மதிப்பு மிக்க பங்குகளில் முதலீடு செய்யும் புதிய வாய்ப்பு!
SBI Nifty200 Value
ஆர். வெங்கடேஷ்,
குருராம் ஃபைனான்சியல் சர்வீசஸ் பிரைவேட் லிமிடெட்
ARN 265132
“இந்தப் பங்கு விலை குறைவாக இருக்கிறது...
வாங்கலாமா?” என்று நண்பர் கேட்டார்.
“விலை
குறைவாக இருப்பது மட்டும் போதாது. நிறுவனத்தின் வருமானம், புத்தக மதிப்பு,
விற்பனை, டிவிடெண்ட் என்கிறெஅ ஈவுத்தொகை போன்றவற்றுடன் ஒப்பிடும்போது பங்கு விலை
மதிப்புடன் இருக்கிறதா என்பதையும் பார்க்க வேண்டும்” என்றார் மற்றொரு நண்பர்.
தனிப்பட்ட
முறையில் ஒவ்வொரு நிறுவனத்தையும் ஆய்வு செய்வது எல்லோராலும் முடியாது. இதுபோன்ற
முதலீட்டாளர்களுக்காக விதிமுறைகளின் அடிப்படையில் மதிப்பு மிக்க பங்குகளைத் தேர்வு
செய்யும் அணுகுமுறையை வழங்குகிறது எஸ்.பி.ஐ நிஃப்டி200 வேல்யூ 30 இ.டி.எஃப் எஃப்.ஓ.எஃப். (SBI Nifty200 Value 30 ETF FOF)
மதிப்பு முதலீடு என்றால் என்ன?
பங்கின்
சந்தை விலை மட்டும் அதன் உண்மையான மதிப்பைச் சொல்லாது. நிறுவனத்தின் வருமானம்,
புத்தக மதிப்பு, விற்பனை மற்றும் ஈவுத்தொகை போன்ற அளவுகோல்களுடன் ஒப்பிடும்போது
குறைந்த மதிப்பீட்டில் இருக்கும் நிறுவனங்களைத் தேடுவது பொதுவாக “மதிப்பு முதலீடு”
எனப்படுகிறது.
இந்த புதிய
திட்டம் நேரடியாக பல்வேறு பங்குகளைத் தேர்வு செய்து முதலீடு செய்வதற்குப் பதிலாக, எஸ்.பி.ஐ நிஃப்டி200 வேல்யூ
30 இ.டி.எஃப்-ல்
பெரும்பகுதி முதலீட்டைச் செய்யும் ஃபண்ட் ஆஃப் ஃபண்ட் அமைப்பைக் கொண்டுள்ளது.
30 நிறுவனங்கள் எப்படி தேர்வு
செய்யப்படுகின்றன?
இதற்கான
அடிப்படை குறியீடான நிஃப்டி200 வேல்யூ 30, நிஃப்டி 200 குறியீட்டில் உள்ள
நிறுவனங்களிலிருந்து 30 நிறுவனங்களைத் தேர்வு செய்கிறது.
இதில் நான்கு
முக்கிய அளவுகோல்கள் பயன்படுத்தப்படுகின்றன.
|
அளவுகோல் |
எதைப்
பார்க்கிறது? |
|
வருமானம் / விலை |
பங்கு விலையுடன் ஒப்பிடும் நிறுவன வருமானம் |
|
புத்தக மதிப்பு / விலை |
நிறுவனத்தின் சொத்து மதிப்புடன் ஒப்பிடும் பங்கு விலை |
|
விற்பனை / விலை |
விற்பனையுடன் ஒப்பிடும் சந்தை மதிப்பு |
|
ஈவுத்தொகை வருவாய் |
பங்கு விலையுடன் ஒப்பிடும் ஈவுத்தொகை |
இந்த
அளவுகோல்களின் அடிப்படையில் நிறுவனங்களுக்கு “மதிப்பு மதிப்பெண்” வழங்கப்பட்டு,
அதிக மதிப்பு பண்புகளைக் கொண்ட 30 நிறுவனங்கள் தேர்வு செய்யப்படுகின்றன.
நிஃப்டி 200 என்றால்?
நிஃப்டி 200
குறியீடு பெரிய மற்றும் நடுத்தர சந்தை மதிப்பு கொண்ட நிறுவனங்களை உள்ளடக்கியது.
எனவே, இந்த மதிப்பு அடிப்படையிலான குறியீட்டிலும் பெரிய மற்றும் நடுத்தர
நிறுவனங்களின் கலவை இடம்பெறும்.
நிஃப்டி200
வேல்யூ 30 குறியீடு ஆண்டுக்கு இரண்டு முறை, ஜூன் மற்றும் டிசம்பர் மாதங்களில்
மறுசீரமைக்கப்படுகிறது. இதனால் சந்தை நிலவரம் மற்றும் மதிப்பு அளவுகோல்களில்
ஏற்படும் மாற்றங்களுக்கு ஏற்ப பங்குகளின் தேர்வு மாறக்கூடும்.
