ஐசிஐசிஐ லொம்பார்ட் தனது 25-வது
ஆண்டு விழாவில் 25 புதுமைகளை அறிமுகப்படுத்துகிறது!
- வாடிக்கையாளர்களுக்கு முன்னுரிமை
அளிக்கும் 25 புதுமையான தீர்வுகள் மூலம், வாக்குறுதிகளை நிறைவேற்றிய 25 ஆண்டுகளைக்
குறிக்கிறது.
- நலவாழ்வு, மோட்டர் வாகனம், வீடு, பயணம், வணிகக் காப்பீடு ஆகியவற்றில் புதிய சலுகைகள்.
மும்பை / சென்னை,
03 ஆகஸ்ட் 2026: இந்தியாவின் மிகப்பெரிய தனியார் பொதுக் காப்பீட்டு
நிறுவனமான ஐசிஐசிஐ லொம்பார்ட் ஜெனரல் இன்சூரன்ஸ், தனது வெள்ளி விழா கொண்டாட்டங்களின்
ஒரு பகுதியாக, பல்வேறு வணிகப் பிரிவுகளில் 25 புதுமையான தீர்வுகளை இன்று அறிமுகப்படுத்தியுள்ளது. ஒரே நாளில் 14 புதிய திட்டங்களை அறிமுகப்படுத்திய தனது முந்தைய சாதனையை முறியடித்து,
இந்நிறுவனம் தற்போது ஒரே நாளில் 25 புதுமைகளை
அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் 5 திட்டங்கள்
இத்துறைக்கே முற்றிலும் புதியவை ஆகும். இந்தத் தீர்வுகள்,
காப்பீட்டுச் சுழற்சி முழுவதும் ஏஐ போன்ற நவீன
தொழில்நுட்பங்களின் ஆற்றலை வாடிக்கையாளர்களை மையமாகக் கொண்ட சிந்தனையுடன் இணைத்து,
எங்களின் 'வாடிக்கையாளருக்கே முதலிடம்'
என்ற அணுகுமுறையை எடுத்துக்காட்டுகின்றன.
கடந்த 25 ஆண்டுகளில், ஐசிஐசிஐ
லொம்பார்ட் வாடிக்கையாளர்களின் மாறிவரும் தேவைகளுக்கு ஏற்ப தன்னை மேம்படுத்திக்
கொண்டுள்ளது, அத்துடன், நிதிப்
பாதுகாப்பிற்கு அப்பால் காப்பீட்டின் பங்கைத் தொடர்ந்து விரிவாக்கியும் வருகிறது.
இதுவரை 500 மில்லியனுக்கும் அதிகமான வாடிக்கையாளர்களுக்குச்*
சேவை வழங்கி, 60 மில்லியனுக்கும் அதிகமான உரிமை கோரிக்கைகளை* தீர்த்து வைத்துள்ள இந்நிறுவனம்,
வாடிக்கையாளர்கள் அபாயங்களில் இருந்து மீள்வது மட்டுமின்றி, அவற்றை முன்கூட்டியே கணித்து நிர்வகிக்கவும் உதவும் புதுமைகள் மூலம் பாதுகாப்பின் அடுத்த கட்டத்தை வடிவமைத்து வருகிறது.
இந்நிகழ்ச்சியில் பேசிய ஐசிஐசிஐ லொம்பார்ட்
நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநரும் சிஇஓ-வுமான சஞ்சீவ்
மந்திரி அவர்கள் கூறியதாவது, "25 ஆண்டுகளாக, ஐசிஐசிஐ லொம்பார்ட்டின் தத்துவம் மிகவும்
எளிதானது - நாங்கள் அளித்த வாக்குறுதிகளுக்காக எங்கள் வாடிக்கையாளர்களின்
பக்கபலமாக நிற்பதும், நாளைய ஒவ்வொரு வாக்குறுதிக்காகவும் பபுதுமைகளை உருவாக்குவது ஆகும்.
