அமெரிக்கா – ஈரான் போர்: பங்குச் சந்தை, கமாட்டிட்டி
முதலீட்டாளர்கள் என்ன செய்தால் லாபம்? War Vs Wealth
தர்மஶ்ரீ
இராஜேஸ்வரன், நிறுவனர், https://saisharetute.in/
அமெரிக்கா
– ஈரான் இடையே இருக்கும் போர் வலுப்பெற்றால், இந்தியாவின் பொருளாதாரத்தையும்,
இந்திய பங்குச் சந்தையையும் பல வழிகளில் கச்சா எண்ணெய், உலக முதலீடு, வர்த்தகம்,
மற்றும் முதலீட்டாளர்களின் மனநிலை
ஆகிய
முனைகளில் பாதிக்கும்.
கச்சா எண்ணெய் (Crude Oil) விலை அதிகரிப்பு
ஈரான் உலகின்
முக்கிய எண்ணெய் உற்பத்தியாளர் நாடுகளில் ஒன்று. எனவே, போர் முற்றினால் ஈரானின் எண்ணெய் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி குறையும். மத்திய கிழக்குப் பகுதியில் எண்ணெய் சார்ந்த போக்குவரத்து பாதிக்கப்படும். இதனால்,
கச்சா எண்ணெய் விலை அதிகரிக்கும்; அதிகரித்து வருகிறது.
நமது
இந்தியா தினமும் பயன்படுத்தும் கச்சா எண்ணெயில் சுமார் 80–85% இறக்குமதி
செய்கிறது.
இந்தியப்
பொருளாதாரத்தில் தாக்கம்:
பெட்ரோல்
/ டீசல் விலை, போக்குவரத்துச் செலவு, பணவீக்கம் (Inflation) - ஆகியவை உயரும்.
பங்கு
சந்தைத் தாக்கம்:
பங்குச் சந்தையில்
கீழ்க்கண்ட துறைகள் (செக்டார்கள்) பாதிக்கப்படும்.
விமான
போக்குவரத்து, பெயிண்ட் , கெமிக்கல், லாஜிஸ்டிக்ஸ் - ஆகிய துறை சார்ந்த
கம்பெனிகள்.
அதேநேரம்
அமெரிக்க டாலரில் வருமானம் ஈட்டும் துறைகளான ஃபார்மா மற்றும் ஐடி கம்பெனிகளின்
பங்கு விலைகள் ஏற வாய்ப்புள்ளது.
ரூபாய் மதிப்பு குறைவு (Currency Depreciation):
போர்
அல்லது புவி- அரசியல் பதற்றங்கள்
(geopolitical tension) அதிகரிக்கும்
பட்சத்தில் முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடுகளுக்குச் செல்வார்கள். அவர்கள்
பொதுவாக அன்னியச் செலாவணியான அமெரிக்க டாலர், தங்கம்
இவற்றில் முதலீடு செய்வார்கள்.
இதனால்
அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு பலவீனமாகும். ஆனால் சமீபத்தில்
இந்தப் பதற்றத்தினால் தங்கத்தின் விலை ஏறுவதற்கு பதில் இறங்கி இருக்கிறது.
காரணம் கச்சா எண்ணெயின் விலை அதிகரிக்கும் என்ற எதிர்பார்ப்பில்
முதலீட்டாளர்கள் தங்கத்திலிருந்து தங்கள் முதலீட்டை கச்சா எண்ணெயை நோக்கி
திருப்புவது நடக்கிறது.
வெளிநாட்டு முதலீடு வெளியேறுதல் (FII Outflow):
போரின்
போது நிச்சயமற்ற தன்மை (uncertainty) அதிகம் இருக்கும் என்பதால் வெளிநாட்டு
முதலீட்டாளர்கள் (Foreign Institutional Investors (FII)) இந்தியா மாதிரியான
வளரும் சந்தைகளில் இருந்து (Emerging markets) பணத்தைத் திரும்ப எடுத்துக் கொள்ள வாய்ப்புள்ளது.
இந்த
முதலீடுகள் பாதுகாப்பான சந்தைகள் (Safe
markets) என்று அழைக்கப்படும் அமெரிக்க பாண்டு (US bonds) மார்க்கெட் போன்றவை
நோக்கிக் போகக் கூடும்.
