ஆழ்ந்த உறக்கத்திற்கு உதவும் எளிய 5 வழிகள்.
•••••••••••••••••••••••••••
எம். நூருல் அமீன்.
உடல் ஆரோக்கியத்திற்கு மிக முக்கியமானது தரமான உறக்கம் அந்த தூக்கத்தை மேம்படுத்த ஐந்து வழிமுறைகளை முயற்சி செய்வோம்.
நேரக் கட்டுப்பாடு (Consistency):
தினமும் இரவு ஒரே நேரத்தில் தூங்கச் செல்லுவோம்,அதிகாலையில் ஒரே நேரத்தில் எழுந்து கொள்வோம். இது நம் உடலின் உயிரியல் கடிகாரத்தைச் சீராக வைக்கும்.
டிஜிட்டல் டிடாக்ஸ் (Digital Detox):
தூங்குவதற்கு குறைந்தது ஒரு மணி நேரத்திற்கு முன்னதாகவே செல்போன், லேப்டாப் மற்றும் டிவியைப் பயன்படுத்துவதைத் தவிர்த்து விடுவோம். இல்லையென்றால், திரைகளில் இருந்து வெளிப்படும் நீல ஒளி நம் தூக்க ஹார்மோனான மெலடோனினைப் பாதிக்கும்.
இரவு உணவு : (Dinner)
உறங்குவதற்கு 2- மணி நேரத்திற்கு முன்னரே இரவு உணவை முடித்து விடுவோம்.அதிக எண்ணெய் மற்றும் காரமான பொருட்களைத் தவிர்ப்பது செரிமானத்தைச் சீராக்கி, அமைதியான தூக்கத்திற்கு உதவும்.
வயிறு முட்ட உண்பதைத் தவிர்த்து, எளிதில் செரிக்கக்கூடிய லேசான உணவுகளை உட் கொள்வதே சிறந்தது. உணவு உட்கொள்ளும் நேரத்தையும் சீராக வைப்பது செரிமான மண்டலத்திற்குச் சீரான ஓய்வைத் தரும் என்பதை மனதில் கொள்வோம்.
தண்ணீர் குடித்தல்: (Drinking water)
இரவில் அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டிய அவசியம் ஏற்படாமல் இருக்க, படுக்கைக்குச் செல்வதற்கு 1-2 மணி நேரத்திற்கு முன் தண்ணீர் குடிப்பதைச் சற்று குறைத்து கொள்வோம்.
அறை சூழல் (Ideal Environment):
நம் படுக்கையறை இருட்டாகவும், அமைதியாகவும், இதமான வெப்பநிலையுடனும் இருப்பதாக வைத்து கொள்வோம். ஆழ்ந்த உறக்கத்திற்கு அது மிக அவசியம்.
மனதை அமைதிப்படுத்துதல்: (Calming the mind)
தூங்கச் செல்வதற்கு முன் மன அமைதியுடன் இருப்போம் அல்லது சுவாசப் பயிற்சிகளை மேற்கொள்வோம்.
வாழ்க்கை முறை மாற்றமே ஆரோக்கியமான வாழ்வின் திறவுகோல்!
என்பதை மறக்காமல் இருப்போம். இன்று முதலாவது மாற்றத்தை மேற்கொள்வோம்.
A change in lifestyle is the key to a healthy life!
நேசத்துடன்,
M. NOORUL AMEEN,
Thahira Acupuncture Clinic,
AMEEN'S Life Coach, Chennai.
Cell : +91 93606 91377
Thanks and Warm Regards
S. Chitra B.Com