மாத SIP முதலீடு ₹1,000 கனரா ரொபெகா பேங்கிங் & ஃபைனான்சியல்
சர்வீசஸ் ஃபண்ட்
ஆர். வெங்கடேஷ்,
குருராம் ஃபைனான்சியல் சர்வீசஸ் பிரைவேட் லிமிடெட்
கனரா
ரொபெகா மியூச்சுவல் ஃபண்ட் (Canara Robeco Mutual Fund) நிறுவனம், கனரா ரொபெகா பேங்கிங்
& ஃபைனான்சியல் சர்வீசஸ் ஃபண்ட் (Canara Robeco Banking and Financial
Services Fund) திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது.
இந்தப் புதிய
Open-ended ஈக்விட்டி திட்டம், வங்கி மற்றும் நிதிச் சேவைத் துறையை மையமாகக்
கொண்டு முதலீடு செய்யும் ஒரு செக்டாரல் (Sectoral) ஃபண்டாகும். இந்தியாவின்
வளர்ந்து வரும் நிதி சேமிப்புகள், அதிகரித்து வரும் கடன் தேவைகள் மற்றும்
டிஜிட்டல் நிதி பரிவர்த்தனைகள் ஆகியவற்றை பயன்படுத்திக் கொண்டு நீண்ட கால செல்வ
உருவாக்கத்தை நோக்கமாகக் கொண்டுள்ளது.
ஏன் வங்கி மற்றும் நிதிச் சேவைத்
துறை?
இந்திய
பொருளாதார வளர்ச்சியின் முதுகெலும்பு வங்கி மற்றும் நிதிச் சேவைத் துறையாகும்.
காரணங்கள்:
1.
நிதி சேமிப்பு உயர்வு
·
குடும்ப
சேமிப்புகள், நிரந்தர வைப்புகளிலிருந்து மியூச்சுவல் ஃபண்ட், பங்குச ்சந்தை
முதலீடு போன்றவற்றுக்கு மாறி வருகிறது.
·
இதனால்,
சொத்து நிர்வாகம் (AUM) அதிகரிக்கிறது.
2.
கடன் வளர்ச்சி (Credit Growth)
·
வீட்டுக்
கடன், வாகன கடன், MSME கடன் ஆகியவற்றின் தேவை தொடர்ந்து உயரும் நிலை.
·
பொருளாதார
வளர்ச்சி அதிகரிக்கும் போது கடன் விரிவாக்கமும் கூடும்.
3.
டிஜிட்டல் மாற்றம்
·
UPI,
ஆன்லைன் வங்கி, ஃபின்டெக் வளர்ச்சி ஆகியவை நிதிச் சேவைத் துறைக்கு புதிய வருவாய்
வாய்ப்புகளை உருவாக்குகின்றன.
4.
லாப விகித மேம்பாடு
·
வட்டி
விகித சுழற்சியில் (Interest Rate Cycle) வங்கிகளின் நிகர வட்டி விகிதம் (NIM)
மேம்பட வாய்ப்பு.
முதலீட்டு நோக்கம் மற்றும் உத்தி
இந்த
ஃபண்டின் முக்கிய நோக்கம்:
·
Growth + Value Approach அதாவது வளர்ச்சி மற்றும்
மதிப்பு முதலீடு ஆகும்.
·
நிலையான
லாபம் அளிக்கும் பெரிய வங்கிகள்
·
அதிவேக
வளர்ச்சி வாய்ப்புள்ள NBFC/Fintech நிறுவனங்கள்
·
காப்பீடு,
சொத்து மேலாண்மை, ஹவுசிங் ஃபைனான்ஸ் போன்ற துணைத் துறைகள்
போர்ட்ஃபோலியோ
அமைப்பு
|
அம்சம் |
விளக்கம் |
|
முதலீட்டு வகை |
தஈக்விட்டி செக்டாரல் ஃபண்ட் |
|
துறை |
வங்கி மற்றும் நிதிச் சேவைகள் மட்டும் |
|
ரிஸ்க் நிலை |
அதிகம் (High Risk – High Return Potential) |
|
முதலீட்டு காலம் |
குறைந்தபட்சம் 5–7 ஆண்டுகள் பரிந்துரை |
|
இலக்கு |
நீண்ட கால மூலதன வளர்ச்சி |
இந்தத்
திட்டத்தை
·
Shridatta Bhandwaldar – CIO (Equities)
·
Amit Kadam – Fund Manager (Equities)
இருவரும் இணைந்து நிர்வகிக்க உள்ளனர்.
யாருக்கு பொருத்தமானது?
