குறைந்த பணம் இருந்தாலும்
முதலீடு செய்வதற்கான சிறந்த வழிகள் என்னென்ன? Investments
ஏ.ஜி.வி ஸ்ரீநாத் விஜய், இணை நிறுவனர், https://gbvmfservices.in/, ARN-148604
பலர் முதலீடு (investment) செய்ய
வேண்டும் என்ற ஆசை இருந்தாலும், “என்னிடம் பெரிய தொகை இல்லை”, “முதலில் நிறைய பணம்
சேமித்த பிறகுதான் முதலீடு செய்ய வேண்டும்” என்று நினைக்கிறார்கள்.
உண்மையில் முதலீட்டின் வெற்றி,
ஆரம்பத்தில் எவ்வளவு பெரிய தொகை முதலீடு செய்கிறோம் என்பதில் இல்லை; தொடர்ந்து
எவ்வளவு சீராக, முறையாக முதலீடு செய்கிறோம் என்பதில்தான் உள்ளது.
பெரிய செல்வங்களை (Wealth)
உருவாக்கிய பலரும் சிறிய தொகையிலிருந்தே தொடங்கியவர்கள். எனவே, குறைந்த பணம்
இருப்பது முதலீட்டைத் தள்ளிப்போடுவதற்கான காரணமாக இருக்கக் கூடாது.
முதலீட்டில் தொகையை விட பழக்கம்
முக்கியம்:
மாதம் ரூ.500, ரூ.1,000 அல்லது
ரூ.2,000 அல்லது ரூ.3,000 மட்டுமே முதலீடு செய்ய முடிந்தாலும் அது ஒரு நல்ல
தொடக்கமாகும். சிறிய தொகை தொடர்ந்து முதலீடு செய்யப்பட்டால், காலப்போக்கில் கூட்டு
வளர்ச்சியின் பலனால் பெரிய செல்வமாக மாறும்.
உதாரணமாக, மாதம் ரூ.2,500
முதலீடு செய்து வருடத்திற்கு சராசரியாக 13% வளர்ச்சி கிடைத்தால், 30
ஆண்டுகளுக்குப் பிறகு முதலீட்டு மதிப்பு பல மடங்கு அதிகரிக்கும். அதாவது மொத்தம்
செய்யப்பட்ட தொகை ரூ.9 லட்சம் என்பது ரூ.1.09 கோடியாக பெருகி இருக்கும். அதாவது 25
வயதில் வேலைக்கு சேரும் ஒருவர் மாதம் ரூ.2,500 முதலீடு செய்து வந்தால், அவரின் 55
வது வயதில் ரூ.1 கோடி சேர்த்திருப்பார்.
இதனால் முதலீட்டில் முக்கியமானது
“எவ்வளவு தொகை?” என்பது அல்ல; “எவ்வளவு காலம் (Time)?” என்பதே ஆகும்.
முதலீட்டிற்கு முன் அவசர கால
நிதி அவசியம்:
முதலீட்டைத் தொடங்குவதற்கு முன்
எதிர்பாராத செலவுகளுக்காக அவசர கால நிதி வைத்திருக்க வேண்டும். வேலை இழப்பு,
மருத்துவச் செலவு அல்லது குடும்பத் தேவைகள் போன்ற சூழ்நிலைகளில் இந்த நிதி,
பாதுகாப்பாக இருக்கும்.
பொதுவாக 6 முதல் 12 மாத குடும்பச்
செலவுகளுக்குச் சமமான தொகையை பாதுகாப்பான சேமிப்பில் வைத்திருப்பது நல்லது.
