குறைந்தபட்ச முதலீடு
ரூ. 500: குரோவ் நிஃப்டி இந்தியா இன்டர்நெட் இ.டி.எஃப் Grow
Nifty India Internet ETF
குரோவ் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம், நிஃப்டி இந்தியா இன்டர்நெட்
குறியீட்டில் முதலீடு செய்யும் பாஸிவ் (Passive) வகை திட்டத்தை குரோவ்
நிஃப்டி இந்தியா இன்டர்நெட் இ.டி.எஃப் (Grow Nifty India Internet ETF) என்கிற பெயரில் அறிமுகம்
செய்துள்ளது.
இந்தக் குறியீட்டில் இன்டர்நெட் சார்ந்த 21 முன்னணி நிறுவனங்கள் இடம்
பெற்றுள்ளன. தகவல் தொழில்நுட்பம் சார்ந்த நிறுவனங்கள் இல்லாமல் டிஜிட்டல் மற்றும்
இணையதள சேவை வழங்கும் நிறுவனங்கள் மட்டும் இந்தக் குறியீட்டில் இடம் பெற்றுள்ளன.
இந்தியாவின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) வளர்ச்சியை விட டிஜிட்டல்
பொருளாதாரம் 4 மடங்கு வேகமான வளர்ச்சி அடைய வாய்ப்பு இருப்பதாக
கணிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் இணையதளங்கள் மூலம் தினமும் 40 லட்சம் உணவுகள் சப்ளை செய்யப்படுகிறது.
60 கோடி யுபிஐ பரிவர்த்தனைகள், 12.4 லட்சம் ரயில் டிக்கெட்டுகள், 3.7 கோடி
எண்ணிக்கையில் வர்த்தகம் என்று மிகப்பெரிய அளவில் பரிவர்த்தனைகள் தினசரி இணைய
வெளியில் நடைபெறுகிறது. ரயில் டிக்கெட் பதிவில் சுமார் 85% மற்றும் விமான டிக்கெட்
பதிவில் 70% இணையதள சேவையை கொண்டே நடைபெறுகிறது. இதன் காரணமாக இந்தக் குறியீடு
வரும் காலத்தில் சிறப்பான வளர்ச்சி அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தத்
திட்டத்தில் 2025 ஜூன் 27 வரை என்.எஃப்.ஓ வெளியீட்டின் மூலம் ரூ. 10 என்.ஏ.வி
மதிப்பில் முதலீட்டை மேற்கொள்ளலாம். அதன் பிறகு என்.ஏ.வி மதிப்பில் எப்போது
வேண்டுமானாலும் முதலீட்டை மேற்கொள்ள முடியும்.
குறைந்தபட்ச முதலீடு
ரூ. 500
இது பாஸிவ் வகை திட்டம் என்பதால் இதன் செலவு விகிதம் குறைவு ஆகும். இந்த
திட்டம் முழுவதும் பங்குச் சந்தைகளில் முதலீடு செய்யப்படுவதால் ரிஸ்க் இருக்கிறது.
இருந்தாலும் நீண்ட காலத்தில் இந்த ரிஸ்க் பரவலாக்கப்பட்டு ஆண்டுக்கு சராசரியாக
12-13 சதவிகித வருமானம் கிடைக்க வாய்ப்புள்ளது.
மேலும் விவரங்கள் மற்றும் முதலீடுகளுக்கு..!
ஏ எஸ் முரளிதரன்
CEO,
உமா முரளிதரன்
லலிதா முரளிதரன்
வீரா ஃபைன்சர்வ்
பழைய எண். 23/69, புதிய எண். 14, 1வது தளம்,
ரக்ஷா வளாகம்,
டிஎம் மேஸ்திரி தெரு,
வண்ணான்துறை சந்திப்பு,
திருவான்மியூர்
சென்னை 600041
மொபைல் & வாட்ஸ்அப் 8754035456
மின்னஞ்சல்:
asmuralidharran@gmail.com
முன்னணி தனிநபர் நிதி இதழ் நாணயம் விகடனில் திரு. ஏ.எஸ்.முரளிதரன் எழுதிய கட்டுரைகளைப் படிக்க bit.ly/3YFqCL5
Disclaimer:
மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு சந்தை ரிஸ்க்களுக்கு உட்பட்டது. முதலீடு செய்யும் முன் திட்டம் சார்ந்த அனைத்து ஆவணங்களையும் சரியாகப் படித்துப் பார்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. மியூச்சுவல் ஃபண்ட் மூலம் நிச்சயமான ஆதாயங்கள் கிடைக்கும் என்பதற்கு உத்தரவாதம் கிடையாது.