பகல் தூக்கம் தேவையா?
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
எம். நூருல் அமீன்.
* தூக்கம் ஒவ்வொருவரின் உடலிலும் ஒவ்வொரு செல்லிலும் நடக்கும் ஒரு மிகப்பெரிய அதிசயம்! தூக்கத்தை முறையாக பின்பற்றி வாழா விட்டால் நாம் யாராக இருந்தாலும் எந்த பதவியில் நாம் இருந்தாலும் ஆரோக்கியம் நம்மை விட்டு போய்விடும்.
* தூக்கம் ஆரோக்கியத்தின் அடையாளம்.அது வெறும் ஓய்வை மட்டும் தருவதில்லை இரவு நேர தூக்கத்தில் நாம் பெறுகின்ற பலனுக்கு மாற்றாகாது பகலில் தூங்குகின்ற தூக்கம், "குறுகிய நேர புத்துணர்ச்சிக்கு "(Quick Refresh) மட்டுமே பகல் தூக்கம் உதவும்.
மதியம் 15 முதல் 30 நிமிடங்கள் வரை தூங்குவதே 'பவர் நேப்' (Power Nap) என்று சொல்லப்படும் பகல் தூக்கமாகும். அது மதியம் 1 மணி முதல் 3 மணிக்குள் 20-30 நிமிடங்கள் தூங்கி புத்துணர்ச்சி பெறுவதை குறிப்பதாகும்
பகலில் தூங்கும் பொழுது உடல் ஆழ்ந்த தூக்கத்தை (Deep sleep) எட்டாமலும் தன்னைத்தானே புதுப்பித்துக் கொள்ளும் (Repair and recover) பணியையும் முழுமையடைய செய்யாமலும் ஆகிவிடுகிறது
உடலின் சுழற்சிக்கு (Circadian Rhythm) இரவு நேரத் தூக்கமே முக்கியமானது. இரவில் பெற வேண்டிய ஆழ்ந்த உறக்கத்திற்கு பகல் தூக்கம் மாற்றாகாது என்பதை மறக்க கூடாது.
"பகல் தூக்கம் படுக்கையில் தள்ளும்" என்பது பிரபலமான பழமொழி. இதன் பொருள், பகலில் அதிகமாகத் தூங்குவது உடல் நலத்தைக் கெடுத்து, ஒருவரை நோயாளியாகவே மாற்றிவிடும் என்பதாகும்.
மனித உடல் பகலில் விழிப்புடனும், இரவில் தூக்கத்துடனும் இருக்க வடிவமைக்கப்பட்டுள்ளது. பகலில் நீண்ட நேரம் தூங்குவது இயற்கைச் சுழற்சியைக் குலைத்து, உடலின் மெட்டபாலிசம் (Metabolism) என்ற வளர்சிதை மாற்றத்தைச் சீர்குலைக்கிறது. ரத்த ஓட்டத்தை மந்தமாகி, உடல் பருமன் மற்றும் தசைகள் பலவீனமடைதல் போன்ற சிக்கல்களை (Disrupted Circadian Rhythm) உண்டாக்கி விடுகின்றன.
American Heart Association மூலம் பகலில் ஒரு மணி நேரத்திற்கு மேல் அதிக தூங்கும் பழக்கம் உள்ளவர்களுக்கு, இதயம் தொடர்பான நோய்கள் மற்றும் பக்கவாதம் (Stroke) ஏற்படுகின்ற அபாயம் 30% முதல் 40% வரை அதிகமாக இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது.
பகலில் நீண்ட நேரம் தூங்குவது வளர்சிதை மாற்றக் கோளாறுகளை (Metabolic Syndrome) உண்டாக்கி, உடலில் இன்சுலின் எதிர்ப்புத் திறனை (Insulin resistance) அதிகரித்து டைப் 2 நீரிழிவு நோய் மற்றும் இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிப்பதற்கான நேரடித் தொடர்பைக் கொண்டிருப்பதாக Journal of the American Diabetes Association- ஆய்வும் தெரிவிக்கின்றன.
மனித உடல் 'சர்க்காடியன் ரிதம்' எனப்படும் உயிரியல் கடிகாரத்தால் கட்டுப் படுத்தப்படுகிறது. பகலில் (நீண்ட நேரம்) தூங்குவது தூக்கச் சுழற்சி சீர்குலைவால் (Circadian Rhythm Disruption) மெலடோனின் ஹார்மோன் சுரப்பை பாதிக்க செய்து,தூக்கமின்மைக்கு (Chronic Insomnia) வழிவகுக்கும் என Sleep Medicine Reviews இதழ் குறிப்பிடுகிறது.
இரவு நேரப் பணியில் (Night shift) இருப்பவர்கள் பகலில் தூங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டால் பகலில் தூங்கும்போது, அறையின் சத்தத்தைக் குறைத்து, ஜன்னல்களை திரைகளால் (Blackout curtains) மூடி, இருட்டான சூழலை உருவாக்கி தூங்கினால் "குறுகிய நேர புத்துணர்ச்சிக்குமட்டுமே " (Quick Refresh) அது பயன்படும்.
ஆரோக்கியமாகவும், ஆணைந்தமாகவும் நாம் வாழ இரவு தூக்கத்தை முறைப்படுத்துவோம்.தூக்கம் ஓய்வுக்கு மட்டும் இல்லை. ஆரோக்கியத்தின் அடிப்படை அது என்பதை புரிந்து வாழ்வோம்.
நேசத்துடன்,
எம். நூருல் அமீன்.
Thanks and Warm Regards
S. Chitra B.Com