பள்ளிக்கரணை ராம்சர் பகுதியில் சதுப்புநிலப் பாதுகாப்பு –
சமூக மேம்பாட்டிற்கு இடையே சமநிலையான கட்டமைப்பு தேவை: ரியல் எஸ்டேட் துறை
வலியுறுத்தல்
·
பள்ளிக்கரணை ராம்சர்
தளத்தைச் சுற்றி முறையான அடையாளப்படுத்தல் மற்றும் உரிய நடைமுறைகளைப் பின்பற்றாமல்
கூடுதலாக 550 ஹெக்டேர் நிலம் சேர்க்கப்பட்டதாலும், அதனைத் தொடர்ந்து 1 கி.மீ சுற்றளவிற்கு
கட்டுமானப் பணிகளுக்குத் தடை விதிக்கப்பட்டதாலும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட
பட்டா உரிமையாளர்களும், சுமார் ₹71,500 கோடி மதிப்பிலான வணிக மற்றும் பொருளாதார நடவடிக்கைகளும் பாதிப்பு.
சென்னை,
07 ஜூலை 2026: சுற்றுச்சூழல் பாதுகாப்பில் தங்களுக்குள்ள கடமையை மீண்டும்
உறுதிப்படுத்தியுள்ள ரியல் எஸ்டேட் துறையினர், பள்ளிக்கரணை ராம்சர் பகுதியைச் சுற்றி விதிமுறைகளை அமல்படுத்தும் போது அரசு
சமநிலையான,
அறிவியல் பூர்வமான மற்றும் ஆலோசனை அடிப்படையிலான
அணுகுமுறையைக் கையாள வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.
முறையான அடையாளப்படுத்தல் மற்றும் உரிய நடைமுறைகளைப் பின்பற்றாமல் கூடுதலாக 550 ஹெக்டேர் நிலம் சேர்க்கப்பட்டதும், ராம்சர் பகுதியை
சுற்றியுள்ள 1 கி.மீ பரப்பளவில் கட்டுமானப் பணிகளுக்குத் தடை விதிக்கப்பட்டதும் ஒரு
லட்சத்திற்கும் மேற்பட்ட பட்டா நில உரிமையாளர்களைப் பாதித்துள்ளது என்று தொழில்
துறைப் பிரதிநிதிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
பொருளாதாரப் பாதிப்புகள்:
இந்த 1 கி.மீ சுற்றளவில் பொருளாதாரப் பாதிப்பும் மிகக் கடுமையாக உள்ளது.
சமர்ப்பிக்கப்பட்ட புள்ளிவிவரங்களின்படி, தோராயமாக ரூ.51,735.88 கோடி மதிப்பிலான வணிகம் பாதிக்கப்பட்டுள்ளது. நேரடி மற்றும் மறைமுக வருவாய்
உள்ளிட்ட ஒட்டுமொத்தப் பொருளாதாரப் பாதிப்பு ரூ.19,790.48 கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது. இந்தப் புள்ளிவிவரங்கள் பாதிக்கப்பட்ட
பகுதியில் ரியல் எஸ்டேட் துறைக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பின் குறைந்தபட்ச மதிப்பீடு
மட்டுமே. பட்டா உரிமையாளர்கள், தொழிற்சாலைகள் மற்றும்
பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ள ஒட்டுமொத்தப் பாதிப்பு இதைவிட மிகப் பெரியதாக
இருக்கலாம். மேலும்,
கட்டுமானத் தொழிலாளர்கள், பொருட்கள் வழங்குவோர்,
சிறு, குறு மற்றும் நடுத்தரத்
தொழில்கள்,
போக்குவரத்து நிறுவனங்கள், சேவை வழங்குநர்கள்,
தொழில் வல்லுநர்கள் மற்றும் உள்ளூர் வணிகங்களைச் சார்ந்த
ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புகளும் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.
தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினைகள்:
இதில் தீர்க்கப்பட வேண்டிய இரண்டு முக்கியப் பிரச்சினைகள் இருப்பதாகத் தொழில்
துறைப் பிரதிநிதிகள் கூறுகின்றனர்:
பள்ளிக்கரணை ராம்சர் சதுப்புநிலமாக அறிவிக்கப்பட்ட 1248 ஹெக்டேர் நிலத்தில்,
கூடுதலாகச் சேர்க்கப்பட்டுள்ள 550 ஹெக்டேர் நிலத்தை முறையாக அடையாளப்படுத்த வேண்டும்.
