நடப்பு நிதி ஆண்டில்
போட்டித்தன்மை,
அனைவருக்குமான வளர்ச்சியில்
கவனம் செலுத்த
இந்திய தொழில் கூட்டமைப்பின்
தெற்கு மண்டலம் திட்டம்
----------
தென் இந்தியாவின் தொழில்
மற்றும் ஏற்றுமதி வளர்ச்சியில் தமிழ்நாடு தொடர்ந்து முதன்மை மாநிலமாக திகழும் என
உறுதி
சென்னை, 02 ஜூன் 2026- இந்திய
தொழில் கூட்டமைப்பின் தெற்கு
மண்டலம், வளர்ச்சி, மீள்தன்மை, அனைவரையும்
உள்ளடக்கிய வளர்ச்சி, நிலைத்தன்மை
மற்றும் நம்பிக்கை ஆகியவற்றின் மூலம் தென் இந்தியாவின் போட்டித்தன்மையை
அதிகரிப்பதில் கவனம் செலுத்தும் என்று அதன் தெற்கு மண்டலத் தலைவரும், டான்போஸ்
இந்தியா நிறுவனத்தின் தலைவருமான பி. ரவிச்சந்திரன் இன்று சென்னையில் நடந்த தனது
முதல் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
இந்தியாவின் பொருளாதார
முன்னேற்றத்தில் தென் இந்தியா தொடர்ந்து மிகச் சிறந்த பங்களிப்பை வழங்கி
வருவதாகவும், நாட்டின்
மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 32 சதவீதமும், நாட்டின்
உற்பத்தி மதிப்பில் 30 சதவீதமும்
கொண்டுள்ளது என்றும் ரவிச்சந்திரன் தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில், 2024-25
நிதியாண்டில், இதன்
ஒருங்கிணைந்த நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியானது ரூ. 57.16 லட்சம் கோடியாக
உள்ளதன் மூலம் இது ஒரு முக்கிய வளர்ச்சி இயந்திரமாக உருவெடுத்துள்ளது என்றும், இந்தியாவின்
மொத்த சேவைகள் உற்பத்தியில் 40 சதவீதத்தை தென்னிந்தியா வழங்குகிறது என்றும் அவர்
குறிப்பிட்டார்.
2026-27-ம் ஆண்டிற்கான இந்திய
தொழில் கூட்டமைப்பின் தெற்கு மண்டலத்தின் தலைவராக ரவிச்சந்திரன் பொறுப்பேற்றுள்ளார்.
சையண்ட் லிமிடெட் நிறுவனத்தின் நிர்வாக துணைத் தலைவர் மற்றும் இயக்குனரான கிருஷ்ணா
போதனபு துணைத் தலைவராக பொறுப்பேற்றுள்ளார். 2026-27-ம் ஆண்டிற்கான முக்கியத்
திட்டங்களை விளக்கி ரவிச்சந்திரன் பேசுகையில், “தென்னிந்தியாவின்
போட்டித்தன்மையை துரிதப்படுத்துதல்: வளர்ச்சி, மீள்தன்மை, உள்ளடக்கம், நிலைத்தன்மை, நம்பிக்கை” என்ற
கருப்பொருளை மையமாக வைத்து செயல்பட இருக்கிறோம். இந்த ஆண்டு, உற்பத்தி
மற்றும் சிறு, குறு, நடுத்தர
தொழில்கள் வளர்ச்சி, டிஜிட்டல்
மாற்றம் மற்றும் செயற்கை நுண்ணறிவு, பசுமை மாற்றம் மற்றும் எரிசக்தி
பாதுகாப்பு, சிறந்த
திறமைகளை உருவாக்குதல், விவசாய
சங்கிலித் தொடர் மற்றும் உணவுப் பதப்படுத்துதல், உள்கட்டமைப்பு மற்றும்
போக்குவரத்து, உலகளாவிய
சந்தைகள் மற்றும் தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்களை பயன்படுத்துதல், சுற்றுலா மற்றும்
விளையாட்டுப் பொருளாதாரம் ஆகியவை முக்கிய கவனம் செலுத்தும் துறைகளாக இருக்கும்.
கடந்த ஆண்டில் தெற்கு மண்டலம்
செய்த பணிகளைச் சுட்டிக்காட்டிய அவர், தொழில்துறை பிரச்சினைகள், ஆலோசனைகள்
மற்றும் அதற்கான தீர்வுகளைக் கண்டறிய தெற்கு மண்டலம் முழுவதும் 56 குழுக்கள்
அமைக்கப்பட்டன என்றார். மாநில அரசுகளிடம் 159 கோரிக்கைகள் வழங்கப்பட்டு
உள்ளது, அவற்றில் 41 கோரிக்கைகள்
முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ அரசால் ஏற்கப்பட்டுள்ளன. மேலும், சிறு, குறு தொழில் கொள்கைகள், எளிதாக
தொழில் செய்யும் சூழ்நிலை, நிலைத்தன்மை
மற்றும் பணியாளர் மேம்பாடு ஆகியவற்றுக்கு ஆதரவாக 60-க்கும் மேற்பட்ட உயர்மட்ட
கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன என்றும் அவர் கூறினார்.