அட்டவணை 1: பரிந்துரைக்கப்படும்
அவசர கால நிதி..!
|
மாதச் செலவு |
பரிந்துரைக்கப்படும்
அவசர கால நிதி |
|
ரூ.20,000 |
ரூ.1.2 லட்சம்
– ரூ.2.4 லட்சம் |
|
ரூ.30,000 |
ரூ.1.8 லட்சம்
– ரூ.3.6 லட்சம் |
|
ரூ.50,000 |
ரூ.3 லட்சம்
– ரூ.6 லட்சம் |
குறைந்த தொகையில் தொடங்க ஏற்ற
முதலீட்டு வழிகள்:
இன்று முதலீடு செய்வதற்கு பெரிய
தொகை தேவையில்லை. பல முதலீட்டு வாய்ப்புகள் மிகச் சிறிய தொகையிலேயே தொடங்க
அனுமதிக்கின்றன.
அட்டவணை 2: குறைந்தபட்ச
முதலீட்டுத் தொகை:
|
முதலீட்டு வகை |
தொடங்க வேண்டிய
குறைந்தபட்ச தொகை |
ஏற்றவர்கள் |
|
வங்கி தொடர் வைப்பு
(ஆர்.டி) |
ரூ.100 – ரூ.500 |
பாதுகாப்பு விரும்புபவர்கள் |
|
பங்குச் சந்தை
மியூச்சுவல் ஃபண்ட் மாதாந்திர முதலீடு (எஸ்.ஐ.பி) |
ரூ.500 முதல் |
நீண்ட கால முதலீட்டாளர்கள் |
|
கடன் சந்தை மியூச்சுவல்
ஃபண்ட் மாதாந்திர முதலீடு |
ரூ.500 முதல் |
குறுகிய கால முதலீட்டாளர்கள் |
|
அரசின் சிறு சேமிப்பு
திட்டங்கள் |
ரூ.250 முதல் |
நிலையான வருமானம்
விரும்புபவர்கள் |
|
தங்க சேமிப்பு
மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் |
ரூ. 500 முதல் |
தங்கத்தில் முதலீடு
செய்ய விரும்புபவர்கள் |
|
பங்குச் சந்தை |
சிறிய தொகை -
மாறுபடும் |
ரிஸ்க் ஏற்கத்
தயாரானவர்கள் |
வருமானம் அதிகரித்தால்
முதலீட்டையும் அதிகரிக்க வேண்டும்..!
பலர் மாதம் ரூ.1,000 முதலீடு
செய்யத் தொடங்கி, பல ஆண்டுகள் அதே தொகையைத் தொடர்கிறார்கள். இது ஒரு தவறு.
வருமானம் உயரும்போது முதலீட்டுத் தொகையையும் உயர்த்த வேண்டும்.
உதாரணமாக, ஒவ்வொரு ஆண்டும்
முதலீட்டை 5% அல்லது 10% உயர்த்தினால், நீண்ட காலத்தில் உருவாகும் செல்வம்
குறிப்பிடத்தக்க அளவில் அதிகரிக்கும்.
கடனை அடைப்பதும் ஒரு முதலீடே..!
கடன் அட்டை (கிரெடிட் கார்டு)
நிலுவை, அதிக வட்டி தனிநபர் கடன் போன்றவற்றை முதலில் அடைப்பது முக்கியம். ஏனெனில்
30% அல்லது 40% வட்டி செலுத்திக்கொண்டே முதலீடு செய்வது பயனற்றதாக இருக்கும்.
அதிக வட்டி கடன்களை குறைப்பது,
உறுதியான வருமானத்தைப் பெறுவதற்கு சமமானது.
முதலீட்டில் தவிர்க்க வேண்டிய
தவறுகள்:
குறைந்த பணம் வைத்திருப்பவர்கள் விரைவில்
பணக்காரராக வேண்டும் என்ற ஆசையில் அதிக ரிஸ்க்கான திட்டங்களில் பணத்தை முதலீடு
செய்வது வழக்கமாக உள்ளது.
பின்வரும் தவறுகளைத் தவிர்க்க
வேண்டும்:
· ஒரே
இடத்தில் முழுப் பணத்தையும் முதலீடு செய்தல்.
· நண்பர்கள்
சொன்னதற்காக முதலீடு செய்தல்.
