அற்புத உணர்வு.
*******************
எம். நூருல் அமீன்
பதற்றதத்துடன் ஓடிக் கொண்டிருக்கும் நாம், நம்மிடம் இருப்பவைகளை ஒரு நாளில் ஒரு சில நிமிடங்களாவது நினைத்திருக்கிறோமா?
கிடைக்காததை நினைத்து வருந்துகின்ற நாம் கிடைத்திருப் பவைகளுக்கு நன்றி செலுத்தி இருக்கின்றோமா?
நிம்மதியை தருகின்ற
ஆரோக்கியமான உடல் நமக்கு இருக்கிறதே!
மூச்சு விடுவதற்கு தேவையான காற்றும் பசிக்கு உணவும், தாகத்திற்கு நீரும் கிடைத்து கொண்டு இருக்கிறதே!
இவைகள் சாதாரணமாக நமக்கு தோன்றலாம். ஆனால், உலகில் கோடிக்கணக்கான மனிதர்களுக்கு இத்தகைய அடிப்படைகள் கூட கனவாகவே இருக்கிறதே!
கிடைக்காததை நினைத்து வருந்துகின்ற நாம் கிடைத்திருக்கும் மேன்மையான வாழ்விற்கு நன்றி செலுத்தி
வாழ்கின்றோமா?
நன்றி வெறும் வார்த்தை இல்லை, அது அற்புத உணர்வு.
நமக்குக் கிடைத்திருப்பதை எண்ணி நன்றி செலுத்தும் போது, நம் மனதில் அது மன நிறைவை தருவதாகவும் இருக்கிறது.
"மன நிறைவு"
நிம்மதியையும் மகிழ்ச்சியையும் அளிக்கின்றது.
வாழ்வை மாற்றும் அதிசயமே நன்றி சொல்லுதலே!
வாழும் நாட்களில் சில நிமிடங்களாவது நன்றி கூறுவோம்.
இருப்பதை எண்ணி மகிழ்வதே அர்த்தமுள்ள மகிழ்ச்சி.
நன்றியுணர்வோடு வாழும் வாழ்க்கை, எப்போதும் வசந்தமாகவே இருக்கும்.
நம்மிடம் உள்ள அனைத்தும் விலை மதிப்பற்றவையே!.
மருத்துவ உலகம் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகளுக்காகக் கணக்கிடும் தோராயமான சந்தை மதிப்புகளைப் பார்க்கும் போது, நாம் எவ்வளவு மதிப்பு மிக்க செல்வத்தை (இலவசமாக) பெற்று வாழ்கின்றோம் என்பது புரிய வரும்.

ஆரோக்கியம் இல்லாத நோயாளிகள்,படுகின்ற அவஸ்தைகளை பார்க்கும் போதும் அல்லது கேட்கும் போதும் தான் ஆரோக்கியத்தின் அருமை நமக்கு தெரிகிறது.
மருத்துவச் சந்தையில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகளுக்காக
உறுப்புகள் பெறுவதற்காக
நிர்ணயம் செய்யப்படும் தோராயமான மதிப்பை தெரிந்து கொண்டாலே
உடலின் மதிப்பு நமக்கு தெரியவரும்
பல இலட்ச மதிப்புள்ள அற்புதம் நிறைந்த இந்த உடல், நமக்கு கிடைத்து இருக்கிறதே!
ஒவ்வொரு நாளும் நாம் இனிமேலாவது இவைகளை பாதுகாப்போம் மனதார இவைகளுக்கு நன்றி கூறுவோம்.
நன்றி என்பது வெறும் சடங்கு அல்ல, அது உணர்ந்து செயல் பட வைக்கும் அற்புத உணர்வு.
அந்த உணர்வை ,நன்றியை
நன்றியுடன் பாதுகாப்போம்.
நேசத்துடன்,
எம். நூருல் அமீன்,
THAHIRA Acupuncture clinic
SOUTH INDIAN INSTITUTE,
AMEEN'S Life Coach,Chennai.
Call : +91 93606 91377