பங்குச் சந்தை ஏற்ற இறக்கம்; மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டாளர்கள் என்ன செய்ய வேண்டும்? சென்னையில் இலவச கூட்டம்! Prakala Wealth
2026
நவம்பர் 29-ம் தேதி சென்னை தாம்பரத்தில் ப்ரகலா வெல்த் (Prakala Wealth) நடத்தும் முதலீட்டாளர் நிகழ்ச்சி!
சென்னையைச் சேர்ந்த ராஜேஷ், கடந்த மூன்று ஆண்டுகளாக மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் மாதந்தோறும் எஸ்.ஐ.பி முறையில் முதலீடு செய்து வருகிறார். சமீபகாலமாகப் பங்குச் சந்தையில் ஏற்படும் ஏற்ற இறக்கங்களால் அவரது முதலீட்டின் மதிப்பு குறைந்துள்ளது. இதனால், தொடர்ந்து முதலீடு செய்யலாமா, ஏற்கெனவே உள்ள முதலீட்டை விற்றுவிடலாமா என்ற குழப்பம் அவருக்கு ஏற்பட்டது.
இது ராஜேஷுக்கு மட்டுமல்ல, பல மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டாளர்களுக்கும் ஏற்படும் பொதுவான சந்தேகம். இத்தகைய சூழலில் முதலீட்டாளர்கள் எப்படிச் செயல்பட வேண்டும் என்பதற்கு வழிகாட்டும் வகையில் சென்னையில் ஓர் இலவச முதலீட்டாளர் கூட்டம் நடைபெற உள்ளது.
முதலீட்டாளர்களுக்கு வழிகாட்டும் நிகழ்ச்சி!
ப்ரகலா வெல்த் நிறுவனம் சார்பில், 'இன்றைய பங்குச் சந்தை நிலைமையில் மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டாளர்கள் என்ன செய்ய வேண்டும்?' என்ற தலைப்பில் இந்தப் பயிலரங்கம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தற்போதைய பங்குச் சந்தைச் சூழலில் முதலீட்டாளர்கள் எத்தகைய அணுகுமுறையைக் கடைப்பிடிக்க வேண்டும், சந்தை இறக்கத்தின்போது என்ன செய்ய வேண்டும், நீண்டகால முதலீட்டின் முக்கியத்துவம் என்ன, முதலீட்டுத் திட்டங்களை எவ்வாறு மதிப்பீடு செய்ய வேண்டும் போன்ற விஷயங்களைப் புரிந்துகொள்ள இந்த நிகழ்ச்சி உதவியாக இருக்கும்.
குறிப்பாக, சந்தை இறங்கும்போது பதற்றத்தில் முதலீடுகளை விற்பது, மற்றவர்கள் கூறும் ஆலோசனைகளின் அடிப்படையில் திட்டங்களை மாற்றுவது, குறுகிய கால வருமானத்தை மட்டுமே பார்த்து முதலீட்டு முடிவுகளை எடுப்பது போன்ற தவறுகளைத் தவிர்ப்பது குறித்தும் முதலீட்டாளர்கள் தெரிந்துகொள்ளலாம்.
நிகழ்ச்சித் தொகுப்பாளர்:
எஸ். ஹரிஷ்,
தெற்கு
மற்றும் கிழக்கு மண்டல
வணிகத்
தலைவர்,
பஜாஜ் ஃபின்சர்வ் மியூச்சுவல் ஃபண்ட்.
சிறப்பு விருந்தினர்:
சொக்கலிங்கம் பழனியப்பன்,
இயக்குநர்,
ப்ரகலா வெல்த் பிரைவேட் லிமிடெட்.
யாரெல்லாம் பங்கேற்கலாம்?
முதன்முறையாக மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்ய விரும்புபவர்கள் முதல் ஏற்கெனவே முதலீடு செய்து வருபவர்கள் வரை அனைவரும் இதில் பங்கேற்கலாம்.
ஓய்வுபெற்றவர்கள், இளைஞர்கள், இல்லத்தரசிகள், கல்லூரி மாணவர்கள், தொழில்முனைவோர், மருத்துவர்கள், பொறியாளர்கள், வழக்கறிஞர்கள், தகவல் தொழில்நுட்பத் துறையினர், அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்கள் எனப் பல்வேறு தரப்பினருக்கும் இந்த நிகழ்ச்சி பயனுள்ளதாக இருக்கும். முதலீடு தொடர்பாகக் குழப்பத்தில் இருப்பவர்களும் தங்களது சந்தேகங்களைத் தெளிவுபடுத்திக்கொள்ள இது ஒரு வாய்ப்பாக அமையும்.
நிகழ்ச்சி விவரங்கள்
|
விவரம் |
தகவல் |
|
ஏற்பாடு |
ப்ரகலா வெல்த் |
|
நாள் |
29.11.2026, ஞாயிற்றுக்கிழமை |
|
நேரம் |
காலை 9.30 முதல்
மதியம் 12.30 வரை |
|
இடம் |
ஸ்ரீ பாலாஜி ரெசிடென்சி |
|
முகவரி |
எண் 326, ஜி.எஸ்.டி சாலை, குரோம்பேட்டை, தாம்பரம் சானடோரியம், சென்னை – 600044 |
|
கட்டணம் |
அனுமதி இலவசம் |
முன்பதிவு அவசியம்!
இந்தப் பயிலரங்கில் பங்கேற்க அனுமதி இலவசம் என்றாலும், முன்கூட்டியே பதிவு செய்வது அவசியம். குறைந்த எண்ணிக்கையிலான இடங்களே இருப்பதால், முதலில் பதிவு செய்பவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்
முன்பதிவு:
இங்கே கிளிக் செய்து
பதிவு செய்யலாம்
Google Form Registration link:
https://tinyurl.com/prakala-bajaj-finserv
மேலும் விவரங்களுக்கு:
·
சென்னை: 89391 17560, 99626 05666
·
கோயம்புத்தூர்: 89391 17522
·
பெங்களூரு: 77084 73666
இணையதளம்: www.prakala.com
பங்குச் சந்தையின் ஏற்ற இறக்கங்களைக் கண்டு பதற்றப்படாமல், முதலீட்டின் நோக்கம், கால அளவு, இழப்பு தாங்கும் திறன் ஆகியவற்றின் அடிப்படையில் முடிவுகளை எடுப்பதே வெற்றிகரமான முதலீட்டுக்கு முக்கியம். அந்த வகையில், முதலீட்டாளர்களின் நிதி விழிப்புணர்வை மேம்படுத்தும் ஒரு வாய்ப்பாக இந்த இலவசப் பயிலரங்கம் அமையும்.
