ஜனவரி 2026 – மியூச்சுவல் ஃபண்ட் துறை வலுவான வளர்ச்சி
தொடர்கிறது..
யாசீன் சாஹர், நிதி நிபுணர்
இந்திய
மியூச்சுவல் ஃபண்ட் துறை ஜனவரி 2026 மாதத்திலும் சிறப்பான வளர்ச்சியை பதிவு
செய்துள்ளது. சொத்து மதிப்பு உயர்வு, புதிய முதலீட்டாளர்கள் சேர்க்கை மற்றும் SIP
முதலீடுகளின் தொடர்ச்சியான வளர்ச்சி ஆகியவை முதலீட்டாளர்களின் நம்பிக்கை
அதிகரித்திருப்பதை தெளிவாக காட்டுகின்றன. Association of Mutual Funds in India
(AMFI) வெளியிட்ட மாதாந்திர அறிக்கையில் இந்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
மொத்த AUM ₹81 லட்சம் கோடியை கடந்தது
ஜனவரி 2026
மாதத்தில் மியூச்சுவல் ஃபண்ட் துறையின் மொத்த நிகர AUM (Assets Under Management) ₹81,01,305.58 கோடியாக உயர்ந்துள்ளது.
டிசம்பர் 2025 மாதத்தில் இது ₹80,23,378.99 கோடியாக இருந்தது.
மேலும்,
ஜனவரி மாதத்தின் சராசரி AUM (AAUM) ₹82,01,174.62 கோடியாக பதிவாகியுள்ளது. இது
துறையின் நிலையான வளர்ச்சியை வெளிப்படுத்துகிறது.
புதிய முதலீட்டாளர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு
மியூச்சுவல்
ஃபண்ட் முதலீட்டாளர்களின் எண்ணிக்கையும் வேகமாக உயர்ந்து வருகிறது.
·
ஜனவரி
2026 நிலவரப்படி மொத்த ஃபோலியோக்களின் எண்ணிக்கை: 26,63,13,561
·
டிசம்பர்
2025 நிலவரம்: 26,12,53,836
·
ஒரே
மாதத்தில் புதிதாக சேர்க்கப்பட்ட ஃபோலியோக்கள்: 50.6 லட்சம்
சிறு
முதலீட்டாளர்களின் பங்களிப்பு தொடர்ந்து வலுவாக உள்ளது.
·
Equity,
Hybrid மற்றும் Solution Oriented திட்டங்களின் சிறு முதலீட்டாளர்கள்
ஃபோலியோக்கள்:
o
ஜனவரி
2026: 20,43,09,553
o
டிசம்பர்
2025: 20,27,86,198
இது சாதாரண
முதலீட்டாளர்கள் மியூச்சுவல் ஃபண்ட்களை அதிக அளவில் தேர்வு செய்வதை
உறுதிப்படுத்துகிறது.
சிறு முதலீட்டாளர் AUM வளர்ச்சி:
சிறு
முதலீட்டாளர் பிரிவின் AUM (Equity + Hybrid + Solution Oriented Schemes) ஜனவரி
2026ல் ₹46,48,915 கோடியாக உயர்ந்துள்ளது.
நீண்டகால முதலீடுகளுக்கு பொதுமக்கள் அதிக முக்கியத்துவம் அளிப்பதை இது
வெளிப்படுத்துகிறது.
தொடர்ச்சியாக 59 மாதங்கள் பாசிட்டிவ் ஈக்விட்டி முதலீடு
மார்ச் 2021
முதல் தொடர்ந்து 59வது
மாதமாக ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்ட்களில் நேர்மறை முதலீட்டு வரவு (Positive
Inflows)
பதிவாகியுள்ளது. சந்தை ஏற்ற இறக்கங்களுக்கிடையிலும் முதலீட்டாளர்கள் ஈக்விட்டி
திட்டங்களில் நம்பிக்கையுடன் முதலீடு செய்து வருவது இதன் மூலம் தெளிவாகிறது.
SIP முதலீடுகள் புதிய உச்சம்
Systematic
Investment Plan (SIP) வழியாக முதலீடு செய்யும் கலாசாரம் மேலும் வலுவடைந்துள்ளது.
