மொத்தப் பக்கக்காட்சிகள்

பங்குச் சந்தை எந்த திசையில் சென்றாலும் ரிஸ்க் குறைவாக உள்ள ஃபண்ட்

பங்குச் சந்தை எந்த திசையில் சென்றாலும் ரிஸ்க் குறைவாக உள்ள ஃபண்ட்

குறுகிய கால ஏற்ற இறக்கத்திற்கு ஏற்ற ஆர்பிட்ரேஜ் ஃபண்ட்கள்

பங்குச் சந்தையின் அதிக ஏற்ற இறக்கம் காரணமாக, முதலீட்டாளர்களின் புதுப்பிக்கப்பட்ட ஆர்வம், ஆர்பிட்ரேஜ் ஃபண்ட்கள் (Arbitrage funds) பக்கம் திரும்பி உள்ளது. முதலீட்டாளர்கள், தங்களது குறுகிய கால உபரி  நிதியை (Short-term Surplus) குறைவான  இடர்ப்பாடு, குறிப்பிட்ட இடைவெளியில் வருமானம் மற்றும் வரிச் சலுகை ஆகியவற்றுடன் மூலதன ஆதாய அதிகரிப்பை (Capital Appreciation) நோக்கமாகக் கொண்ட, இந்த  ஆர்பிட்ரேஜ் ஃபண்ட்களில்  முதலீடு செய்கிறார்கள்.  பங்குச் சந்தை சார்ந்த முதலீட்டுக் கலவையை  (Equity portfolio) முழுமையாகப் பாதுகாப்பதாக (Hedge) ஆர்பிட்ரேஜ் வாய்ப்புகள் உள்ளன. இது, பங்குச் சந்தை எந்த திசையில் சென்றாலும்  இடர்ப்பாட்டை (Risk) குறைக்கிறது.

யூ.டி.  ஆர்பிட்ரேஜ் (UTI Arbitrage Fund) என்பது 2006 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட, ஆரம்பக் கட்ட ஃபண்ட்களில் ஒன்றாகும். இப்போது வெவ்வேறு பங்குச் சந்தை சுழற்சிகளில் 13 ஆண்டுக் கால சாதனை படைத்துள்ளது. இந்த ஃபண்ட் அதன் வழக்கமான மற்றும் நேரடி திட்டங்களின் (Regular and Direct plans) கீழ் மாதம்தோறும் டிவிடெண்ட் வழங்கியுள்ளதோடு நல்ல கண்ணியமான செயல்பாட்டையும் வெளிப்படுத்தியுள்ளது.


இந்த ஃபண்ட் அதன் வழக்கமான குரோத் ஆப்ஷனின் கீழ் தினசரி அடிப்படையில் 6 மாத காலத்தில் சராசரியாக 6.40% (Rolling returns) வருமானம் கொடுத்துள்ளது (ஜனவரி 2015 முதல் ஜனவரி 2020 வரையிலான கால கட்டத்தில்). அதே காலகட்டத்தில், இந்த ஃபண்ட்  6 மாத தினசரி  ரோலிங் வருமானம் அடிப்படையில் 4.95% (குறைந்தபட்சம்) முதல் 9.37% (அதிகபட்சம்) வரையில், எதிர்மறை வருவாய் (Negative returns.) எதுவும் இல்லாமல் வருமானத்தைக் கொடுத்திருக்கிறது.

ஆண்டு கூட்டு வளர்ச்சி (compounded annual growth) அடிப்படையில், இந்த  ஃபண்ட் ஓராண்டுக் காலத்தில் (ஜனவரி 31 2020 நிலவரப்படி) அதன் வழக்கமான திட்டத்தின் கீழ் 6.18%, நேரடி திட்டத்தில் 6.69% வருமானம் வழங்கியுள்ளது. இதர கடன் சந்தை சார்ந்த ஃபண்ட்களுடன் ஒப்பிடும்போது, இந்த ஃபண்ட் பங்குச் சந்தை சார்ந்த ஃபண்ட்களுக்கு உரிய வரிக்கான சலுகைகளை (மூலதன ஆதாய வரி மற்றும் டிவிடெண்ட் விநியோகம்) பெறுகிறது


மாதம் தோறும் டிவிடெண்ட் வழங்கியது குறித்த நியாயமான வரலாற்றை இந்த ஃபண்ட் கொண்டுள்ளது. குறிப்பிட்ட கால வருமானமாக முதலீட்டாளர்கள் டிவிடெண்ட் பெற்றது, தங்கள்  நிதித் தேவைகளை ஒரு முழுமையான (holistic) முறையில் திட்டமிட உதவும். இது தவிர நிகர சொத்து மதிப்பு (NAV) அதிகரிப்பு முதலீட்டாளரின் ஒட்டுமொத்த வருமானத்தையும்  அதிகரிக்கிறது.

கடன் பிரச்சினைகள் மற்றும் பங்குச் சந்தையின்  அதிக ஏற்ற இறக்கம் ஆகியவற்றின் காரணமாக அதிக இடர்ப்பாடுள்ள தற்போதைய சூழலில், ஆர்பிட்ரேஜ் ஃபண்ட்கள் குறுகிய காலத்துக்கு முதலீடு செய்ய, ஒப்பீட்டளவில் பாதுகாப்பான முதலீட்டு வழியாக இருக்கக் கூடும். பங்குச் சந்தை சார்ந்த முதலீட்டுக் கலவையை முழுமையாகப் பாதுகாப்பதாகவும் அதிக வருமானத்தைப் பெற ஆர்பிட்ரேஜ் வாய்ப்புகளும்  உள்ளன.

கடன் சந்தை சார்ந்த முதலீடுகளில், நிதி மேலாளர் (Fund manager), 175-250 நாட்கள் குறைந்த முதிர்வு காலத்துடன் கூடிய  தரமான கடன் திட்டங்களில் (AAA, A1+ போன்ற தரக்குறியீடு) கவனம் செலுத்தி வருகிறார். யூ..டி. ஆர்பிட்ரேஜ் ஃபண்ட், அதன் சாதனைப் பதிவின் அடிப்படையில், முதலீட்டாளர்களுக்கு ஒரு நல்ல முதலீட்டு வாய்ப்பாக இருக்கக்கூடும்

குறிப்பிடத்தக்க வகையில், இந்த ஃபண்டின் நிர்வகிக்கப்படும் நிதி அளவு கணிசமாக வளர்ந்துள்ளது, அதாவது  ஜனவரி 2019 இல் ரூ. 1,319  கோடியாக  இருந்த, இதன் நிர்வகிக்கும் சொத்து மதிப்பு ( AUM),  2020 ஜனவரி 31 ஆம் தேதியில் ரூ.  3,422  கோடியாக  அதிகரித்துள்ளது. ***
Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - மாதம்

அதிக பார்வை - 365 நாள்கள்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

தனி நபர் நிதி மேலாண்மை மற்றும் வரி திட்டமிடல் கூட்டம் சென்னை 2024 ஏப்ரல் 28 அனுமதி இலவசம் PERSONAL FINANCIAL PLANNING & TAX PLANNING

 PERSONAL FINANCIAL PLANNING & TAX PLANNING தனி நபர் நிதி மேலாண்மை மற்றும் வரி திட்டமிடல் கூட்டம் சென்னை 2024 ஏப்ரல் 28 அனுமதி இலவசம்  ச...