·
துறை
சார்ந்த முதலீட்டில் அனுபவம் உள்ளவர்கள்
·
அதிக
ரிஸ்க் ஏற்க தயாரான முதலீட்டாளர்கள்
·
இந்தியாவின்
நிதி வளர்ச்சி கதை (India Growth Story) மீது நம்பிக்கை உள்ளவர்கள்
·
நீண்ட
கால செல்வ உருவாக்க நோக்கம் கொண்டவர்கள்
முதலீட்டு
குறைந்தபட்ச
அளவுகள்
·
குறைந்தபட்ச ஒருமுறை முதலீடு (Lump Sum)
: ₹5,000
·
குறைந்தபட்ச மாதாந்திர SIP முதலீடு : ₹1,000
·
குறைந்தபட்ச கூடுதல் முதலீடு : ₹1,000
NFO
முடிவு தேதி: 13 மார்ச் 2026. இதன் பிறகு என்.ஏ.வி மதிப்பில் முதலீடு
செய்யலாம்..
முக்கிய
நன்மைகள்
1. ஒரே துறையில் கவனம்
செலுத்தும் தீவிரமான முதலீட்டு அணுகுமுறை
2. அனுபவமிக்க ஃபண்ட்
மேனேஜ்மெண்ட்
3. வங்கி, NBFC,
காப்பீடு, சொத்து மேலாண்மை உள்ளிட்ட பரவலான துணைத் துறைகள்
4. இந்தியாவின் 5
டிரில்லியன் பொருளாதார இலக்குடன் ஒத்துப்போகும் வளர்ச்சி வாய்ப்பு
கவனிக்க
வேண்டியவை
·
செக்டாரல்
ஃபண்டுகள் மிகவும் சுழற்சி சார்ந்தவை.
·
வட்டி
விகித மாற்றங்கள் நேரடியாக பாதிக்கும்.
·
போர்ட்ஃபோலியோவில்
10–20% அளவைத் தாண்டாமல் ஒதுக்கீடு செய்வது நல்லது.
·
பரவலான
(Diversified) ஈக்விட்டி ஃபண்டுகளுடன் இணைத்து முதலீடு செய்ய வேண்டும்.
வங்கி
மற்றும் நிதிச் சேவைத் துறை இந்திய பொருளாதாரத்தின் வளர்ச்சியை முன்னெடுத்து
செல்லும் முக்கிய இயக்க சக்தியாக உள்ளது. அந்த வளர்ச்சியில் நேரடியாக பங்கேற்க
விரும்பும் முதலீட்டாளர்களுக்கு, இந்த புதிய துறை சார்ந்த ஃபண்ட் ஒரு வாய்ப்பாக
இருக்கலாம்.
ஆனால், அதிக
வருமானம் கிடைக்கும் வாய்ப்பு இருப்பதோடு, அதிக ஏற்ற இறக்கம் இணைந்திருப்பதை
மறக்கக்கூடாது. நீண்ட கால நோக்கத்துடன், சரியான சொத்து ஒதுக்கீட்டில், ஆலோசனையுடன்
முதலீடு செய்தால் மட்டுமே எதிர்பார்க்கும் பலனை பெற முடியும்.
கூடுதல் விவரங்கள் மற்றும் முதலீடு செய்ய..!
ஆர். வெங்கடேஷ்,
குருராம் ஃபைனான்சியல் சர்வீசஸ் பிரைவேட் லிமிடெட்
திரு. ஆர். வெங்கடேஷ்,
நிறுவனர், www.gururamfinancialservices.com
மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு, நிதி ஆலோசனை, ஆயுள் மற்றும் மருத்துவக் காப்பீடு எடுக்க ஆர். வெங்கடேஷ் அவர்களை தாராளமாக அணுகலாம்.
நிதி ஆலோசகர் திரு. ஆர். வெங்கடேஷ் ,
நாணயம் விகடன், அவள் விகடன், விகடன் டாட் காம் உள்ளிட்ட பத்திரிகைகளில் எழுதிய கட்டுரைகளை படிக்க
https://www.vikatan.com/author/aar-vengktteess
Mr. R Venkatesh
AMFI Registered Mutual Fund Distributors.
GuruRam Financial Services Pvt. Ltd.
New No. 14, Old No. 37C, First Floor
Nathamuni Street, T Nagar, Chennai -600017
Tel. +91-9677267889, 9677025125
Email: gururamforyou@gmail.com
http://www.gururamfinancialservices.com/
Disclaimer:
மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு சந்தை ரிஸ்க்களுக்கு உட்பட்டது. முதலீடு செய்யும் முன் திட்டம் சார்ந்த அனைத்து ஆவணங்களையும் சரியாகப் படித்துப் பார்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. மியூச்சுவல் ஃபண்ட் மூலம் நிச்சயமான ஆதாயங்கள் கிடைக்கும் என்பதற்கு உத்தரவாதம் கிடையாது.

