மும்பையில் டெவலப்மெண்ட் அலுவலகம் காசாகிராண்ட்..!
Photo Caption (L to R): Ms. Shaina NC inaugurates Casagrand’s new office in the presence of Mr. Arun Mn, Chairman & Managing Director, Casagrand Premier Builder Limited, and the senior management team
·
இந்நிறுவனம் ஐந்து இந்திய நகரங்கள் மற்றும் துபாய்
முழுவதும் 180+ கட்டுமானத் திட்டங்களுடன் சிறந்த போர்ட்ஃபோலியோவைக் கொண்டுள்ளது
·
இந்த புதிய டெவலப்மெண்ட் அலுவலகம் லோயர் பரேல்
பகுதியில் அமைந்துள்ளது
சென்னை, பிப்ரவரி 24, 2026:
காசாகிராண்ட் பிரீமியர் பில்டர் லிமிடெட் நிறுவனம், இன்று மும்பையில் அதன்
டெவலப்மெண்ட் அலுவலகத்தை துவங்கியுள்ளதைத் தொடர்ந்து, இந்தியாவின் மேற்கு
பகுதியிலும் அதன் செயல்பாடுகளை விரிவுபடுத்தியுள்ளது.
தென்னிந்தியாவில் நன்கு அறியப்பட்ட ஒரு ரெசிடென்ஷியல் பிராண்டான
காசாகிராண்ட் - ஜனவரி 1, 2017 முதல் ஜூன் 30, 2025 வரையிலான காலகட்டத்தில்
சென்னையின் குடியிருப்பு
கட்டுமானத் துறையில் மிகப்பெரிய டெவலப்பராக இருப்பது குறிப்பிடத்தக்கது. (ஆதாரம்:
CBRE அறிக்கை) .
காசாகிராண்ட் பிரீமியர் பில்டர் லிமிடெட் நிறுவனத்தின் சேர்மன் & நிர்வாக இயக்குனர் திரு. அருண் Mn மற்றும் அதன் மூத்த நிர்வாகக்
குழுவினர் முன்னிலையில் புகழ்பெற்ற இந்திய
அரசியல் பிரமுகரான திருமதி. ஷைனா NC
அவர்கள் இந்த அலுவலகத்தை திறந்து
வைத்தார். இந்த டெவலப்மெண்ட் அலுவலகம், 11 வது மாடி, டவர் B, பெனின்சுலா பிஸ்னஸ்
பார்க், சேனாபதி பாபட் மார்க், லோயர் பரேல், மும்பை - 400 013 என்கிற முகவரியில்
அமைந்துள்ளது.
2003 இல் துவங்கப்பட்ட, காசாகிராண்ட் நிறுவனம், (Casagrand) அது வாக்குறுதி
அளிக்கும் காலக்கெடுவுக்குள் திட்டங்களை சரியாக நிறைவு செய்து கட்டுமானத்
தீர்வுகளை உத்வேகத்துடன் வழங்குவதை நோக்கமாகக்
கொண்டுள்ளது.
இந்த நிறுவனம் அடுக்குமாடி குடியிருப்புகள்; மற்றும் தனிப்பட்ட வில்லாக்கள்
என இரண்டையும் லக்ஸரி (ஆடம்பரமான), மிட்-என்ட் (நடுத்தரமான) மற்றும் அனைவருக்கும்
ஏதுவான ரெசிடென்ஷியல் திட்டங்களை - காசாகிராண்ட் பிராண்டின் கீழ் சிறப்பாக வழங்கி
வருகிறது. ரியல் எஸ்டேட் துறையில் 22 வருட அனுபவத்துடன், சென்னை, பெங்களூரு,
கோயம்புத்தூர், ஹைதராபாத், புனே மற்றும் துபாய் உள்ளிட்ட ஐந்து முக்கிய இந்திய
நகரங்களில் 180+ திட்டங்கள் மற்றும் 88+ மில்லியன் சதுர அடியில் டெவலப்மெண்ட்
திட்டங்கள் என ஒரு வலுவான போர்ட்ஃபோலியோவைக் கொண்டுள்ளது.
