டாக்டர் திவ்யா அபிஷேக் FLO அமைப்பின் 2026–2027 National
Head for Legal & Advocacy
டாக்டர்
சி.ஏ., சி.எம்.ஏ., சி.எஸ். திவ்யா அபிஷேக் அவர்கள், சென்னை நகரத்தைச் சேர்ந்த
முன்னணி சார்ட்டேர்ட் அக்கௌண்டன்டாக திகழ்ந்து வருகிறார். அவருடைய திறமை,
அர்ப்பணிப்பு மற்றும் தலைமைத்திறனை மதித்து, நியூடெல்லியில் செயல்படும் FICCI
Ladies Organization (FLO) அமைப்பின் 2026–2027 ஆம் ஆண்டிற்கான “National Head for
Legal & Advocacy” என்ற முக்கிய பொறுப்பிற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்த
தேர்வு, 2026 மார்ச் 31ஆம் தேதி நியூடெல்லியில் நடைபெற்ற முதல் நிர்வாக குழு
கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது.
திவ்யா
அபிஷேக் அவர்கள் சாதனைகளில் இது மட்டுமல்லாமல், பல முக்கிய மைல்கற்களும் உள்ளன.
குறிப்பாக, 2023–2024 ஆண்டிற்கான ICMAI அமைப்பின் தெற்கு இந்திய பிராந்தியக்
குழுவான SIRC-இன் இளைய வயது தலைவராக (Chairperson) தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்ற
பெருமையும் அவருக்கு உண்டு. அதனைத் தொடர்ந்து, 2024–2025 ஆண்டிற்கான FICCI FLO
சென்னை கிளையின் இளைய வயது தலைவராகவும் பதவி வகித்துள்ளார்.
மேலும், ஆசிய
அளவில் சிறந்த பெண் கணக்கியல் நிபுணராக SAFA அமைப்பின் “Women Star of the Year
Award” விருதை பெற்றுள்ளார். இளம் சாதனையாளர்களுக்கான “Yuva Samman Young Achiever
Award 2025” மற்றும் “Ugadi Puraskar Award 2026” ஆகிய விருதுகளையும் அவர்
வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
நிதி மற்றும்
கணக்கியல் துறையில் தொடர்ந்து சாதனைகளை படைத்து வரும் டாக்டர் திவ்யா அபிஷேக்
அவர்கள், இளம் பெண்களுக்கு முன்மாதிரியாக திகழ்கிறார். அவரது இந்த புதிய பொறுப்பு,
அவரின் திறமையை மேலும் உயர்த்துவதோடு, நாட்டின் சட்ட மற்றும் வழக்குரைஞர் துறையில்
பெண்களின் பங்களிப்பை வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டாக்டர்
திவ்யா அபிஷேக் அவர்களுக்கு மனமார்ந்த பாராட்டுகள் மற்றும் வாழ்த்துகள்!