எங்களது இந்த வெள்ளி விழா
தருணத்தில், எங்களின் மீது நம்பிக்கை வைத்து ஆதரவு
நல்கிய வாடிக்கையாளர்கள், கூட்டாளர்கள், ஊழியர்கள், பங்குதாரர்கள், ஒழுங்குமுறை
அமைப்புகள் உள்ளிட்ட ஒட்டுமொத்த சூழல் அமைப்பிற்கும் எனது நன்றியைத் தெரிவித்துக்
கொள்கிறேன். இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நாளில், எங்களது
வாடிக்கையாளர்களுக்கான வாக்குறுதிகளை புதுப்பிக்க நாங்கள் முடிவு செய்தோம். அதன்
ஒரு பகுதியாக, இந்தக் கொண்டாட்டங்களின்
மத்தியில் 25 புதுமையான தீர்வுகளை அறிமுகப்படுத்தி உள்ளோம். இந்தச் சலுகைகள் எங்களது வாடிக்கையாளர்களின்
பல்வேறு தேவைகளைப் பூர்த்தி செய்ய உதவுவதுடன், காப்பீட்டுத்
துறையை மேலும் தனிப்பயனாக்கப்பட்டதாகவும், அர்த்தமுள்ளதாகவும்,
எதிர்காலத்திற்குத் தயாரானதாகவும் மாற்ற உதவும்."
25 புதுமைகளின் முக்கியச் சிறப்பம்சங்கள் பின்வருமாறு:
அடுத்த தலைமுறை புராடக்டுகள்
எலிவேட் ஹெர் (Elevate Her): இது
பெண்களின் பல்வேறு வாழ்க்கை நிலைகளின் தேவைகளை அடிப்படையாகக் கொண்ட ஒரு
மாற்றியமைக்கக்கூடிய பெண்கள் நலவாழ்வுக் (மருத்துவக்)
காப்பீடு ஆகும். இது வெளிநோயாளி சிகிச்சை, உடற்பயிற்சி,
ஆரோக்கியம், மகப்பேறு, நோய்த்தடுப்பு பராமரிப்பு, பெண்களைத் தாக்கும் புற்றுநோய்
தொடர்பான நிதிப் பாதுகாப்பு ஆகியவற்றை ஒரே தீர்வாக ஒருங்கிணைக்கிறது.
இத்துறையிலேயே முதன்முறையாக, பெண்களின் தேவைகள் மாறும்போது,
அதற்கு ஏற்ப எளிதாக மாறிக் கொள்ளும் வகையில் பல்வேறு வாழ்க்கை
நிலைகளில் அவர்களை ஆதரிக்க நான்கு சிறப்புத் திட்டங்களை இது வழங்குகிறது.
செல்லப்பிராணிகள் காப்பீடு (பா கேர்): இது
வாடிக்கையாளர்களின் செல்லப் பிராணிகளுக்கான ஒரு விரிவான காப்பீட்டுத் திட்டமாகும்.
இது பிராணிகளுக்கான கால்நடை மருத்துவச் செலவுகள், அவசரநிலைகள்,
நோய்கள், விபத்துகள், அறுவை
சிகிச்சைகள் மற்றும் வழக்கமான பராமரிப்புச் செலவுகளை உள்ளடக்குகிறது. நீண்டகால
காப்பீடு மற்றும் ரேடியோ அலைவரிசை அடையாளம் காணும் (RFID)
டேக் அடிப்படையிலான தள்ளுபடிகள் போன்ற இத்துறையில் முன்னணி
அம்சங்களை இது கொண்டுள்ளது.
முழுமையான வீட்டுப்
பாதுகாப்பு காப்பீடு (கம்ப்ளீட் ஹோம் புரொடெக்ட்): இது
ஆரம்பக்கட்ட வீடுகள் முதல் உயர்ரக ஆடம்பர குடியிருப்பு சொத்துக்கள் வரை உள்ள
வீட்டு உரிமையாளர்களுக்காக வடிவமைக்கப்பட்ட ஒரு மாற்றியமைக்கக்கூடிய மற்றும் விரிவான வாழ்க்கைமுறை பாதுகாப்புத் தீர்வாகும். இந்த புராடக்ட் வீட்டின் உட்புறங்கள், நகைகள், கலைப்பொருட்கள், சேகரிப்புகள்,
வீட்டு உபயோகப் பொருட்கள் ஆகியவற்றைப் பாதுகாக்கிறது. மேலும்
இத்துறையிலேயே முதன்முறையாக, பணமில்லா பல வீட்டு உதவி சேவைகளையும்,
30 ஆண்டுகள் வரையிலான பாலிசி கால விருப்பங்களையும் வழங்குகிறது.
அத்துடன், நுகர்வோரின் மாறிவரும் தேவைகளைப் பூர்த்தி
செய்யும் வகையில், நீண்டகால பாலிசிகளுக்கு ஆண்டுதோறும்
நிலையான மூலதன மதிப்பீட்டையும், வீடு வாழத் தகுதியற்றதாக
மாறினால் கூடுதல் வாழ்க்கைச் செலவுகளையும் இது வழங்குகிறது.