·
SIP
வழியாக முதலீடு செய்யப்பட்ட மொத்த சொத்து மதிப்பு:
₹16,36,082.09 லட்சம் கோடி
(மொத்த மியூச்சுவல் ஃபண்ட் சொத்துகளில் 20.2%)
·
ஜனவரி
2026 மாத SIP முதலீடு:
₹31,002.33 கோடி
·
செயலில்
உள்ள SIP கணக்குகள்:
9,92,18,602
இந்த
புள்ளிவிவரங்கள், SIP முறையின் மீது முதலீட்டாளர்கள் கொண்டுள்ள நீடித்த
நம்பிக்கையை வெளிப்படுத்துகின்றன.
புதிய திட்டங்கள் அறிமுகம்:
ஜனவரி 2026
மாதத்தில் மொத்தம் 12 புதிய ஓபன்-எண்டெட் மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் அறிமுகம்
செய்யப்பட்டுள்ளன.
இந்த புதிய திட்டங்கள் மூலம் மொத்தமாக ₹1,939 கோடி நிதி
திரட்டப்பட்டுள்ளது.
SIF பிரிவில் சிறப்பான வளர்ச்சி
Specified
Investment Funds (SIF) பிரிவிலும் நல்ல முன்னேற்றம் காணப்பட்டுள்ளது:
·
ஜனவரி
2026ல் SIF சொத்து மதிப்பு: ₹6,564 கோடி
·
புதிய
நிகர முதலீட்டு வரவு: ₹1,729 கோடி
·
இதில்
ஹைப்ரிட் திட்டங்களுக்கு மட்டும் வந்த முதலீடு: ₹1,637 கோடி
இது புதிய
வகை முதலீட்டு திட்டங்கள் மீது முதலீட்டாளர்கள் காட்டும் ஆர்வத்தை
எடுத்துக்காட்டுகிறது.
ஜனவரி 2026
AMFI அறிக்கை, இந்திய மியூச்சுவல் ஃபண்ட் துறையின் வலுவான அடித்தளத்தையும்,
தொடர்ச்சியான வளர்ச்சியையும் தெளிவாக காட்டுகிறது. அதிகரிக்கும் SIP முதலீடுகள்,
புதிய முதலீட்டாளர்கள் சேர்க்கை, நீடித்த ஈக்விட்டி இன்ப்ளோஸ் ஆகியவை துறையின்
எதிர்கால வளர்ச்சிக்கு உறுதியான அடையாளங்களாக உள்ளன.
நிதி
திட்டமிடலில் மியூச்சுவல் ஃபண்ட்கள் முக்கிய பங்காற்றி வருவதால், வரும்
காலங்களிலும் இந்த வளர்ச்சி பாதை மேலும் வலுப்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
யாசீன் சாஹர், நிதி நிபுணர்
திரு.
யாசின் சஹாரை rahas84@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரி மற்றும் 98433 13512 என்ற தொலைபேசி
எண்ணில் தொடர்புகொள்ளலாம்.
நிதி
நிபுணர் திரு. யாசின் சஹார், முன்னணி தனிநபர் நிதி இதழ்களான நாணயம் விகடன், அவள் விகடன்
மற்றும் Vikatan.com ஆகியவற்றில் எழுதிய கட்டுரைகளை இந்த இணைப்பில் படிக்கலாம்: https://bit.ly/4mcEqWq
யாசின் சஹார் ஒரு முதலீட்டு
உத்தி நிபுணரும் எழுத்தாளரும் ஆவார். சொத்து ஒதுக்கீடு, மியூச்சுவல் ஃபண்டுகள் மற்றும்
செல்வ உருவாக்கம் ஆகியவற்றில் கவனம் செலுத்தி வருகிறார். நிதி சந்தைகள், மேக்ரோ பொருளாதாரம்
மற்றும் நீண்டகால முதலீட்டு உத்திகள் குறித்து விரிவாக எழுதுகிறார். இதில் கூறப்பட்டுள்ள
கருத்துகள் அனைத்தும் அவருடைய தனிப்பட்ட கருத்துகளே.