ஜியோ ஃபைனான்ஸ் - இந்தியாவுக்கான புதிய
டிஜிட்டல் சந்தை:
எதிர்கால நிதி திட்டமிடலுக்கு
பயனர்களுக்கு அழைப்பு
புதிய ஜியோ பைனான்ஸ் செயலி குறித்து முன்னரே அறிந்து கொள்ள ‘Finsider’ என்னும் திட்டம் துவக்கம். இது பயனர்களின் வாழ்க்கைச் சூழலுக்கு ஏற்ப சரியான பரிந்துரைகளை வழங்கி, நிதிச் சேவைகளை முன்பை விட அதிக அளவில் தனிப்பயனாக்குகிறது.
இந்த 'Finsiders' திட்டத்தில் இணைபவர்கள், செயலியைப் பயன்படுத்தித் தங்கள்
கருத்துக்களை வழங்கி ஜியோ
பாயிண்ட்டுகளைப் பெறலாம். இந்தப் பாயிண்ட்களைக் கொண்டு பலவிதமான பரிசுகளைப்
பெற்றுக் கொள்ளலாம்.
ஜியோ பைனான்சியல் சர்வீசஸ் லிமிடெட்டின் கிளை நிறுவனமான ஜியோ பைனான்ஸ்
பிளாட்பார்ம் அண்ட் சர்வீஸ் லிமிடெட், புதிய ஜியோ பைனான்ஸ் செயலியை
அறிமுகப்படுத்தி இந்தியாவின் நிதித்துறையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தவுள்ளது.
'Finsider' என்ற இந்தச் சிறப்புத் திட்டத்தின் மூலம், பயனர்கள் இந்த அதிநவீன
நிதிச் சேவையை முதலில் பயன்படுத்தும் வாய்ப்பைப் பெறுவார்கள்.
வழக்கமான செயலிகளைப் போலச் சாதாரண நிதித் திட்டங்களை மட்டும்
பட்டியலிடாமல், இந்தப் புதிய செயலி செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்களைப்
பயன்படுத்துகிறது. இதன் மூலம் பயனர்களுக்கு உடனுக்குடன், அவர்களின் தனிப்பட்ட
தேவைக்கேற்ற சிறந்த நிதிச் சேவைகளை வழங்கி, தங்களின் எதிர்கால நிதியை
நம்பிக்கையுடன் கையாள உதவுகிறது.
செயலியின் முக்கிய சிறப்பம்சங்கள்:
இதில் ஜியோ நிறுவனங்கள் மற்றும் பிற நம்பகமான நிதி நிறுவனங்களின் பல
சேவைகள் கிடைக்கின்றன. வீட்டுக் கடன், தனிநபர் கடன், கிரெடிட் கார்டுகள்,
காப்பீடு, UPI, ஜியோ பிளாக்ராக் மியூச்சுவல் பண்டுகள், பிக்சட் டெபாசிட் (FD),
டிஜிட்டல் தங்கம், வரி தாக்கல் மற்றும் அதிக வருமானம்
தரும் புதிய வகை சேமிப்புக் கணக்குகள் போன்ற பல்வேறு சேவைகள் உள்ளன.
சாதாரண சலுகைகளை மட்டும் காட்டாமல், பயனர்களுக்கு எது சிறந்தது என்பதைச்
சிந்தித்து முடிவெடுக்கும் வகையில் இது உருவாக்கப்பட்டுள்ளது. பல செயற்கை
நுண்ணறிவு தொழில்நுட்பங்கள் மூலம், பயனரின் தற்போதைய தேவை, தகுதி மற்றும் நிதி
நிலைமையை ஆராய்ந்து, ஒவ்வொருவருக்கும் ஏற்ற சரியான பரிந்துரைகளை இந்தச் செயலி
வழங்கும்.
தனிப்பயனாக்கம்
ஒவ்வொரு பயனரின் நிதி நிலைமை மற்றும் தேவைகளுக்கு ஏற்ப செயலியின் முகப்புத்
திரை மாறுபடும். அதாவது, இருவரின் தேவைகள் வேறாக இருந்தால், அவர்களின் செயலியின்
தோற்றமும் வெவ்வேறாக இருக்கும்.
எளிய மொழி பயன்பாடு
பயனர்கள் தங்களுக்குத் தேவையான நிதிச் சேவைகளைத் தேடி அலைந்து நேரத்தை
வீணாக்க வேண்டாம். திரையில் உள்ள சாட் பாரில் தங்களுக்கு என்ன வேண்டும் என்பதைச்
சாதாரணமாக டைப் செய்தாலே போதும், அதற்கேற்ற சேவைகளைச் செயலி உடனே காட்டும்.
