பணி ஓய்வுக் கால திட்டமிடல் – வாழ்க்கையின் தவிர்க்க முடியாத
கட்டம்! Retirement
ஆர்.எஸ்.குமார், நிறுவனர், சம்பத் ஃபைனான்ஷியல் சர்வீசஸ்
“பணி ஓய்வுக் காலம் இன்னும் இன்னும் வெகு காலம் உள்ளது” என்று நினைப்பது பலரின் வழக்கம். ஆனால் உண்மையில், பணி ஓய்வுக் கால திட்டமிடல் (Retirement Plan) என்பது வாழ்க்கையின் மிக முக்கியமானதும் தவிர்க்க முடியாததுமான ஒரு பகுதி.
ஒருவர் வேலை
சேர்ந்த நாளிலிருந்தே, அவர் ஓய்வு பெறும் நாளுக்கான திட்டத்தையும் அமைத்துக் கொள்ள
வேண்டும்.
ஏன் பணி ஓய்வு காலத்திற்காக திட்டமிட வேண்டும்?
1.
நிலையான வருமானம் இல்லாமை
ஓய்வு பெற்ற பிறகு சம்பளம் கிடையாது. ஆனால் செலவுகள் மட்டும் அதிகரித்துக்கொண்டே இருக்கும்.
2.
பணவீக்கம் (Inflation)
இன்றைய ₹1,00,000 மதிப்பு, 20 ஆண்டுகளுக்கு
பிறகு அதன் மதிப்பும் வாங்கும் திறனும் குறைந்து விடும்
3.
மருத்துவ செலவுகள்
வயதான காலத்தில் மருத்துவச் செலவுகள் அதிகரிக்கும்
4.
வாழ் நாள் ஆயுள் காலம் அதிகரிப்பு
மருத்துவத்துறை வளர்ச்சியினால் மனிதர்களின் நீண்ட காலம் வாழ்கிறார்கள்; அதற்கேற்ற நிதி
தேவை.
பொதுவாக, பல
நிறுவனங்கள் 58 அல்லது 60 வயதிற்கு மேல் பணியாளர்களை வைத்திருக்காது. சில விதிவிலக்குகள்
இருக்கலாம்.
- விளையாட்டு துறையில் உள்ளவர்கள்
30 வயதிலேயே ஓய்வு பெறலாம்
- சிலர் coach, trainer,
consultant ஆக மாற்றம் பெற்று வருமானம் பெறலாம்
- மருத்துவர், வழக்கறிஞர், ஆடிட்டர்
போன்றவர்கள் 70 வயதிற்கும் மேலாக பணிபுரியலாம்
ஆனால் பெரும்பாலானவர்கள்
55–60 வயதுக்குள் ஓய்வு பெறுகின்றனர். அதற்குப் பிறகு வருமானம் குறையலாம் அல்லது முற்றிலும்
நிற்கலாம்.
ஆயுட்கால உயர்வு – புதிய சவால்
1947ல் சுமார் 35 ஆண்டுகளாக இருந்த இந்தியர்களின் ஆயுட்காலம்,
இன்று 70 ஆண்டுகளை கடந்துவிட்டது.
- 1947: ~32–35 ஆண்டுகள்
- 1950: ~41 ஆண்டுகள்
- 1960: ~45 ஆண்டுகள்
- 1970: ~48 ஆண்டுகள்
- 1980: ~53 ஆண்டுகள்
- 1990: ~58 ஆண்டுகள்
- 2000: ~62 ஆண்டுகள்
- 2010: ~67 ஆண்டுகள்
- 2020: ~70 ஆண்டுகள்
- 2023–2025: ~70–72 ஆண்டுகள்
இதன் அர்த்தம்
என்ன?
ஓய்வு பெற்ற பிறகு வாழும் காலம் அதிகரித்துள்ளது!
இதற்கு முக்கிய
காரணம் மருத்துவ முன்னேற்றம். ஆனால் இதனால் சில சிக்கல்களையும் சந்திக்க நேரிடும்:
- அதிக காலத்திற்கு பணம் தேவை
- மருத்துவ செலவுகள் அதிகரிக்கும்
- பண வீக்கம் அதிகரித்தால் ஓய்வு
கால சேமிப்பு நிதி சீக்கிரமே கரையக்கூடும்
ஓய்வு தொகுப்பு நிதி – ஏன் அதிகம் தேவைப்படுகிறது?