· விரைவான
லாபத்தை மட்டுமே நோக்கமாகக் கொள்ளுதல்.
· அவசர
கால நிதி இல்லாமல் முதலீடு செய்தல்.
· காப்பீட்டையும்
முதலீட்டையும் ஒன்றாகக் கருதுதல்.
குறைந்த வருமானம்
உள்ளவர்களுக்கான எளிய முதலீட்டு திட்டம்
ஒரு மாத வருமானம் ரூ.30,000
என்று வைத்துக்கொண்டால்:
|
பயன்பாடு |
சதவீதம் |
|
குடும்பச்
செலவுகள் |
50% |
|
அவசர கால
நிதி சேமிப்பு |
10% |
|
முதலீடு |
30% |
|
காப்பீடு
மற்றும் பிற தேவைகள் |
10% |
இந்த முறையான அணுகுமுறை நீண்ட
காலத்தில் நல்ல நிதி அடித்தளத்தை உருவாக்கும்.
பொறுமையே முதலீட்டின் வெற்றி:
முதலீட்டில் வெற்றி பெறுவதற்கு
அதிக வருமானம் தேவை இல்லை. மாறாக, ஒழுங்கு, பொறுமை மற்றும் தொடர்ச்சியான முதலீடு
ஆகியவை தேவை. சிறிய தொகைகளில் தொடங்கிய முதலீடுகள் கூட பல ஆண்டுகளுக்குப் பிறகு
பெரிய செல்வமாக மாற முடியும்.
குறைந்த பணம் இருப்பது
முதலீட்டைத் தொடங்க முடியாததற்கான காரணம் அல்ல. இன்று ரூ.500 அல்லது ரூ.1,000
முதலீடு செய்யத் தொடங்கும் ஒருவர், நாளை நிதிச் சுதந்திரத்தை அடையக்கூடியவராக
மாறலாம். முதலீட்டின் ரகசியம் பெரிய தொகையில் இல்லை; தொடர்ந்து முதலீடு
செய்வதிலும், காலத்தின் சக்தியைப் பயன்படுத்துவதிலும் உள்ளது. சிறிய விதையாக தொடங்கும்
முதலீடு, பல ஆண்டுகளுக்குப் பிறகு நிழல் தரும் பெரிய மரமாக வளரக்கூடும்
.
கூடுதல் விவரம் மற்றும் முதலீட்டுக்கு
ஏ.ஜி.வி ஸ்ரீநாத் விஜய், இணை நிறுவனர், https://gbvmfservices.in/, ARN-148604
குவாலிஃபைடு பர்சனல் ஃபைனான்ஸ் புரபஷனல் (QPFP) ஆவார். இவரின் தந்தையும்
மியூச்சுவல் ஃபண்ட் விநியோகஸ்தர் ஆவார். பொள்ளாச்சியை சேர்ந்த இவர் சுமார் 2,000 தனிநபர்களுக்கு
நிதிச் சேவை அளித்து வருகிறார்.
நாணயம் விகடன் இதழில் வெளியான ஏ.ஜி.வி ஸ்ரீநாத் விஜய் கட்டுரைகளை படிக்க https://bit.ly/4uj1I1Y
எண் 33, எஸ்.வி. டவர்ஸ்,
நியூ ஸ்கீம் ரோடு,
பொள்ளாச்சி – 642 001,
தமிழ்நாடு.
திங்கட்கிழமை – சனிக்கிழமை
காலை 10:00 மணி – மாலை 06:30 மணி.
Disclaimer:
மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு சந்தை ரிஸ்க்களுக்கு உட்பட்டது. முதலீடு செய்யும் முன் திட்டம் சார்ந்த அனைத்து ஆவணங்களையும் சரியாகப் படித்துப் பார்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. மியூச்சுவல் ஃபண்ட் மூலம் நிச்சயமான ஆதாயங்கள் கிடைக்கும் என்பதற்கு உத்தரவாதம் கிடையாது.