மேலும் சுமார் 698
ஹெக்டேர் பரப்பளவில் அமைந்துள்ள பள்ளிக்கரணை சதுப்புநிலக்
காப்புக்காடு 2007-ஆம் ஆண்டிலேயே அரசாணையாக வெளியிடப்பட்டு, சட்டப்பூர்வமாகப்
பாதுகாக்கப்பட்டு வருகிறது. இந்தப் பாதுகாக்கப்பட்ட மையப்பகுதி குறித்து எந்தப்
பிரச்சினையும் இல்லை. தற்போதைய கவலை என்னவென்றால், இந்தப் பாதுகாக்கப்பட்ட பகுதிக்கு வெளியே உள்ள நிலங்கள் மற்றும் தெளிவாக
அடையாளப்படுத்தப்படாத,
நில அளவை எண்கள் மூலம் இன்னும் நேரடியாக உறுதி செய்யப்படாத
கூடுதல் 550
ஹெக்டேர் நிலம் ஆகியவை குறித்தே ஆகும்.
ராம்சர் அறிவிப்பு மற்றும் நிலுவையில் உள்ள நடைமுறைகள்:
பள்ளிக்கரணை சதுப்புநிலம் / காப்புக்காடு 2022-ஆம் ஆண்டில்
ராம்சர் பகுதியாக அறிவிக்கப்பட்டது. அப்போது இதனுடன் கூடுதலாக 550 ஹெக்டேர் நிலம் சேர்க்கப்பட்டது. 4 ஆண்டுகள் ஆகியும், சதுப்புநில (பாதுகாப்பு மற்றும் மேலாண்மை) விதிகளின் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள
கள அளவிலான சரிபார்ப்பு,
மக்கள் கருத்து கேட்பு மற்றும் அரசாணை வெளியீடு ஆகிய உரிய
நடைமுறைகளைச் சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும்
வனத்துறை இதுவரை முடிக்கவில்லை.
ராம்சர் பகுதியின் சரியான அளவு மற்றும் எல்லையைத் தெளிவாக நிர்ணயிக்கும்
வகையில்,
இந்த செயல்முறையை விரைவுபடுத்த வேண்டும் என்று தொழில் துறை
பிரதிநிதிகள் அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். நில அளவை எண்கள் மூலம்
அறிவியல் பூர்வமாக நிலத்தை அடையாளப்படுத்துதல், தெளிவான வரைபடங்களை
வெளியிடுதல்,
மக்கள் கருத்துகளைக் கேட்டறிதல் மற்றும் சதுப்புநில
விதிகளின்படி உரிய நடைமுறைகளைப் பின்பற்றி விரைவாக அரசாணையை வெளியிட வேண்டும்
என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
2. சதுப்புநிலத்தின் சரியான எல்லையைச் சுற்றி 'தாக்கத்தை ஏற்படுத்தும் பகுதியை' நிர்ணயித்தல்:
சதுப்புநிலத்தின் சரியான பரப்பளவைக் கண்டறிந்த பின்னரே, அதனைச் சுற்றியுள்ள தாக்கத்தை ஏற்படுத்தும் பகுதியை நிர்ணயிக்க முடியும்.
விதிகளும் அறிவியல் முறைகளும்:
சதுப்புநில (பாதுகாப்பு மற்றும் மேலாண்மை) விதிகளின்படி, "ஒரு சதுப்புநிலத்தின் தாக்கத்தை ஏற்படுத்தும் பகுதி என்பது நிலையான அல்லது
சீரான அளவு கொண்டதல்ல;
அது உள்ளூர் நீரியல், நிலப்பரப்பு, வடிகால் அமைப்புகள் மற்றும் அருகிலுள்ள நிலப் பயன்பாடு போன்ற குறிப்பிட்ட
காரணிகளின் அடிப்படையில் தீர்மானிக்கப்படுகிறது." எனவே, ஒரு சதுப்புநிலத்தில் இருந்து மற்றொன்றுக்கு மாறுபடும் இந்த எல்லையை, டிஜிட்டல் எலிவேஷன் மாடல்கள் மற்றும் கள அளவிலான சரிபார்ப்பு உள்ளிட்ட
அறிவியல் முறைகளைப் பயன்படுத்தி நிர்ணயிக்க வேண்டும்.