ஓர் எடுத்துக்காட்டு
பார்ப்போம்:
- மாத செலவு: ₹50,000
- தற்போதைய வயது: 38
- ஓய்வு வயது: 55
- பணவீக்கம்: 6%
நிலை 1: ஆயுள்காலம் 77
- தேவைப்படும் தொகுப்பு நிதி: ₹2.06 கோடி
நிலை 2: ஆயுட்காலம் 85
- தேவைப்படும் தொகுப்பு நிதி: ₹2.29 கோடி
வித்தியாசம்:
சுமார் 11% அதிகம்
|
Monthly Expenses |
50000 |
50000 |
|
Current Age |
38 |
38 |
|
Retirement Age |
55 |
55 |
|
Inflation Rate |
6% |
0.06 |
|
Monthly Expense at Retirement |
₹ 1,34,638.64 |
134638.6393 |
|
Annual Expense at Retirement |
₹ 16,15,663.67 |
1615663.671 |
|
Life Style @85% |
₹ 13,73,314.12 |
1373314.121 |
|
Life Expectancy |
77 |
85 |
|
Corpus Require at 55 Inflation Adjusted |
22603258.6 |
24910289.56 |
|
Receivables |
5000000 |
5000000 |
|
|
₹ 1,76,03,258.60 |
₹ 1,99,10,289.56 |
|
Add; Miscellaneous Medical Insurance Travelling and Others |
3000000 |
3000000 |
|
Net Retirement Corpus Required |
₹ 2,06,03,258.60 |
22910289.56 |
நீங்கள் அதிக நாள் வாழ்ந்தால், அதிக
பணம் தேவைப்படும்.
வாழும் காலம் எவ்வளவு என்பதை யாராலும் அறுதி இட்டு கூற
முடியாது. எனவே உழைக்கும் காலத்திலேயே ஓய்வு பெறுவதற்கு முன்னரே ஓய்வு காலத்துக்கு
தேவையான நிதியை கணக்கிட்டு சேர்க்க வேண்டும்
மிக முக்கியமான உண்மை
ஒருவர் ₹2.06 கோடி வைத்துக் கொண்டு ஓய்வு பெற்றால்:
- அவர் 77 வயது வரை வாழ முடியும்
- ஆனால் 85 வயது வரை வாழ்ந்தால்?
- கடைசி 8 ஆண்டுகளுக்கு பணம் இருக்காது!
அப்போது என்ன
ஆகும்?
- குழந்தைகளின் மீது நம்பிக்குழந்தைகளையோ
அல்லது பிறரையோ சார்ந்து வாழ வேண்டி வரும்
கை வைக்க வேண்டி வரும்
- சுயமரியாதை பாதிக்கப்படும்
- சின்ன சின்ன தேவைகளுக்கு கூட பிறரின்
பண உதவியை எதிர் பார்த்து வாழ வேண்டி வரும்
ஓய்வு கால
திட்டமிடலில் ஒரு முக்கிய அம்சம் என்னவெனில் நீங்கள் வேலையில் இருக்கும் போதே நீங்கள்
போட்டோகிராபி, கேட்டரிங், ட்ரிவிங் டிஜிட்டல் மார்க்கெட்டிங் போன்ற எதாவது ஒரு திறனை
வளர்த்துக்கொள்வது நல்லது. ஒருவேளை எதிர் பாராவிதமாக உங்கள் ஓய்வு காலத்துக்கு முன்னரே
பார்க்கும் வேலையே இழந்தாலும், நீங்கள் அதுவரை சேர்த்து வைத்துள்ள ஓய்வு நிதியும் காய்
கொடுக்கும் நீங்கள் வளர்த்துக்கொண்டுள்ள உங்கள் தனி திறனும் உங்களுக்கு வேறு வேலை கிடைக்கும்
வரையிலும் ஓரளவேனும் வருமானம் ஈட்ட வழிவகை செய்யும்.
“ஓய்வு கால வாழ்க்கை சுமையாக இல்லாமல், சுகமாக இருக்க
வேண்டுமெனில் — திட்டமிடல் இன்றே தொடங்க வேண்டும்!”
கூடுதல் விவரங்கள் மற்றும் முதலீட்டுக்கு..
ஆர்.எஸ்.குமார்,
நிறுவனர், சம்பத்
ஃபைனான்ஷியல் சர்வீசஸ்
அலுவலக
முகவரி:
எம் பிளாக் 305, அப்பாசாமி ப்ளூமிங்க்டேல் அபார்ட்மெண்ட்ஸ்
கிழக்கு பிரதான சாலை, சங்கர் நகர்,
பம்மல், சென்னை – 600 075
மொபைல்: 98414 08824
மின்னஞ்சல்:
sampath.financialplan@gmail.com
மியூச்சுவல்
ஃபண்ட் துறையில் 15 ஆண்டுகள் அனுபவம்
(வாடிக்கையாளர் சேவை மற்றும் செயல்பாடுகள்)
Disclaimer:
மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு
சந்தை ரிஸ்க்களுக்கு உட்பட்டது. முதலீடு செய்யும்
முன் திட்டம் சார்ந்த அனைத்து ஆவணங்களையும் சரியாகப் படித்துப் பார்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. மியூச்சுவல் ஃபண்ட் மூலம் நிச்சயமான ஆதாயங்கள்
கிடைக்கும் என்பதற்கு உத்தரவாதம் கிடையாது.
