மொத்தப் பக்கக்காட்சிகள்

ஆன்மிக சாஸ்திரம் கோவில்களில் எப்படி நடந்து கொள்ள வேண்டும்? Religious

ஆன்மிக சாஸ்திரம்.

🙏கோயிலில் வலம் வரும்போது பலிபீடத்தை சுற்றி வரவேண்டும்.

🙏பலிபீடத்திற்கும் சன்னதிக்கும் இடையே நாம் யாரும் செல்ல கூடாது.

🙏விளக்கில்லாத கோயிலில் வழிபாடு செய்யகூடாது.

🙏மணியின்றி பூஜை செய்ய கூடாது.

🙏கோயில் திரை மூடி இருந்தால் வணங்ககூடாது.

🙏பலிபீடம் கொடிமரம் ,ஆகிய இடத்தில் மட்டுமே விழுந்து கும்பிடவேண்டும்.

🙏கோயிலில் அபிஷேக காலத்தில் வலம் வர கூடாது.

🙏கோயிலில் கோபுர நிழல்,கொடிமர நிழல் மிதிக்க கூடாது.

🙏சண்டிகேஸ்வரர் முன் கைகளை தட்டகூடாது.

🙏மாடி உச்சியின் மீதோ, மரக்கிளை மீதோ இருந்து கொண்டு சாமி தரிசனம் செய்யகூடாது.

🙏தலைக்கு மேல் இரு கைகளால் கும்பிட்டால் மன அழுத்தம் நீங்கி புத்துணர்ச்சி பெருகும்.

🙏கோயிலின் கோபுரம் விட வீட்டின் உயரம் குறைவாக இருக்க வேண்டும்.

🙏சரீர உணர்ச்சியுடன் சாமியை தரிசனம் காணக்கூடாது.

🙏பெருமாள் எதிரே நின்று கும்பிடக்கூடாது.

🙏கோயிலின் திருநீறு, குங்குமம், பூ, போன்றவற்றை கீழே சிந்த கூடாது.

🙏பெருமாள் கோயிலுக்கு சென்றால் துளசி தீர்த்தம், சடாரி வாங்கி கொண்டு தான் வரவேண்டும்.

🙏காது இடுக்கில் புஷ்பம் வைக்கக்கூடாது.

🙏துளசி தளத்தை தலையில் வைக்கக்கூடாது.

🙏ஈர உடை, ஓருடையுடனும், ஆடையில்லாமலும் சாமி கும்பிட கூடாது.

🙏கண்ணாடி பார்த்துக்கொண்டே திருநீறு பூசக்கூடாது.

🙏விநாயகர் கோயிலில் ஒருமுறை வலம் வந்தால் போதுமானது.

🙏சிவன் கோயிலில் மூன்று முறை வலம் வரவேண்டும்.

🙏சிவன் கோயிலுக்கு சென்று காணிக்கை போடாமல் வரக்கூடாது.

🙏பெருமாள் முன்பு கன்னத்தில் அடித்து கொள்ளகூடாது.

🙏தன்னையே சுற்றி கொண்டு சாமி கும்பிடக்கூடாது.

🙏துளசியை அலம்பி கோயிலுக்கு எடுத்துச்செல்லக்கூடாது.

🙏வலது கண் துடித்தால் தந்தைக்கு பாதிப்பு.

🙏வீட்டில் ஈசான்ய மூலை குடும்ப தலைவரை குறிக்கும்.

🙏வீட்டில் பூஜை அறை சிறிதாக இருந்தால் வீட்டு தலைவர் சிரமத்தில் இருப்பார்.

🙏அமேதிஸ்ட் கல் உங்களிடம் இருந்தால் நற்பலன்கள் கிடைக்கும்.

🙏அமேதிஸ்டை செவ்வந்திகல் லட்சுமிகல் என்றும் தமிழகத்தில் அழைப்பார்கள் செவ்வந்தி பொழுதின் நிறத்தை பிரதிபலிக்கிறது. இதனை வைத்து இருப்பவர்களுக்கு செல்வ செழிப்பை தருகிறது.

🙏இரவு ஒன்பது மணி முதல் அதிகாலைமூன்று மணிவரை, நதிகளில் குளிக்கக்கூடாது.

🙏மாலை6 முதல் காலை 6 வரை இரவுபொழுதாகும். இந்தநேரத்தில் குளிக்கக்கூடாது. கிரகண காலத்தில் இந்த கணக்கு இல்லை.

🙏அமாவாசை அன்று நமது வீட்டில் தான் சாப்பிடவேண்டும். முடிந்தால் அன்று சாப்பாடு அடுத்தவருக்கு போடவேண்டும்.

🙏காயத்ரி மந்திரத்தை பிரயாணத்தின்போது, சொல்லுதல்கூடாது. சுத்தமான இடத்தில் தான் ஜபிக்கவேண்டும்.

🙏கற்பூர ஆரத்தி – சூடம்காண்பித்தல் பற்றி சூடம் காண்பிக்கும்போது, கடவுளின் காலிற்கு நான்கு தடவை சுத்தி காண்பிக்கவேண்டும். தொப்பிளுக்கு இரண்டு தடவை காண்பிக்கவேண்டும் முகத்துக்கு ஒரு தடவை கடைசியாக, முழு உருவத்துக்கும் மூன்று தடவை காண்பிக்கவேண்டும்.

🙏தனது வீட்டில் கோலம் போடாமலும் விளக்கேற்றாமலும் ஆலயங்களுக்கு செல்லக்கூடாது.

🙏எரியும் விளக்கில் எண்ணெய் அல்லது நெய்யை கையால் தொடுவதும் அதன் பிறகு அதைத் தன் தலையில் தடவிக்கொள்வதும் கூடாது.

🙏திருநீற்றை வில்வ பழ ஓட்டில் வைத்து பூசி கொள்ள சிவ கதி எளிமையாக கிடைக்கும்.

🙏அடியார்கள் மற்றும் சிவ தீட்சை பெற்றவர்கள் தவிர மற்றவர் தண்ணீரில் திருநீற்றை குழைத்து புசிகொள்ள கூடாது.

🙏பெண்கள் வேல் மற்றும் சிவலிங்கத்தை அபிஷேகம் செய்யகூடாது. (ஆகம முறைக்கு உட்பட்டது)

🙏கோவில்களில் சூடம் மற்றும் தீபத்தை கைகளில் ஏற்றி காண்பிக்க கூடாது.

🙏நிவேதனம் செய்த தேங்காயை சமையலில் சேர்த்து அந்த உணவை மறுபடியும் சாமிக்கு நிவேதனம் செய்யக்கூடாது.

* சிவாய நம * 
Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - மாதம்

அதிக பார்வை - 365 நாள்கள்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

தனி நபர் நிதி மேலாண்மை மற்றும் வரி திட்டமிடல் கூட்டம் சென்னை 2024 ஏப்ரல் 28 அனுமதி இலவசம் PERSONAL FINANCIAL PLANNING & TAX PLANNING

 PERSONAL FINANCIAL PLANNING & TAX PLANNING தனி நபர் நிதி மேலாண்மை மற்றும் வரி திட்டமிடல் கூட்டம் சென்னை 2024 ஏப்ரல் 28 அனுமதி இலவசம்  ச...