அனைத்து தென் மாநிலங்களிலும்
தொழில்துறைக்கும் அரசாங்கத்திற்கும் இடையிலான தொடர்பை இந்திய தொழில் கூட்டமைப்பின்
தெற்கு மண்டலம் தொடர்ந்து வலுப்படுத்தும் என்றும் கூறினார். தமிழ்நாட்டில், கடைகள்
மற்றும் நிறுவனங்கள் சட்டத்தில் திருத்தங்கள் செய்து 24 மணி நேரமும் செயல்பட
அனுமதிப்பது, செமிகண்டக்டர்
உற்பத்தி மையங்கள், தொழில்நுட்ப
ஜவுளிப் பூங்காக்கள் மற்றும் மின்சார வாகனங்களுக்கான சார்ஜிங் வசதிகளை மேம்படுத்துவது
ஆகியவற்றிலும் நாங்கள் கவனம் செலுத்தி வருகிறோம். சுகாதாரம், கல்வி, திறன்
மேம்பாடு, வாழ்வாதாரம், தண்ணீர்
மற்றும் அங்கன்வாடி மேம்பாடு ஆகிய துறைகளில் இந்திய தொழில் கூட்டமைப்பு செய்துள்ள
சமூகப் பொறுப்புணர்வு பணிகளையும் அவர் சுட்டிக்காட்டினார். குறிப்பாக, தமிழக அரசுப்
பள்ளிகளில் அமைக்கப்பட்ட STEM ஆய்வகங்கள்
மற்றும் தென் மாநிலங்கள் முழுவதும் நீர்நிலைகளை சீரமைக்கும் திட்டங்களை அவர்
குறிப்பிட்டார்.
தமிழ்நாடு குறித்துப் பேசிய
அவர், இந்தியாவிலேயே
பொருளாதார ரீதியாக மிகவும் வலுவான மாநிலங்களில் ஒன்றாகத் தமிழ்நாடு திகழ்கிறது
என்றார். 2024-25 நிதியாண்டில் தமிழ்நாட்டின் உண்மையான மாநில மொத்த உள்நாட்டு
உற்பத்தி ரூ. 17.32 லட்சம் கோடியாகப் பதிவாகியுள்ளது. இது தென்னிந்தியாவிலேயே
அதிகபட்சமாகும். மேலும் 2025-ம் ஆண்டில் இதன் சரக்கு ஏற்றுமதி 53.9 பில்லியன்
டாலராக இருந்து, தென்னிந்தியாவின்
முன்னணி ஏற்றுமதி மாநிலமாகத் தமிழ்நாடு விளங்குகிறது. தென்னிந்தியாவிலேயே
அதிகபட்சமாக ரூ.3.77 லட்சம் கோடி அளவிலான உற்பத்தி மதிப்பையும் இம்மாநிலம்
பதிவு செய்துள்ளது.
ஆட்டோமொபைல் மற்றும் மின்சார
வாகனங்கள், எலக்ட்ரானிக்ஸ், ஜவுளி
மற்றும் ஆயத்த ஆடைகள், தகவல்
தொழில்நுட்பம் மற்றும் உலகளாவிய திறன் மையங்கள், பாதுகாப்பு மற்றும் விண்வெளி, மற்றும்
துல்லியமான பொறியியல் எனப் பல்வேறு
வகையான தொழில்களைக் கொண்டிருப்பதே தமிழ்நாட்டின் பலம் என்று அவர் கூறினார்.
இந்தியாவின் இருசக்கர வாகனங்களில் 36 சதவீதமும், நான்கு சக்கர வாகனங்களில் 25
சதவீதமும், மின்சார
இருசக்கர வாகனங்களில் 60 சதவீதத்துக்கும் அதிகமானவையும் தமிழ்நாட்டில்தான்
உற்பத்தியாகின்றன. மேலும், 2024-25
நிதியாண்டில் 14.65 பில்லியன் டாலருக்கு எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் ஏற்றுமதி செய்து
சாதனை படைத்துள்ளது.
தமிழ்நாட்டை ஒரு உலகளாவிய
பிராண்டாக வலுப்படுத்துதல், 2032-ம்
ஆண்டுக்குள் முன்னணி திறமையாளர்களின் மையமாக உருவாக்குதல், இரண்டாம்
கட்ட நகரங்களை
வேலைவாய்ப்பு மையங்களாக
மாற்றுதல், மின்துறையின்
செயல்திறனை மேம்படுத்துதல் ஆகியவை முக்கியப் பரிந்துரைகளில் அடங்கும். வர்த்தகப்
பிரச்சினைகளை விரைவாகத் தீர்ப்பது, சிறு, குறு
தொழில்களுக்கு எளிதாகக் கடன் கிடைப்பது, உற்பத்தியை விரிவாக்குதல்
மற்றும் ஏற்றுமதிக்குத் தயாராகுதல் போன்றவற்றுக்கு ஆதரவு அளிப்பதையும் இந்திய
தொழில் கூட்டமைப்பு தொடர்ந்து வலியுறுத்தும் என்றார்.
நவீன தொழில்நுட்பங்கள், சிறு குறு
தொழில்களின் விரிவாக்கம், உலகளாவிய
தொடர்புகள், செயற்கை
நுண்ணறிவைப் பயன்படுத்துதல், டிஜிட்டல் மாற்றம் மற்றும் நிலைத்தன்மை ஆகியவற்றின் மூலம்
தென்னிந்தியாவில் ஒரு புதிய உற்பத்தி வளர்ச்சி மாடலை உருவாக்குவதற்கான ஆற்றல் உள்ளது
என்றும் அவர் கூறினார்.
இந்தச் செய்தியாளர் சந்திப்பில் இந்திய தொழில்
கூட்டமைப்பின் தெற்கு மண்டல துணைத்
தலைவரும், சையண்ட்
லிமிடெட் நிறுவனத்தின் நிர்வாகத் துணைத் தலைவர் மற்றும் இயக்குனருமான கிருஷ்ணா
போதனபு உடன் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.