"தூக்கமே" ஆரோக்கியம்.

உடலின் இயக்கத்தில் 'உணவு' மற்றும் 'உடற்பயிற்சி' எவ்வளவு முக்கியமானதோ, அதே அளவிற்கு முக்கியமானது 'தூக்கம்'.
தூக்கத்தை வெறும் ஓய்வாகப் பார்க்காமல், உடலை சீரமைத்துக் கொள்ளும்
" பழுது பார்க்கும் பணி" என்றே அறிவியலாளர்கள் குறிப்பிடுகின்றனர்.
தூக்கத்தின் அறிவியல் பின்னணி தெரியுமா?
தூக்கத்தின் போது நச்சுப் புரதங்கள் நீக்கப்பட்டு, அல்சைமர் போன்ற நரம்பியல் பாதிப்புகளைத் தடுக்கிறது.
ஆழ்ந்த தூக்கத்தின் போது உடல் 'சைட்டோகைன்கள்' எனும் புரதங்களைச் சுரக்கிறது.
இவை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்து, இரத்த அழுத்தத்தைக் குறைத்தும், இதயத் தசைகளுக்குத் தேவையான ஓய்வை அளித்தும்,மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தை குறைக்கிறது. மற்றும் உடல் பருமனைத் தடுக்கிறது.
தூக்கமின்மை நீண்ட காலம் நீடிக்கும் போது,
நோய்களின் பிடியில்
உடல் சிக்கி (டைப் 2 )நீரிழிவு நோய் வருவதற்கான வாய்ப்பையும்,
மன அழுத்தம், பதட்டம்,கவலை மனச்சிதைவு போன்ற மனநலப் பாதிப்புகளுக்கும், உடலில் வீக்கங்கள், மூட்டு வலிகள் போன்ற பல பாதிப்புகளையும் உருவாக்குகிறது.
அமெரிக்காவைச் சேர்ந்த ராண்டி கார்ட்னர் (Randy Gardner) என்ற இளைஞர்11 நாட்கள் மற்றும் 25 நிமிடங்கள் தூங்காமல் இருந்துஉலகிலேயே அதிக நேரம் தூங்காமல் இருந்தவர் என்ற சாதனையை 1964-ல் செய்தார்.
அதற்குப் பிறகு அவருக்கு ஏற்பட்ட உடல்நல பாதிப்புகளால், இதுபோன்ற சோதனைகள் ஆபத்தானவை எனக் கருதி அரசு அதை தடை செய்ததையும், இந்தச் சம்பவம் குறித்த விரிவான ஆய்வுக் கட்டுரைகள் மற்றும் அமெரிக்காவின் தேசிய மருத்துவ நூலகம் (PubMed), ஜர்னல் ஆஃப் அமெரிக்கன் மெடிக்கல் அசோசியேஷன் (JAMA) போன்ற அறிவியல் தளங்களிலும் தெரிந்து கொள்ளலாம்.
தூக்கம் என்பது வெறும் ஓய்வெடுப்பது மட்டுமல்ல, அது உடலின் ஒவ்வொரு செல்லிலும் நடக்கும் ஒரு மிகப்பெரிய அதிசயம்!
நண்பரே நன்றாக தூங்கி ஆரோக்கியமாக வாழ முயற்சி செய்வோம்.
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
எம். நூருல் அமீன்.