மொத்தப் பக்கக்காட்சிகள்

இறையன்பு எழுதிய "என்ன பேசுவது! எப்படிப் பேசுவது!!". நூலின் அறிமுக விழா Book

இது, எழுத்தாளர் மற்றும் மூத்த பத்திரிகையாளர் திரு.ஜே.வி.நாதன் அவர்களின் அழைப்பு....*      

அன்பார்ந்த தோழமைகளுக்கு.. நெஞ்சம் நிறைந்த நல் வணக்கம். தாங்கள் நலம்தானே?
வாழ்நாளில் நலிந்தோர்க்கு உதவி செய்வதற்காகவே பிறவி எடுத்திருக்கிறோம் என்று கொள்கை வகுத்துக்கொண்டு நேர்மையுடன் வாழ்ந்து வரும் அறிஞர் திருமிகு இறையன்பு அவர்கள் எழுதிய வாழ்க்கைக்கு மிகவும் பயன்படும்‌ ஓர் அரிய நூல் தான் "என்ன பேசுவது! எப்படிப் பேசுவது!!".
இந்த நூலின் அறிமுக விழா எதிர்வரும் 23.12.2023 அன்று மாலை 5 மணிக்கு வேலூர் கண்ணா ஓட்டல் ஏ.சி.‌கான்பரன்ஸ் ஹாலில் நடைபெற இருக்கிறது.‌

816 பக்கங்கள்.. ₹ 1000 விலை உள்ள‌ அவரின் அற்புதமான அந்த நூல் விழா அரங்கில் சலுகை விலையாக‌ ₹.900 க்கு விற்பனை செய்ய இருக்கிறார்கள் புத்தகம் வெளியிட்ட  நியூ செஞ்சுரி  புத்தக வெளியீட்டு நிறுவனத்தார்.
திருமிகு. இறையன்பு அவர்களிடம் நூலில் கையெழுத்து பெற்று உடன் நின்று புகைப்படம் எடுத்துக் கொள்ள விரும்புவோருக்குத் தடையில்லை.

அரியதொரு நூலின் அறிமுக விழாவில் நீங்கள் தவறாமல் வருகை தந்து திரு இறையன்பு அவர்களின்  உரையைக் கேட்டு மகிழ வேண்டும் என்பதே எங்கள் ஆசை.

நாங்கள் நேரில் வந்து அன்பு கனிய அழைத்ததாகக் கொண்டு வருகை தர வேண்டுகிறேன். உங்கள் நண்பர்கள் இலக்கிய ஆர்வலர்கள் நேர்மையை ரசிப்பவர்கள் என. தங்களுக்குத் தெரிந்த நல் உள்ளங்களையும் நீங்கள் வரும்போது  உடன் அழைத்து வரக் கோருகிறேன்.

*ஜே.வி.நாதன்*                      
Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

லாபத்துக்கு குறைவான வரி: சாம்கோ ஆர்பிட்ரேஜ் ஃபண்ட் SAMCO Arbitrage Fund

திரு .  ஆர் .   வெங்கடேஷ் ,  www.gururamfinancialservices.com லாபத்துக்கு குறைவான வரி: சாம்கோ ஆர்பிட்ரேஜ் ஃபண்ட் SAMCO Arbitrage Fund  ...