக்குகிறார்.
கார் தேர்வு செய்வதைப் போலவே முதலீட்டுத் தேர்வும்..!
ஒருவர்
கார் வாங்கும்போது, "எந்த கார் உலகிலேயே சிறந்தது?" என்று கேட்பதில்லை.
சிறிய குடும்பத்திற்கு ஒரு வகை கார் பொருத்தமாக இருக்கும். அதிக பயணத்திற்கும்
பெரிய குடும்பத்திற்கும் வேறு வகை கார் தேவைப்படும். அதுபோலவே முதலீட்டிலும் ஒரே
திட்டம் அனைவருக்கும் ஏற்றதாக இருக்காது. பட்ஜெட், பயன்பாடு, தேவையான வசதிகள்
மற்றும் பயண நோக்கம் ஆகியவற்றைப் பொறுத்தே சரியான காரைத் தேர்வு செய்வது போல,
முதலீட்டிலும் நிதி இலக்குகளின் அடிப்படையில் தேர்வு செய்ய வேண்டும்.
முக்கிய முதலீட்டு வகைகள்:
|
முதலீட்டு வகை |
யாருக்கு ஏற்றது? |
முக்கிய சிறப்பு |
|
மியூச்சுவல்
ஃபண்ட் |
பெரும்பாலான
முதலீட்டாளர்கள் |
குறைந்த
தொகையில் தொடங்கலாம், பல்வேறு சொத்துகளில் முதலீடு செய்யும் வசதி |
|
சிறப்பு
முதலீட்டு ஃபண்ட் (SIF) |
அனுபவமுள்ள
முதலீட்டாளர்கள் |
நெகிழ்வான
முதலீட்டு உத்திகள் |
|
போர்ட்ஃபோலியோ
மேலாண்மை சேவை (PMS) |
அதிக
முதலீடு செய்யக்கூடியவர்கள் |
தனிப்பட்ட
தேவைக்கேற்ப முதலீட்டு நிர்வாகம் |
|
மாற்று
முதலீட்டு ஃபண்ட் (AIF) |
உயர்ந்த
சொத்து மதிப்புள்ள முதலீட்டாளர்கள் |
குறிப்பிட்ட
நோக்கங்களுக்கான மேம்பட்ட முதலீட்டு வாய்ப்புகள் |
எந்த அம்சங்களை வைத்து முதலீட்டைத் தேர்வு செய்ய
வேண்டும்?
ஒரு
முதலீட்டைத் தேர்வு செய்வதற்கு முன் பின்வரும் அம்சங்களை கவனிக்க வேண்டும்.
|
கவனிக்க வேண்டிய அம்சம் |
ஏன் முக்கியம்? |
|
நிதி
இலக்கு |
சொந்த வீடு,
கல்வி, ஓய்வூதியம் போன்ற நோக்கங்கள் |
|
முதலீட்டுக்
காலம் |
குறுகிய
காலமா அல்லது நீண்ட காலமா என்பதை முடிவு செய்ய |
|
ரிஸ்க்கை
ஏற்கும் திறன் |
சந்தை
ஏற்ற இறக்கங்களைச் சமாளிக்கும் மனப்பக்குவம் |
|
பணப்புழக்கத்
தேவை |
அவசர
நேரத்தில் எளிதாக பணமாக மாற்ற முடியுமா? |
|
முதலீட்டுத்
தொகை |
உங்கள்
வருமானத்திற்கு ஏற்ற திட்டத்தைத் தேர்வு செய்ய |
ஒரே திட்டத்தில் முதலீடு செய்வது நல்லதா?
பொதுவாக
அனைத்து முதலீட்டுத் தொகையையும் ஒரே திட்டத்தில் போடுவது நல்ல நடைமுறை அல்ல.
பல்வேறு சொத்து வகைகளில் முதலீடு செய்வது அபாயத்தை குறைக்க உதவும். உதாரணமாக, பங்குச்
சந்தை சார்ந்தது (நிறுவனப் பங்குகள், பங்குச் சந்தை சார்ந்த ஈக்விட்டி மியூச்சுவல்
ஃபண்ட், நிலையான வருமான முதலீடுகள் (ஃபிக்ஸட் டெபாசிட், கடன் பத்திரங்கள், கடன்
சந்தை மியூச்சுவல் ஃபண்டுகள்), தங்கம் / வெள்ளி போன்றவற்றை கலவையாக வைத்திருப்பது
நீண்ட காலத்தில் நிலையான வளர்ச்சிக்கு உதவுகிறது.
