கிரெடாய் சென்னை ‘பேர்ப்ரோ
2026’ கண்காட்சியில்
ரூ.450 கோடி சொத்துகள்
விற்று சாதனை, 38,000-க்கும் மேற்பட்டோர் பார்வையிட்டனர்
சென்னை, பிப். 23, 2026: கிரெடாய் சென்னை,
கடந்த 20 முதல் 22 வரை சென்னை வர்த்தக மையத்தில் நடத்திய
18-வது பேர்ப்ரோ 2026 கண்காட்சி மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது. இந்த மூன்று நாள்
கண்காட்சியில் 460-க்கும் மேற்பட்ட ரூ.450 கோடி மதிப்பிலான சொத்துக்கள் பதிவு
செய்யப்பட்டு சாதனை படைத்துள்ளது.
ஆன்லைன் மற்றும் நேரடிப் பதிவுகள்
மூலம் 38 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இந்தக் கண்காட்சியைப் பார்வையிட்டுள்ளனர்.
இதன் மூலம் சுமார் ரூ.450 கோடிக்கும் மேல் அந்த இடத்திலேயே நேரடி விற்பனை
நடந்துள்ளது. இது சென்னையின் ரியல் எஸ்டேட் துறையில் உள்ள சிறப்பான
முன்னேற்றத்தைக் காட்டுகிறது. வீடு வாங்குவோர் மற்றும் முதலீட்டாளர்களின் அமோக
வரவேற்பு,
தென்னிந்தியாவின் மிகப்பெரிய மற்றும் நம்பகமான ரியல்
எஸ்டேட் கண்காட்சி பேர்ப்ரோ என்பதை இது மேலும்
உறுதிப்படுத்தியுள்ளது. கண்காட்சிக்குப் பிறகு பல இடங்களைப் பார்வையிட
முன்பதிவுகள் செய்யப்பட்டுள்ளதால், வரும் நாட்களில் மொத்த
விற்பனை எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதில் சென்னையைச் சேர்ந்த 80-க்கும் மேற்பட்ட முன்னணி கட்டுமான நிறுவனங்கள் கலந்துகொண்டு,
500-க்கும் மேற்பட்ட திட்டங்களை காட்சிப்படுத்தினர். இதில்
அடுக்குமாடி குடியிருப்புகள், காலி மனைகள், வில்லாக்கள் மற்றும் வணிக இடங்கள் என 57.2 மில்லியன் சதுர அடி பரப்பளவில்
52,586 வீடுகள்/இடங்கள் இடம்பெற்றன. இவற்றின் விலை ரூ.15 லட்சம் முதல் ரூ.15 கோடி
வரை இருந்தது. மேலும்,
15 தொழில் துறை கூட்டாளர்களும் பங்கேற்றனர்.
இது குறித்து கிரெடாய் சென்னை
தலைவர் முகமது அலி கூறுகையில்,
"பேர்ப்ரோ 2026 கண்காட்சிக்குக்
கிடைத்த வரவேற்பு எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. அதிக எண்ணிக்கையில்
வீடு வாங்குவோர் வந்து,
இந்த நிகழ்வை மாபெரும் வெற்றியடையச் செய்துள்ளனர். பாரத
ஸ்டேட் வங்கி எங்களின் வங்கிப் கூட்டாளராக இருந்து, கண்காட்சியில் சொத்துக்களைப் பதிவு செய்த வாடிக்கையாளர்களுக்குச் சிறப்பு
வட்டி விகிதங்கள் மற்றும் சிறப்பு சலுகைகளை வழங்கியதற்கு எங்கள் நன்றியைத்
தெரிவித்துக்கொள்கிறோம்" என்றார்.
கண்காட்சி ஆலோசகரும், கிரெடாய் சென்னையின் முன்னாள்
தலைவருமான எஸ். சிவகுருநாதன் கூறுகையில்: "மூன்று நாட்களில் 460-க்கும் மேற்பட்ட பதிவுகளைத் தாண்டி, ரூ.450 கோடிக்கும் மேல் விற்பனையை எட்டியிருப்பது எங்களுக்கு ஒரு மாபெரும்
மைல்கல்லாகும். இந்த எண்கள் வாங்குபவர்களின் நம்பிக்கையை மட்டுமின்றி, பேர்ப்ரோவின் வெளிப்படைத்தன்மையையும் நம்பகத்தன்மையையும் காட்டுகிறது."
என்றார்.
கண்காட்சி ஒருங்கிணைப்பாளர் மோதிஷ் குமார் கூறுகையில், "இந்த ஆண்டு சொத்துக் கண்காட்சிக்கு 38 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் வந்திருப்பது எங்களுக்கு மிகுந்த
ஊக்கமளிக்கிறது. அதைவிட முக்கியமாக, வீடு வாங்க வேண்டும் என்ற
தெளிவான நோக்கத்தோடு,
விவரங்களை நன்கு தெரிந்துகொண்டு வந்த வாடிக்கையாளர்களை அதிக
அளவில் காண முடிந்தது. இதன் விளைவாகவே இந்த சாதனையை நாங்கள் எட்டியுள்ளோம்."என்று
தெரிவித்தார்.