புதிய ஃபண்டின் முக்கிய தகவல்கள்”
|
விவரம் |
தகவல் |
|
திட்டத்தின் பெயர் |
SBI Nifty200 Value 30 ETF FOF |
|
திட்ட வகை |
ஓப்பன் எண்டெட் ஃபண்ட் ஆஃப் ஃபண்ட் |
|
அடிப்படை முதலீடு |
SBI Nifty200 Value 30 ETF |
|
புதிய ஃபண்ட் நிறைவு தேதி |
30 செப்டம்பர் 2026 |
|
குறைந்தபட்ச முதலீடு |
₹5,000 |
|
ஒதுக்கீட்டு தேதி |
7 அக்டோபர் 2026 |
|
மீண்டும் முதலீடு/விற்பனை தொடக்கம் |
12 அக்டோபர் 2026 |
கவனிக்க
வேண்டிய ரிஸ்க்
“வேல்யூ”
என்ற அணுகுமுறை என்பதால் இந்த முதலீட்டில் ஆபத்து இல்லை என்று கருதக்கூடாது. சந்தை
சரிவின்போது இந்தத் திட்டத்தின் மதிப்பும் குறையலாம்.
மேலும்,
மதிப்பு அடிப்படையில் தேர்வு செய்யப்படும் பங்குகள் நீண்ட காலத்துக்கு சந்தையால்
குறைவாக மதிப்பிடப்படக்கூடிய சூழலும் இருக்கலாம். அதாவது, ஒரு நிறுவனம் மதிப்புடன்
இருப்பதாகக் கணக்கிடப்பட்டாலும், அதன் பங்கு விலை உடனடியாக உயர வேண்டும் என்ற
கட்டாயம் இல்லை. எஸ்.பி.ஐ மியூச்சுவல் ஃபண்ட் கூட மதிப்பு உத்தியில் குறிப்பிட்ட
காலங்களில் குறைவான செயல்பாடு ஏற்படலாம் என்றும், பங்குச் சந்தை, செறிவு மற்றும்
கண்காணிப்பு வித்தியாசம் போன்ற அபாயங்கள் இருப்பதாகவும் குறிப்பிடுகிறது.
யாருக்கு இது பொருந்தலாம்?
மதிப்பு
அடிப்படையிலான முதலீட்டு அணுகுமுறையை விரும்புபவர்கள், தனிப்பட்ட பங்குகளைத்
தேர்வு செய்வதைவிட விதிமுறை சார்ந்த முறையில் முதலீடு செய்ய விரும்புபவர்கள்,
நீண்டகால முதலீட்டு நோக்கம் கொண்டவர்கள் இந்தத் திட்டத்தைப் பரிசீலிக்கலாம்.
ஆனால்,
ஏற்கெனவே பல்வேறு பெரிய மற்றும் நடுத்தர நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்யும்
மியூச்சுவல் ஃபண்டுகள் வைத்திருப்பவர்கள், இதைச் சேர்ப்பதால் தங்களின் முதலீட்டில்
ஏற்படும் கூடுதல் செறிவையும் கவனிக்க வேண்டும்.
முக்கியமாக,
“மதிப்பு” என்ற பெயர் மட்டும் முதலீடு செய்வதற்கான காரணமாக இருக்கக் கூடாது. திட்டத்தின்
செலவு, ரிஸ்க், முதலீட்டுக் காலம், ஏற்கெனவே உள்ள முதலீடுகள் மற்றும் தனிப்பட்ட நிதி
இலக்குகள் ஆகியவற்றை ஆராய்ந்த பிறகே முடிவு எடுப்பது அவசியம்.
கூடுதல் விவரங்கள் மற்றும் முதலீடு செய்ய..!
ஆர். வெங்கடேஷ்,
குருராம் ஃபைனான்சியல் சர்வீசஸ் பிரைவேட் லிமிடெட்
திரு. ஆர். வெங்கடேஷ்,
நிறுவனர், www.gururamfinancialservices.com
ARN 265132
மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு, நிதி ஆலோசனை, ஆயுள் மற்றும் மருத்துவக் காப்பீடு எடுக்க ஆர். வெங்கடேஷ் அவர்களை தாராளமாக அணுகலாம்.
நிதி ஆலோசகர் திரு. ஆர். வெங்கடேஷ் ,
நாணயம் விகடன், அவள் விகடன், விகடன் டாட் காம் உள்ளிட்ட பத்திரிகைகளில் எழுதிய கட்டுரைகளை படிக்க
https://www.vikatan.com/author/aar-vengktteess
Mr. R Venkatesh
AMFI Registered Mutual Fund Distributors.
GuruRam Financial Services Pvt. Ltd.
New No. 14, Old No. 37C, First Floor
Nathamuni Street, T Nagar, Chennai -600017
Tel. +91-9677267889, 9677025125
Email: gururamforyou@gmail.com
http://www.gururamfinancialservices.com/
Disclaimer:
மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு சந்தை ரிஸ்க்களுக்கு உட்பட்டது. முதலீடு செய்யும் முன் திட்டம் சார்ந்த அனைத்து ஆவணங்களையும் சரியாகப் படித்துப் பார்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. மியூச்சுவல் ஃபண்ட் மூலம் நிச்சயமான ஆதாயங்கள் கிடைக்கும் என்பதற்கு உத்தரவாதம் கிடையாது.
@@@