ஜியோ பாயிண்ட்ஸ்
இது ஒரு சிறப்பான ரிவார்டு திட்டமாகும். சாதாரண ஸ்க்ராட்ச் கார்டுகளுக்குப்
பதிலாக, செயலியில் செய்யும் ஒவ்வொரு பணப் பரிவர்த்தனைக்கும் பயனர்கள் ஜியோ
பாயிண்ட்ஸ்-ஐப் பெறுவார்கள். இந்த பாயிண்ட்களைப் பயன்படுத்தித் தங்களுக்குப்
பிடித்தமான பல பரிசுகளை வாங்கிக் கொள்ளலாம்.
விரைவில் வரவுள்ள கூடுதல் சிறப்பு அம்சங்கள்:
பயனர்களின் செலவுகள், கடன்கள், காப்பீடு, சொத்து சேர்த்தல் மற்றும் வரி
செலுத்துதல் ஆகியவற்றை ஆராய்ந்து, அவர்களின் நிதி வளர்ச்சிக்கு உதவிடும் வசதி.
உரையாடல் மூலமாக, பயனர்களின் ஒட்டுமொத்த நிதி நிலையை எவ்வாறு
மேம்படுத்துவது என்பது குறித்த பயனுள்ள ஆலோசனைகளை ஜியோ பைனான்ஸ் வழங்கும்; மேலும்
அந்த ஆலோசனைகளைச் செயல்படுத்தவும் உதவும்.
உரையாடல் மூலமாகவும், ஒரு சில கிளிக்குகளிலும், பயனர்கள் தங்களின் தொடர்
கட்டணங்கள் மற்றும் முதலீடுகளைத்
தானியக்க முறையில் எளிதாக அமைத்துக் கொள்ளலாம்.
ஜியோ பைனான்ஸ் செயலி மூலம் பெறப்படும் பொருட்கள் அல்லது சேவைகளுக்கு
உறுப்பினர்கள் சலுகைகளை பெறலாம். இதன் மூலம் அவர்கள் செய்யும் ஒவ்வொரு
பரிவர்த்தனையிலும் பலன் பெற முடியும்.
இது குறித்து ஜியோ பைனான்சியல் சர்வீசஸ் லிமிடெட்டின் நிர்வாக இயக்குனர்
மற்றும் தலைமைச் செயல் அதிகாரி ஹிதேஷ் சேத்தியா கூறுகையில், "அறிவார்ந்த நிதிச் சேவை என்பது
அனைத்து குடிமக்களின் அடிப்படை உரிமை என நாங்கள் நம்புகிறோம். நிதித்துறையில்
ஏற்பட்டுள்ள பெரிய மாற்றங்களைக் கருத்தில் கொண்டு, நாங்கள் உருவாக்கும்
அனைத்திலும் இந்தியாவையே மையமாகக் கொண்டே வடிவமைத்து வருகிறோம்.
நிதித் துறையில் நாம் சந்திக்கும் பிரச்னைகளையும் சிரமங்களையும் நீக்குவதே
முற்றிலும் தனிப்பயனாக்கப்பட்ட இந்த புதிய ஜியோ ஃபைனான்ஸ் செயலியின் நோக்கமாகும்.
ஒவ்வொரு இந்தியருக்கும் பாரபட்சமற்ற மற்றும் பயனுள்ள நிதி சார்ந்த விஷயங்களை
வழங்கி, வெளிப்படைத்தன்மை மற்றும் நம்பிக்கையுடன் தங்களின் நிதி எதிர்காலத்தை
அவர்களே சிறப்பாகக் கையாள அதிகாரம் அளிக்கும் வகையில் இந்த தளம்
வடிவமைக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.
Finsider-ஆக இணைவது எப்படி?
Finsider திட்டத்தில் இணைய, https://bharat.jiofinance.in/
என்ற இணையதளத்தில் பதிவு செய்து, பிளே ஸ்டோர் அல்லது ஆப் ஸ்டோர் வழியாகச்
செயலியைப் பதிவிறக்கம் செய்யவும் அல்லது அப்டேட் செய்து கொள்ளவும்.
செயலியைப் பயன்படுத்தி, அதில் உள்ள படிவம் மூலம் உங்கள் கருத்துகளைப்
பகிர்வதன் மூலம் ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் ஜியோ பாயிண்ட்களை பெற்று அதன் மூலம்
பலவிதமான பரிசுகளைப் பெறலாம்.
@@
