ரியல் எஸ்டேட்டில் முதலீடு:
வீடு, நிலம் வாங்காமலே ஒரு புதிய வாய்ப்பு! Motilal
Oswal Nifty REITs & Realty Index Fund
திரு. எஸ். கார்த்திகேயன், நிறுவனர்,
https://winworthwealth.com/, ARN 59199,
Ph: 98409 36032
“நிலம் வாங்க
வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. ஆனால், ஒரு நல்ல இடத்தில் நிலம் வாங்க பல லட்சங்கள்
தேவைப்படுகின்றன. அதற்குப் பதிலாகக் குறைந்த தொகையில் ரியல் எஸ்டேட் துறையில்
முதலீடு செய்ய முடியுமா?” என்று நண்பரிடம் கேட்டார் அருண்.
“நேரடியாக
நிலம் வாங்காமல், ரியல் எஸ்டேட் நிறுவனங்களிலும், வாடகை வருமானம் தரும்
சொத்துகளில் முதலீடு செய்யும் ரெய்ட் அமைப்புகளிலும் முதலீடு செய்யும் மியூச்சுவல்
ஃபண்ட் வந்திருக்கிறது” என்றார் நண்பர்.
அருணுக்கு
ஆச்சரியம். ரியல் எஸ்டேட் முதலீடு என்றால் வீடு, நிலம் மட்டுமே என்று
நினைத்திருந்த அவருக்கு இது முற்றிலும் புதிய அணுகுமுறையாக இருந்தது.
புதிய
மியூச்சுவல் ஃபண்ட் என்ன செய்கிறது?
Motilal
Oswal Asset Management Company அறிமுகப்படுத்தியுள்ள மோதிலால் ஆஸ்வால் நிஃப்டி
ரெய்ட்ஸ் & ரியால்டி இண்டெக்ஸ் ஃபண்ட் (Motilal Oswal Nifty
REITs & Realty Index Fund), ரியல் எஸ்டேட்
துறையை மையமாகக் கொண்ட ஓப்பன் எண்டெட் குறியீட்டு மியூச்சுவல் ஃபண்டாகும். இது நிஃப்டி ரெய்ட்ஸ் & ரியால்டி
மொத்த வருவாய் குறியீட்டை பின்பற்றுகிறது.
இதன் மூலம்
வீடு அல்லது நிலத்தை நேரடியாக வாங்காமல், பட்டியலிடப்பட்ட ரியல் எஸ்டேட்
நிறுவனங்கள் மற்றும் ரெய்ட் எனப்படும் ரியல் எஸ்டேட் முதலீட்டு அறக்கட்டளைகளில் (Real Estate Investment
Trust - REIT ரெய்ட்) மறைமுகமாக முதலீடு
செய்யும் வாய்ப்பு கிடைக்கிறது.
ரெய்ட் என்றால் என்ன?
ரியல்
எஸ்டேட் முதலீட்டு அறக்கட்டளை என்பது அலுவலகங்கள், வணிக வளாகங்கள் போன்ற வருமானம்
ஈட்டும் சொத்துகளில் முதலீடு செய்து, அந்தச் சொத்துகளிலிருந்து கிடைக்கும்
வருமானத்தில் முதலீட்டாளர்களும் பங்கேற்கும் அமைப்பாகும்.
இதனால் பெரிய
அளவிலான சொத்தை ஒருவர் தனியாக வாங்க வேண்டிய அவசியம் இல்லாமல், சிறிய தொகையிலேயே
அந்தத் துறையின் வளர்ச்சியில் பங்கேற்க முடியும்.
ஒரே கூடை... பல வாய்ப்புகள்!
இந்த ஃபண்ட்
பின்பற்றும் நிஃப்டி ரெய்ட்ஸ் & ரியால்டி குறியீட்டில் அதிகபட்சம் 15 பத்திரங்கள்
இடம்பெறும். ஒவ்வொரு பத்திரத்திற்கும் அதிகபட்சமாக 15 சதவிகித வெயிட்டேஜ்
வழங்கப்படுகிறது. மேலும், ரெய்ட் நிறுவனங்களின் மொத்த வெயிட்டேஜ் குறைந்தபட்சம் 60
சதவிகிதமாக இருக்க வேண்டும். குறியீடு காலாண்டுதோறும் மறுசீரமைக்கப்படுகிறது.