முதலீட்டு கலவை ஏன் முக்கியம்?
வயது
அதிகரிக்கும் போது, வருமானம் மாறும் போது, குடும்பப் பொறுப்புகள் அதிகரிக்கும்
போது முதலீட்டு அமைப்பும் மாற்றப்பட வேண்டும். இளம் வயதில் அதிக வளர்ச்சியை நோக்கி
முதலீடு செய்யலாம். பணி ஓய்வுக் காலத்தை நெருங்கும் போது பாதுகாப்பான முதலீடுகளின்
விகிதத்தை அதிகரிப்பது நல்லது.
முதலீட்டாளர்கள் தவிர்க்க வேண்டிய தவறுகள்..!
- நண்பர்கள் கூறியதால் முதலீடு
செய்வது.
- சமூக ஊடகங்களில் பிரபலமாக பேசப்படும்
திட்டங்களைப் பின்பற்றுவது.
- ரிஸ்க்கை மதிப்பிடாமல் அதிக
வருமானம் மட்டுமே எதிர்பார்ப்பது.
- முழுத் தொகையையும் ஒரே
முதலீட்டில் போடுவது.
- முதலீடுகளை காலந்தோறும் ஆய்வு
செய்யாமல் விடுவது.
சிறந்த
முதலீட்டுத் திட்டம் என்று ஒன்றைத் தேடுவதற்குப் பதிலாக, உங்கள் நிதி இலக்குகள், முதலீட்டுக் காலம், ரிஸ்க்கை ஏற்கும் திறன் மற்றும்
எதிர்காலத் தேவைகளுக்கு ஏற்ற முதலீட்டுக் கலவையை (Fortpolio) உருவாக்குவதே
புத்திசாலித்தனமான அணுகுமுறை. செல்வத்தை உருவாக்குவது ஒரு குறிப்பிட்ட
முதலீட்டுத் திட்டம் அல்ல; நன்கு திட்டமிடப்பட்ட, கலவையான முதலீட்டு
போர்ட்ஃபோலியோதான்.
கூடுதல் விவரம் மற்றும் முதலீட்டுக்கு
ஏ.ஜி.வி ஸ்ரீநாத் விஜய், இணை நிறுவனர், https://gbvmfservices.in/, ARN-148604
குவாலிஃபைடு பர்சனல் ஃபைனான்ஸ் புரபஷனல்
(QPFP) ஆவார். இவரின் தந்தையும் மியூச்சுவல் ஃபண்ட் விநியோகஸ்தர் ஆவார். பொள்ளாச்சியை
சேர்ந்த இவர் சுமார் 2,000 தனிநபர்களுக்கு நிதிச் சேவை அளித்து வருகிறார்.
நாணயம் விகடன்
இதழில் வெளியான ஏ.ஜி.வி
ஸ்ரீநாத் விஜய் கட்டுரைகளை படிக்க https://bit.ly/4uj1I1Y
Phone -
9080705714
Email - srivj.sv@gmail.com
📍 அலுவலக முகவரி:
எண் 33, எஸ்.வி. டவர்ஸ்,
நியூ ஸ்கீம் ரோடு,
பொள்ளாச்சி – 642 001,
தமிழ்நாடு.
🕒 அலுவலக நேரம்:
திங்கட்கிழமை – சனிக்கிழமை
காலை 10:00 மணி – மாலை 06:30 மணி.
Disclaimer:
மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு சந்தை ரிஸ்க்களுக்கு உட்பட்டது. முதலீடு செய்யும் முன் திட்டம் சார்ந்த அனைத்து ஆவணங்களையும் சரியாகப் படித்துப் பார்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. மியூச்சுவல் ஃபண்ட் மூலம் நிச்சயமான ஆதாயங்கள் கிடைக்கும் என்பதற்கு உத்தரவாதம் கிடையாது.