சேவை அனுபவத்தை
மேம்படுத்துதல்
டிஜிட்டல் கிளை @சித்திவிநாயக் (இத்துறையில் முதன்முறை): நலவாழ்வு, மோட்டார் வாகனம், பயணம் ஆகிய
காப்பீடுகளுக்கான சுய-சேவை மற்றும் வழிகாட்டப்பட்ட சேவைகளை ஒருங்கிணைக்கும்,
மெட்ரோ போக்குவரத்துப் பகுதியில் அமைந்துள்ள இந்தியாவின் முதல்
டிஜிட்டல் காப்பீட்டுக் கிளை இதுவாகும். இது பாலிசி வாங்குதல், புதுப்பித்தல்கள், உரிமை கோரிக்கைகள் பதிவு மற்றும்
அதைக் கண்காணித்தல், ஆன்லைன் கேஒய்சி, ஆவணச்
சமர்ப்பிப்பு, டிஜிட்டல் சேவைகள் ஆகியவற்றை வழங்குகிறது. இக்கால வாடிக்கையாளர்கள் எதிர்பார்க்கும் உடனடி, தடையற்ற மற்றும் பயணத்தின் போதே பெறக்கூடிய சேவைகளுக்கு ஏற்ப இக்கிளை
அமைந்துள்ளது.
மோட்டார் சர்வீஸ் அஷ்யூர்
(இத்துறையில் முதன்முறை): வாகனம் பழுதடையும் போது அல்லது விபத்துக்குள்ளாகும் போது
பேட்டரி சார்ஜிங் ஆதரவு, வாகனத்தை இழுத்துச் செல்லுதல், சிறிய அளவிலான ஆன்-சைட் பழுதுபார்ப்புகளை வழங்கும், குறிப்பிட்ட நேரத்திற்குள் உத்தரவாதம் அளிக்கும் ஒரு அவசர உதவிச் சேவை ஆகும். இது இந்தியாவின் 15 நகரங்களில்,
24x7 மணி நேரமும், 30 நிமிடச் சேவை உறுதிப்பாட்டை வழங்குகிறது. இந்தத் திட்டம் சேவையின் நம்பகத்தன்மையை
வலுப்படுத்துவதுடன், அதிக மன அழுத்தமான சூழ்நிலைகளில்
வாடிக்கையாளர் அனுபவத்தை மேம்படுத்துகிறது. மேலும், துல்லியமான,
நேர வரம்பிற்குட்பட்ட, உயர்தர உதவிக்கான
ஐசிஐசிஐ லொம்பார்ட்டின் அர்ப்பணிப்பை இது மீண்டும் உறுதிப்படுத்துகிறது.
மோட்டார் சகாயக்: இது தனியார் கார்
வாடிக்கையாளர்களுக்கான ஒரு பிரீமியம் சேவை சலுகையாகும், இது
வாகனம் தொடர்பான அவசரநிலைகளின் போது உடனடி உதவியை வழங்குகிறது. இது அவசர உதவி,
சட்ட மற்றும் நடைமுறை சார்ந்த உதவிகள், பாதுகாப்பு
தொடர்பான செலவினங்களுக்கான திருப்பிச் செலுத்துதல், வாகன ஆவண
உதவி ஆகியவற்றை ஒருங்கிணைத்து, வாடிக்கையாளர்களுக்கு
முழுமையான மன அமைதியை வழங்குகிறது.
சிறப்பு சேவை மையம்: ஐசிஐசிஐ
லொம்பார்ட்டின் ஒருங்கிணைந்த சேவை சலுகை (Unified Service Offering) தற்போது சிறப்பு சேவை மையங்கள் மூலம் மேலும் தனிப்பயனாக்கப்பட்டு உள்ளது. மூத்த குடிமக்கள் மற்றும் பிற முன்னுரிமை பெற்ற வாடிக்கையாளர்
பிரிவினருக்கு விரைவான மற்றும் தடையற்ற சேவை அனுபவத்தை வழங்குவதற்காக, முன்னுரிமை அணுகல் மற்றும் தனிப்பயனாக்கப்பட்ட உதவியை வழங்கும் வகையில்
இவை வடிவமைக்கப்பட்டுள்ளன.
