சீரான பணம் எடுக்கும்
திட்டம் SWP – உங்கள் முதலீட்டிலிருந்து பென்ஷன் போல் மாத வருமானம்!
ஸ்ரீனிவாசன்
சுப்ரமணியன்,
தனிநபர்
நிதியியல் நிபுணர், www.ducatz.in
சீரான பணம்
எடுக்கும் திட்டம் (Systematic Withdrawal Plan - SWP) என்பது உங்கள் மியூச்சுவல்
ஃபண்ட் முதலீட்டிலிருந்து நிலையான வருமானத்தைப் பெறும் ஒரு முறை ஆகும். இதில்,
நீங்கள் உங்கள் மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தில் இருந்து ஒரு நிர்ணயிக்கப்பட்ட
தொகையை நிரந்தர இடைவெளிகளில் (regular intervals) எடுத்துக் கொள்ளலாம்.
இது பணி ஓய்வு
பெற்றவர்கள் அல்லது தொடர்ச்சியான பணப்புழக்கம் தேவைப்படுகிறவர்களுக்கு மிகவும்
பொருத்தமானது. உங்கள் முதலீட்டை கட்டுப்படுத்தப்பட்ட முறையில் பயன்படுத்த உதவும்
ஒரு திட்டமாகும்.
SWP எப்படி செயல்படுகிறது?
நீங்கள்
எவ்வளவு தொகையை எவ்வளவு கால இடைவெளியில் (மாதம், காலாண்டு அல்லது உங்கள்
விருப்பப்படி) எடுத்துக் கொள்ள வேண்டும் என்று தீர்மானிக்கிறீர்கள்.
அந்தத் தொகை
தானாகவே உங்கள் வங்கி கணக்கில் செலுத்தப்படும். மீதமுள்ள தொகை பங்கு சந்தை மற்றும்
கடன் சந்தை, தங்கம்/ வெள்ளியில் முதலீடாகவே இருந்து, காலப்போக்கில் வருமான வளர்ச்சி அடையும்
வாய்ப்பு உண்டு.
இந்தத்
தானியங்கி முறை, நீங்கள் ஒரு சந்தா (subscription) சேவையைப் போல, திட்டமிட்ட
நேரத்தில் பணத்தை பெற உதவுகிறது.
SWP-ஐ ஏன் தேர்வு
செய்ய வேண்டும்?
எஸ்.டபிள்.யூ முறையை ஏன் தேர்வு
செய்ய வேண்டும் என்பதற்கான முக்கிய காரணங்களைப் பார்ப்போம்.
1 நிலையான வருமானம்
(Steady Cashflow)
தினசரி
செலவுகளை நிறைவேற்றவும் அல்லது கூடுதல் வருமானமாகவும் பயன்படும் நிலையான
பணப்புழக்கம் கிடைக்கும்.
2 நெகிழ்வுத்தன்மை
(Flexibility)
நீங்கள்
எப்போது வேண்டுமானாலும் எடுக்கும் தொகையையும், அவ்வப்போது மாற்றிக் கொள்ளும்
வசதியும் உண்டு.
3 வரி சலுகை
(Tax Efficiency)
மூலதனத்திற்கு
(original investment - Capital) அல்லாமல், லாபப் பகுதிக்கு மட்டுமே வரி
விதிக்கப்படும்.
4 மூலதன வளர்ச்சி
(Capital Appreciation)
நீங்கள் பணம்
எடுத்துக் கொண்டாலும், மீதமுள்ள முதலீடு தொடர்ந்து வளர்ச்சி அடையும் வாய்ப்பு
உள்ளது.
மியூச்சுவல் ஃபண்ட் SWP vs பிற முதலீட்டு வாய்ப்புகள்..!
|
அம்சம் |
மியூச்சுவல்
ஃபண்ட் SWP |
பாரம்பரிய
டெபாசிட் |
பாண்டுகள் |
|
வரி |
12 மாதங்களுக்குப் பிறகு ஈக்விட்டி/ ஹைபிரிட்
ஃபண்ட்களில் LTCG சலுகை* ₹1.25
லட்சம் வரை** |
தனிநபர் வரி விகிதப்படி |
தனிநபர் வரி விகிதப்படி |
|
பணம் எடுக்கும் வசதி |
நிர்ணயிக்கப்பட்ட தொகை |
முன்கூட்டியே எடுத்தால் அபராதம் |
பணமாக்கும் தன்மை குறைவு |
|
மறுமுதலீடு ரிஸ்க் |
அதிகம் |
அதிகம் |
அதிகம் |
|
மூலதன ரிஸ்க் |
அதிகம் |
குறைவு |
அதிகம் |
|
பராமரிப்பு செலவு |
குறைவு |
இல்லை |
டீமேட் கணக்கு கட்டணங்கள் |
குறிப்பு:
· ஈக்விட்டி/ ஹைபிரிட்
ஃபண்ட்கள் குறைந்தது 65% அளவு பங்குச் சந்தை தொடர்பான முதலீட்டில் வைத்திருக்கும்.
