மிரே அசெட் லைஃப் சைக்கிள் ஃபண்ட் 2056 சென்னையில்
அறிமுக கூட்டம்..! Mirae Asset Life
Cycle Fund 2056
நீண்ட
காலத்துக்குப் பிறகு தேவைப்படும் ஒரு நிதி இலக்குக்காக முதலீடு செய்பவர்களுக்கு, மிரே
அசெட் லைஃப் சைக்கிள் ஃபண்ட் 2056 (Mirae Asset Life Cycle
Fund 2056) என்ற புதிய மியூச்சுவல் ஃபண்ட் அறிமுகமாகிறது.
இந்த
ஃபண்டின் அறிமுக கூட்டம் சென்னையில் நடந்தது. இதில் மியூச்சுவல் ஃபண்ட்
விநியோகஸ்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
| Vaibhav B. Shah |
இந்த ஃபண்ட் பற்றி Vaibhav B. Shah
Head - Products, Business Strategy &
International Business
Mirae Asset Investment Managers ( India ) Pvt
Ltd விளக்கி
சொன்னார்.
இது
முன்கூட்டியே நிர்ணயிக்கப்பட்ட முதிர்வு காலத்தையும், இலக்கை நெருங்கும்போது
முதலீட்டு அணுகுமுறையை மாற்றும் முறையையும் கொண்ட ஓப்பன் எண்டெட் ஃபண்ட் திட்டம்
இதுவாகும்.
இந்தத்
திட்டம் நிறுவனப் பங்குகள், கடன் பத்திரங்கள், பணச் சந்தை முதலீடுகள், தங்கம்
மற்றும் வெள்ளி சார்ந்த முதலீடுகள் உள்ளிட்ட பல்வேறு சொத்து வகைகளில் பிரித்து முதலீடு
செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய ஃபண்ட்க்கான
முதலீட்டு வாய்ப்பு 2026 செப்டம்பர் 28 முதல் அக்டோபர் 12 வரை உள்ளது. திட்டம் அக்டோபர் 21, 2026 முதல் மீண்டும்
முதலீடு மற்றும் பணம் எடுப்பதற்குத் திறக்கப்படும். தொடக்க முதலீடு ரூ.5,000; மாத
எஸ்.ஐ.பி. ரூ.99 முதல் தொடங்கலாம்.
@@@