அதாவது, ஒரே
ஒரு ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் பங்கில் மட்டும் முதலீடு செய்வதைவிட, பல
நிறுவனங்கள் மற்றும் ரெய்ட் அமைப்புகளைக் கொண்ட ஒரு கூடையில் முதலீடு செய்வதற்கான
வாய்ப்பு கிடைக்கிறது.
திட்டத்தின்
முக்கிய விவரங்கள்
|
விவரம் |
தகவல் |
|
திட்டத்தின் பெயர் |
மோதிலால் ஆஸ்வால் நிஃப்டி ரெய்ட்ஸ் & ரியால்டி இண்டெக்ஸ்
ஃபண்ட் |
|
முதலீட்டு வகை |
திறந்தநிலை குறியீட்டு மியூச்சுவல் ஃபண்ட் |
|
பின்பற்றும் குறியீடு |
நிஃப்டி ரெய்ட்ஸ் & ரியால்டி மொத்த வருவாய் குறியீடு |
|
புதிய முதலீட்டு காலம் |
25.09.2026 – 09.10.2026 |
|
குறைந்தபட்ச முதலீடு |
ரூ.500 |
|
வெளியேற்றக் கட்டணம் |
15 நாட்களுக்குள் 1% |
|
15 நாட்களுக்குப் பிறகு |
வெளியேற்றக் கட்டணம் இல்லை |
|
ரிஸ்க் அளவு |
மிக அதிகம் |
ரியல்
எஸ்டேட் துறை வளர்ச்சி, நகரமயமாக்கல், அலுவலகம் மற்றும் வணிக இடங்களுக்கான தேவை
போன்ற காரணிகள் இந்தத் துறையில் செயல்படும் நிறுவனங்களுக்கு வாய்ப்புகளை
உருவாக்கலாம்.
இந்தத் திட்டம் பற்றி மேலும் தெரிந்து கொள்ளவும்
முதலீடு செய்யவும் தொடர்பு கொள்ளவும்
திரு. எஸ். கார்த்திகேயன்,
நிறுவனர், https://winworthwealth.com/, ARN 59199
ஆயுள் காப்பீடு
& மருத்துவக் காப்பீடு எடுக்கவும் திரு. எஸ்.கார்த்திகேயன் அவர்களை அணுகலாம்.
திரு. எஸ்.கார்த்திகேயன் வீட்டுக் கடன் (Home Loan) வாங்கவும் உதவுகிறார். இவரின் மூலம் அனைத்து விதமான மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீடு செய்ய முடியும்.
இவர் குமுதம், நாணயம் விகடன் உள்ளிட்ட இதழ்களில் கட்டுரைகள் எழுதி வருகிறார். மேலும் பல்வேறு டியூடிப் சேனல்களிலும் முதலீடு குறித்த தனது கருத்துகளை பதிவு செய்து வருகிறார்.
இவர் பிளாங் செக், பணப் பழக்கம் தமிழ் நூல்களை எழுதி இருக்கிறார். இது முதலீட்டாளர்களுக்கு மிகவும் உபயோகமான நூல் ஆகும். இவர் சார்டட் ஃபைனான்ஸியல் பிராக்டிஷனர் (Chartered
Financial Practitioner) ஆவார்.
நாணயம் விகடனில் இவர் எழுதிய கட்டுரைகளை படிக்க
https://www.vikatan.com/author/es-kaarttikeeynnn-niti-aaloockr-winworthgroups-com
யூடிப்
https://www.youtube.com/channel/UCGNt...
Facebook : https://www.facebook.com/KarthikeyanS...
LinkedIn : https://www.linkedin.com/in/karthikey...
Twitter : https://twitter.com/Winworth_Wealth
தலைமை அலுவலம்:
10-B
1st Floor Tharamani 100 Feet Road,
Baby Nagar, Velacherry, Chennai – 600 042
இ மெயில்: winworth2020@gmail.com
தொலைபேசி : 98409 36032, அலுவலகம்;
044- 4218 0009
Disclaimer:
மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு சந்தை ரிஸ்க்களுக்கு உட்பட்டது. முதலீடு செய்யும் முன் திட்டம் சார்ந்த அனைத்து ஆவணங்களையும் சரியாகப் படித்துப் பார்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. மியூச்சுவல் ஃபண்ட் மூலம் நிச்சயமான ஆதாயங்கள் கிடைக்கும் என்பதற்கு உத்தரவாதம் கிடையாது.