· நிதியாண்டில் நீண்ட
கால மூலதனத்தில் ₹1,25,000 வரை
வரியில்லை. அதன் பிறகு 12.5% வரி விதிக்கப்படும் (STT பொருந்தும்).
நிஜ எடுத்துக்காட்டு
– Nifty 50 Index SWP
₹50,00,000 தொகையை 2
ஆகஸ்ட் 2004 அன்று Nifty 50 Index-இல் முதலீடு செய்து, மாதம் ₹50,000 SWP மூலம் எடுத்துக்
கொண்டால்:
· 21 ஆண்டுகளில் மொத்தம்
பெற்ற தொகை: ₹1,26,00,000
· 31 ஜூலை 2025
நிலவரப்படி மீதமுள்ள முதலீட்டு மதிப்பு: ₹2,43,15,154
மூலம்: ACE MF
பொறுப்பு
துறப்பு (Disclaimer):
இந்த எடுத்துக்காட்டு கடந்த கால Nifty 50 வருமனா செயல்திறனை அடிப்படையாகக்
கொண்டது. எதிர்கால வருமானம் உறுதி செய்யப்படாது. சந்தை நிலை, செலவுகள், வரி போன்ற
காரணிகளால் வருமானம் மாறலாம். முதலீடு செய்வதற்கு முன் உங்கள் வரி ஆலோசகர் அல்லது
நிதி ஆலோசகரை அணுகவும்.
SWP மூலம் – வரி
சலுகைகளுடன், வருமான வளர்ச்சி வாய்ப்புடன் உங்கள் முதலீட்டிலிருந்து பென்ஷன் போன்ற
வருமானத்தை அனுபவிக்கலாம்!
கூடுதல் விவரங்கள் மற்றும் முதலீட்டுக்கு…
ஸ்ரீனிவாசன்
சுப்ரமணியன்,
தனிநபர்
நிதியியல் நிபுணர், www.ducatz.in
சென்னை மற்றும் திருப்பூரில் இயங்கி வரும் Ducatz FinServ இன் நிறுவனர் மற்றும் முதன்மை தனிநபர் நிதியியல் நிபுணர் சீனிவாசன் சுப்ரமணியன். இவர் தனிநபர் நிதி மேலாண்மையில் 15 ஆண்டு கால நிபுணத்துவம் பெற்றவர். தனிநபர் நிதி, நிதித் திட்டமிடல், காப்பீடு, பட்ஜெட், முதலீடு மற்றும் செல்வ மேலாண்மை போன்ற துறைகளில் நிபுணத்துவம் பெற்றவர்.
இவர் தற்போது 250-ம் மேற்பட்ட குடும்பங்களுக்கு அவர்களுடைய நிதி மேம்பாட்டிற்கு சேவை செய்து வருகிறார். தனிப்பட்ட வாடிக்கையாளர் சேவைக்கு அப்பால், சமூகத்தில் நிதி சார்ந்த விழிப்புணர்வுகளை மேம்படுத்துவதில் அர்ப்பணிப்புடன் செயலாற்றி வருகிறார். கல்லூரி மாணவர்களுக்கு நிதியியல் சார்ந்த பட்டய வகுப்புகளை கல்லூரிகள் மற்றும் தனிப்பட்ட வகுப்புகள் மூலம் நடத்தி வருகிறார்.
நாணயம் விகடன் இதழில் வெளியான ஸ்ரீனிவாசன் சுப்ரமணியன் கட்டுரைகளை படிக்க https://bit.ly/4r0Mlbp
ஆம்ஃபி பதிவு எண்: 64151
Ducatz Finserv
ப்ளாக் எண்: 14, ஃப்ளாட் எண்: G1,
Jain Green Acres, எண் 91, தர்கா ரோடு,
ஜமீன் பல்லாவரம்,
சென்னை – 600 043,
தமிழ்நாடு, இந்தியா.
📞 தொடர்புக்கு: (+91) 995 260 4444
📧 மின்னஞ்சல்: connect@ducatz.in
இணையதளம்: www.ducatz.in
Disclaimer:
மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு சந்தை ரிஸ்க்களுக்கு உட்பட்டது. முதலீடு செய்யும் முன் திட்டம் சார்ந்த அனைத்து ஆவணங்களையும் சரியாகப் படித்துப் பார்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.
மியூச்சுவல் ஃபண்ட் மூலம் நிச்சயமான ஆதாயங்கள் கிடைக்கும் என்பதற்கு உத்தரவாதம் கிடையாது.
