அமெரிக்காவில் இருந்து அனுப்பும் பணத்துக்கு வரி குறைப்பு
அமெரிக்காவில் வாழும் வெளிநாட்டினர் தங்களுடைய சொந்த நாடுகளுக்கு அனுப்பும் பணத்திற்கு 5 சதவீதம் வரி விதிக்கப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அறிவித்தார்.
இந்த புதிய அறிவிப்பு இந்திய பொருளாதாரத்தை பாதிக்கும் என கூறப்பட்டது.
அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் இந்த மசோதா தொடர்பாக விவாதிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் சொந்த நாட்டுக்கு அனுப்பும் பணத்திற்கான வரி 3.5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.
இது அடுத்த ஆண்டு (2026) ஜனவரி 1-ந்தேதி முதல் நடைமுறைக்கு வரும்.