நடைமுறைச் சிக்கல்கள்
தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் உத்தரவில் மேற்கோள் காட்டப்பட்டுள்ள 'கேர் எர்த் ஐஎம்பி'
அறிக்கை, "தாக்கத்தை ஏற்படுத்தும்
பகுதி 1 கி.மீ ஆக நிர்ணயிக்கப்பட்டிருந்தாலும், பள்ளிக்கரணை
சதுப்புநிலத்தைச் சுற்றி பட்டா நிலங்கள் இருப்பதாலும், அப்பகுதி அதிக அளவில் நகரமயமாக்கப்பட்டுள்ளதாலும், நீர்வரத்து மற்றும் வெளியேறும் கால்வாய்கள், மற்றும் சதுப்புநிலத்தில் குறிப்பிடத்தக்கத் தாக்கத்தை ஏற்படுத்தும்
நீர்ப்பிடிப்புப் பகுதியில் உள்ள சிறிய சதுப்புநிலங்கள் ஆகியவற்றின் அடிப்படையில்
இந்த எல்லையை நிர்ணயிப்பதே விவேகமானது" என்று தெளிவாகக் கூறுகிறது.
கிழக்கு கொல்கத்தா சதுப்புநில உதாரணம்:
எனவே,
அதிக நகரமயமாக்கப்பட்ட பகுதிக்கு மத்தியில் அமைந்துள்ள ஒரு
சதுப்புநிலத்திற்கு,
சுற்றிலும் ஒரே மாதிரியாக 1 கி.மீ தொலைவை எல்லையாக நிர்ணயிப்பது அறிவியல் பூர்வமானது அல்ல. இதற்கு
உதாரணமாகக் கிழக்கு கொல்கத்தா சதுப்புநிலங்களைக் கூறலாம். அதிக நகரமயமாக்கப்பட்ட
பகுதிக்கு மத்தியில் அமைந்துள்ள அந்த சதுப்புநிலத்திற்கு 0 கி.மீ தொலைவே எல்லையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தகவல் அறியும் உரிமைச் சட்டம்
தமிழ்நாடு மாநில சதுப்புநில ஆணையத்திற்கு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்
கீழ் கேள்வி எழுப்பிய போது,
'கேர் எர்த் டிரஸ்ட்' அமைப்பின் ஒருங்கிணைந்த
மேலாண்மைத் திட்டம் இன்னும் வரைவு நிலையிலேயே இருப்பதாகவும், அது 'NCSCM'
அமைப்பின் ஆய்வில் உள்ளதாகவும், தமிழ்நாடு மாநில சதுப்புநில ஆணையத்தின் ஒப்புதலுக்குப் பிறகே அது
பொதுமக்களுக்கு வெளியிடப்படும் என்றும் பதிலளிக்கப்பட்டது.
எனவே,
முழுமையாக அடையாளப்படுத்தப்படாத பள்ளிக்கரணை ராம்சர்
பகுதியைச் சுற்றி 1 கி.மீ தொலைவை ஒரே மாதிரியான எல்லையாக நிர்ணயிப்பது அறிவியல் பூர்வமானது அல்ல; இது மிகவும் தன்னிச்சையான ஒரு முடிவாகும்.
பாதிப்புகள் என்ன?
தற்போதைய இந்த எல்லை நிர்ணயம், லட்சக்கணக்கான வீட்டு
உரிமையாளர்கள்,
வணிகங்கள், கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள் மற்றும் உள்கட்டமைப்புத் திட்டங்களில் பெரிய அளவிலான
பாதிப்புகளை ஏற்படுத்துவதோடு மட்டுமல்லாமல், எதிர்கால முதலீடுகள், வேலைவாய்ப்பு உருவாக்கம் மற்றும் இப்பகுதியின் ஒட்டுமொத்தப் பொருளாதார
வளர்ச்சியையும் பாதிக்கும் என்று தொழில் துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.
முறையான பட்டா வைத்துள்ள பல சாதாரணக் குடும்பங்கள் வீடு கட்டவோ, வீட்டுக் கடன் பெறவோ,
பழைய வீடுகளை இடித்துக் கட்டவோ அல்லது தங்களது நிலத்தை
விற்கவோ முடியாமல் தவிக்கின்றனர். மேலும், வங்கிகள் மற்றும்
அதிகாரிகளிடமிருந்து அவர்களுக்குத் தெளிவான பதில்களும் கிடைப்பதில்லை. ஏற்கனவே
அனுமதி பெறப்பட்ட திட்டங்களில் கூட, வீடுகளை வாங்குவோர் கடன்
பெறுவதில் தாமதத்தையும்,
நிச்சயமற்ற தன்மையையும் எதிர்கொண்டுள்ளனர்.