இந்தத் திறப்பு விழா மேற்கு இந்தியாவில் காசாகிராண்டின் இருப்பில் ஒரு
மைல்கல்லாகக் கருதப்படுகிறது. ஏற்கனவே அப்பர் கராடி பகுதிக்கு அருகில் நடைபெற்றுவரும்
அதன் ரெசிடென்ஷியல் திட்டமான காசாகிராண்ட் கலேடியம் மூலம் மகாராஷ்டிராவில் அதன் தடத்தை
பதித்துள்ளது. இந்த மும்பை டெவலப்மென்ட் அலுவலகமானது அம்மாநிலத்தில்
காசாகிராண்டின் இயக்கத்தை மேலும் வலுப்படுத்துவதாக இருக்கும். தென்னிந்தியாவில்
காசாகிராண்ட் பிராண்டிற்கென ஒரு அடையாளத்தை ஏற்படுத்தித் தந்த தரம் மற்றும்
அர்ப்பணிப்பினை அப்படியே மகாராஷ்டிரா முழுவதும் உள்ள வீடு வாங்கும்
வாடிக்கையாளர்களுக்கும் சிறப்பாக வழங்கவுள்ளது.
இந்த நிகழ்ச்சியில் பேசிய காசாகிராண்ட்
பிரீமியர் பில்டர் லிமிடெட் நிறுவனத்தின் சேர்மன் மற்றும் நிர்வாக இயக்குனர்,
திரு. அருண் Mn, கூறுகையில், “மும்பையில் எங்கள் புதிய டெவலப்மெண்ட் அலுவலகத்தை
திறப்பதன் மூலம் இன்று நாங்கள் ஒரு முக்கிய மைல்கல்லை எட்டியுள்ளோம்.
இந்த விரிவாக்கமானது எங்களது பார்ட்னர்கள், ஆலோசகர்கள் மற்றும் பங்குதாரர்களுடன்
மிகவும் நெருக்கமாக ஒருங்கிணைந்து செயல்படுவதற்கான எங்கள் திறனை மேலும்
வலுப்படுத்தும் என நாங்கள் நம்புகிறோம்; அதே நேரத்தில் இந்த பிராந்தியத்தில்
நாங்கள் மேலும் துரிதமாக செயல்படுவதை சாத்தியமாக்குகிறது. மேலும், மும்பையில் ஒரு
மேம்பாட்டு அலுவலகத்தை நிறுவுவதன் மூலம் மகாராஷ்டிரா மாநிலத்தின் மீதான எங்களது
நீண்டகால அர்ப்பணிப்பினை வெளிப்படுத்த முடிந்தது; மேலும், மேற்கு இந்தியாவின்
வளர்ச்சி வாய்ப்புகளின் மீதான எங்கள் நம்பிக்கையையும் இந்த மையம் பிரதிபலிப்பதாக
நாங்கள் நம்புகிறோம்.
புனேவில் ஏற்கனவே எங்களது கட்டுமானத் திட்டம் நடந்து வருவதால், மேற்கு இந்தியாவின் ரியல் எஸ்டேட் தொழில்துறை பற்றிய எங்கள் புரிதலை மேம்படுத்துவதற்கான தளத்தை மும்பை வழங்கியுள்ளது; மேலும், தென்னிந்தியாவில் இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக எங்களது அடையாளமாக இருக்கும் தரம் மற்றும் நம்பகத்தன்மையுடன் - இங்கும் வீடு வாங்குபவர்களுக்கு சிறந்த முறையில் செயல்பட்டு, சேவை செய்ய மும்பை எங்களுக்கு ஒரு நல்வாய்ப்பை வழங்கியுள்ளது,” என்றா