மொத்தப் பக்கக்காட்சிகள்

தொழில் அதிபர் முகே‌‌ஷ் அம்பானிக்கு ரூ.40 கோடி அபராதம் ..!

தொழில் அதிபர் முகே‌‌ஷ் அம்பானிக்கு ரூ.40 கோடி அபராதம் ..!

இந்திய பங்குச்சந்தைகள் ஒழுங்குமுறை வாரியம் (செபி), தொழில் அதிபர் முகே‌‌ஷ் அம்பானிக்கு ரூ.15 கோடி அபராதம் விதித்துள்ளது.

 

செபி, பங்கு வர்த்தகத்தில் நடைபெறும் மோசடிகளை கண்காணித்து நடவடிக்கை எடுத்து வருகிறது.

கடந்த 2007 ஆம் ஆண்டு ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் ரிலையன்ஸ் பெட்ரோலியம் நிறுவனத்தின் 4.1 சதவிகித பங்குகளை பங்கு வர்த்தகத்தை பாதிக்கும் வகையில் அது வீழ்ச்சி அடைந்த நேரத்தில் வாங்கி, விற்பனை செய்திருந்தது செபி  அமைப்பின் விசாரணையில் கண்டறியப்பட்டது.

 

இந்த நிலையில், முறைகேடாக பங்கு வர்த்தகம் மேற்கொண்டது தொடர்பாக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம், அதன் தலைவரும், நிர்வாக இயக்குனருமான  திரு. முகே‌‌ஷ் அம்பானி மற்றும் மும்பை எஸ்.இ.எஸ். நிறுவனம், நவிமும்பை எஸ்.இ.எஸ் நிறுவனம் ஆகியவற்றிற்கு அபராதம் விதித்து உள்ளது.

 

இதன்படி ரிலையன்ஸ் இண்ஸ்ட்ரீஸ் நிறுவனத்துக்கு ரூ.25 கோடியும், முகே‌‌ஷ் அம்பானிக்கு ரூ.15 கோடியும், நவிமும்பை எஸ்.இ.எஸ் நிறுவனத்துக்கு ரூ.20 கோடியும், மும்பை எஸ்.இ.எஸ் நிறுவனத்துக்கு ரூ.10 கோடியும் அபராதமாக விதிக்கப்பட்டு உள்ளது.

Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - 365 நாள்கள்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

இலவச பங்குச் சந்தைப் பயிற்சி ஞாயிறு, 21 ஏப்ரல் 2024

இலவச  பங்குச் சந்தைப் பயிற்சி  பங்குச் சந்தையில் முதலீடு செய்ய ஆர்வம் உள்ளவரா? பங்குச் சந்தை முதலீடு பற்றி அறிய இந்த இலவசப் பயிற்சியில் சேரவ...