உள்கட்டமைப்பு வசதிகள் பாதிப்பு
இந்த 1 கி.மீ எல்லைக்குள் பல பொது உள்கட்டமைப்பு வசதிகளும் அமைந்துள்ளன. சென்னை
மெட்ரோ ரயில் திட்டத்தின் 2-ம் கட்ட நிலையங்கள் மற்றும் பயன்பாட்டில் உள்ள 2 பறக்கும் ரயில் நிலையங்கள் இந்தப் பகுதிக்குள் வருகின்றன. முக்கியப் பொதுச்
சொத்துகளைக் கொண்ட இந்தப் பகுதி ஏற்கனவே நகரமயமாக்கப்பட்ட ஒன்று என்பதை இது
காட்டுகிறது.
சோழிங்கநல்லூரில் வணிக மற்றும் அலுவலக இடங்களை ஒருங்கிணைத்து ஒரு பெரிய
போக்குவரத்து மையத்தை அமைக்க மெட்ரோ நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. தற்போதைய
கட்டுமானத் தடையால் அவர்களின் திட்டங்களும் பாதிக்கப்படும். மேலும், இந்த 1 கி.மீ எல்லைக்குள் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகங்கள், மாநகராட்சி அலுவலகங்கள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள்,
பள்ளிகள், தபால் நிலையங்கள், மின்சார வாரிய வசதிகள்,
மெட்ரோ குடிநீர் வசதிகள், ஆராய்ச்சி நிறுவனங்கள் மற்றும் பல அரசு மற்றும் குடிமை வசதிகள் அடங்கியுள்ளன.
அரசுக்கு கோரிக்கை
1 கி.மீ கட்டுமானத் தடையை மறுபரிசீலனை செய்தல்: சதுப்புநிலத்தின் தாக்கத்தை ஏற்படுத்தும் பகுதியை அறிவியல் பூர்வமாக
நிர்ணயித்து,
இறுதி செய்து, அதிகாரப்பூர்வமாக அரசாணை
வெளியிடும் வரை,
1 கி.மீ சுற்றளவிற்கு விதிக்கப்பட்டுள்ள ஒட்டுமொத்தக்
கட்டுமானத் தடையைத் திரும்பப் பெற வேண்டும்.
அறிவியல் பூர்வமான எல்லை நிர்ணயத்தை முடித்தல்: கள அளவிலான சரிபார்ப்பு, நீரியல் ஆய்வுகள், வடிகால் பகுப்பாய்வு,
அருகிலுள்ள நிலப் பயன்பாட்டு மதிப்பீடு மற்றும் நில அளவை
எண் சரிபார்ப்பு ஆகியவற்றின் மூலம் விரிவான மற்றும் அறிவியல் பூர்வமான எல்லை
நிர்ணயப் பணிகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.
ஒருங்கிணைந்த மேலாண்மைத் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்து அரசாணை வெளியிடுதல்: வெளிப்படைத்தன்மை மற்றும் தெளிவை உறுதி செய்ய, மக்கள் கருத்து கேட்பு,
சம்பந்தப்பட்டவர்களுடனான ஆலோசனை, வரைபடங்கள் வெளியீடு மற்றும் ஒழுங்குமுறை வழிகாட்டுதல்கள் உள்ளிட்ட
சட்டப்பூர்வ நடவடிக்கைகளை முடிக்க வேண்டும்.
அதிக அளவில்
நகரமயமாக்கப்பட்ட இந்த 1
கி.மீ எல்லைக்குள் ஏற்கனவே உள்ள திட்ட அனுமதிகள், புதுப்பித்தல்கள்,
தடையில்லாச் சான்றிதழ்கள், தனி மனைகளுக்கான விண்ணப்பங்கள், வீட்டு வசதி மற்றும்
திட்டங்களுக்கான கடன்கள் மற்றும் பிற வளர்ச்சிப் பணிகளுக்கான செயல்பாடுகளைத்
தொடர்ந்து அனுமதிக்க வேண்டும். இந்த மாற்றக் காலத்தில் பொதுமக்கள், வணிகங்கள் மற்றும் நடைபெற்று வரும் திட்டங்கள் பாதிக்கப்படாமல் இருப்பதை அரசு
உறுதி செய்ய வேண்டும்.