பொதுவாக
பங்குச் சந்தைகளில் நிஃப்டி சென்செக்ஸ் போன்ற குறியீடுகள் வீழ்ச்சி அடையும். சந்தை
ஏற்ற இறக்கம் (Market volatility) அதிகரிக்கும்.
தங்கம் (Gold) விலை அதிகரிப்பு:
சமீபத்தில்
போர்ப் பதற்றத்தின் காரணமாக கச்சா எண்ணெய் விலை ஏறுவதால் அதை நோக்கி தம்முடைய
முதலீட்டைத் திரும்பிய முதலீட்டாளர்கள் மீண்டும் அந்தப் பணத்தை தங்கத்தை நோக்கியே
முதலீடு செய்வதற்கு வாய்ப்பு உள்ளது. எனவே
மீண்டும் தங்கம் விலை உயர்வதற்கு வாய்ப்புகள் அதிகம்.
இந்த
முதலீட்டாளர்களின் தற்காலிக வியூகத்தைப் பயன்படுத்திக் கொண்டு தங்கம் விலை
குறையும் போது அதில் நீண்ட கால அடிப்படையில் முதலீடு செய்யலாம்.
பாதுகாப்புத் (Defense) துறை வளர்ச்சி:
போர் தீவிரமானால் உலக நாடுகள் பாதுகாப்புச் செலவை
அதிகரிக்கும். இதனால், பாதுகாப்பு துறைக்கு (Defense sector) தேவை (demand)
அதிகரிக்கும்.
இந்திய பாதுகாப்புத்துறை நிறுவனங்களா HAL, BEL, Bharat Dynamics இவற்றின் பங்குகளின் விலை
உயர வாய்ப்புள்ளது.
உலக வர்த்தகத்தில் பாதிப்பு:
மத்திய
கிழக்குப் பகுதி உலக வர்த்தகத்தில் முக்கிய இடம் ஆதலால் போர் தீவிரமடைந்தால் கப்பல் போக்குவரத்து வழிகள் பாதிக்கப்படும் (உதாரணம்
ஹார்மோஸ் நீர் இணைப்பு), அகில உலக
அளவில் நாடுகளுக்கு இடையேயான வர்த்தகத்தில் தொய்வு ஏற்படும்.
இதனால்
இந்தியா உட்பட அனைத்து நாடுகளுக்கும் ஏற்றுமதி இறக்குமதி பிசினஸ் பாதிக்கப்படும்.
முதலீட்டாளர் மனநிலை (Market Sentiment):
போரின்
காரணமாக பங்குச் சந்தை / கமாட்டிட்டி என்ற பொருள்
சந்தையில் அச்சம், அச்சம் சார்ந்த அதிக விற்பனை (Panic selling) நடந்து குறுகிய
கால இறக்கம் (Short-term correction)
ஏற்படும்.
அதேநேரம்
நீண்ட கால முதலீட்டாளர்களுக்கு நீண்ட கால அடிப்படையில் பங்குகளை வாங்குவதற்கு
உகந்த வகையில் சந்தை அமையும்.
கூடுதல்
விவரங்கள், முதலீடு, பங்குச் சந்தை மற்றும் கமாட்ட்டி வர்த்தக பயிற்சிக்கு தொடர்பு
கொள்ளவும்..!
தர்மஶ்ரீ
இராஜேஸ்வரன், நிறுவனர், https://saisharetute.in/
முகவரி:
சாய் ஷேர்ட்யூட், புதிய எண்-13, பழைய எண்-9/02,
மூப்பரப்பன் தெரு, டி.நகர், சென்னை – 600 017.
(இரண்டாம் மாடி – அடையாளம்: Professional Courier கட்டிடம்)
மின்னஞ்சல்:
saisharetutechennai@gmail.com
இணையதளம்:
https://saisharetute.in/
தொலைபேசி
எண்:
+91 98409 20751, 9840700751
செயல்பாட்டு
நேரம்:
தினமும் காலை 09:00 மணி முதல் மாலை 05:00 மணி வரை (இந்திய நேரம்)
@@@