ஏஐ-வழிகாட்டுதல் புதுமைகள்
வாய்ஸ் ஏஐ (இத்துறையில்
முதன்முறை): குரல் அடிப்படையிலான ஏஐ மூலம் இயக்கப்படும் இந்த வாடிக்கையாளர்கள் செயல்பாட்டுத் தளம், ஒரு மேம்பட்ட உரையாடல் தீர்வாகும். இது பாலிசி தொடர்பான கேள்விகள் மற்றும்
மாற்றங்கள் முதல், தடையற்ற பாலிசி வாங்குதல் மற்றும் கட்டணப் பூர்த்தி வரை ஒட்டுமொத்த காப்பீட்டுப் பயணத்திலும்
இயல்பான, மனித குரல் போன்ற தொடர்புகள் மூலம்
வாடிக்கையாளர்களுக்கு ஆதரவளிக்கிறது. இது இந்தி, ஆங்கிலம்
ஆகிய மொழிகளில் வாடிக்கையாளர்களுடன் உரையாடுகிறது. மேலும் 24x7
மணிநேரமும் கிடைக்கக்கூடிய இச்சேவையின் மூலம், வாடிக்கையாளர்கள் தங்களுக்கு வசதியான எந்த நேரத்திலும் தங்களைத் திரும்பத்
தொடர்புகொள்ளுமாறு கோரலாம்.
இந்த வாய்ஸ் பாட் ஒரு விற்பனை முகவராகவும் செயல்படும் வகையில் பயிற்சியளிக்கப்பட்டு உள்ளது.
இது அழைப்பின் போதே வாடிக்கையாளருக்கான பரிந்துரை முதல்
கட்டணம் செலுத்துவது வரையிலான ஒட்டுமொத்த செயல்முறையையும் நிறைவு செய்கிறது.
ஐசிஐசிஐ லொம்பார்ட் இந்த முகவர் மூலம் 1 மில்லியனுக்கும்
அதிகமான அழைப்புகளை வெற்றிகரமாக முடித்துள்ளது, மேலும் இந்த
எண்ணிக்கை ஒவ்வொரு நாளும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
தனிப்பயனாக்கப்பட்ட பயணத்
திட்டமிடுபவர் (இத்துறையில் முதன்முறை): எங்களது உரையாடல்
அடிப்படையிலான பயணத்திட்டம் (Conversational Travel Itinerary) என்பது
”ஐ வில் டேக்கேர்” ('IL TakeCare') ஆப்பில் கிடைக்கக்கூடிய
ஒரு ஏஐ மூலம் இயங்கும் பயணத் திட்டமிடுபவர் ஆகும். பயனர்கள்
தங்களின் சேருமிடம், பயணத் தேதிகள்,
பட்ஜெட் மற்றும் ஏதேனும் தனிப்பட்ட விருப்பங்களைப் பகிர்ந்தால்
போதும். இது உடனடியாக நிகழ்நேரத்தில் மாற்றியமைக்கக்கூடிய,
விரிவான நாள் வாரியான பயணத்திட்டத்தை, அதனுடன்
இணைக்கப்பட்ட காப்பீட்டுச் சலுகையுடன் உருவாக்குகிறது. பயணிகள் தங்களின் பல நாள்
திட்டத்தைப் பார்க்கலாம், வரைபட வழிகளைக் கண்டறியலாம் மேலும் சரியான நேரத்தில் நினைவூட்டல்களைப் பெறலாம். இது பயணத் திட்டமிடலை
தடையற்றதாகவும் எளிதானதாகவும் மாற்றுகிறது. மிக முக்கியமாக, வாடிக்கையாளர்கள்
பயணத் திட்டமிடலுடன் சேர்த்தே தங்களின் பயணக் காப்பீட்டையும் செயலாக்கிக் கொள்ள
முடியும்.
ஸ்மார்ட் ஹெல்த்
அண்டர்ரைட்டிங் (இத்துறையில் முதன்முறை): மருத்துவக்
காப்பீட்டிற்கான ஏஐ மூலம் இயங்கும் காப்பீட்டு ஒப்புதல்
செயல்முறையானது, வாடிக்கையாளர்களுக்கு அவர்களின் வசதிக்கேற்ப
எப்போது வேண்டுமானாலும், எங்கு வேண்டுமானாலும் வேகமான,
தடையற்ற மற்றும் எளிமையான இறுதி-வரை சேவை அனுபவத்தை வழங்குவதற்காக
வடிவமைக்கப்பட்டுள்ளது. இது தனிப்பயனாக்கப்பட்ட கேள்விகளுடன் கூடிய
சுய-வழிகாட்டுதல் டிஜிட்டல் பயணத்தை வழங்குகிறது. இதனை ஏஐ நிகழ்நேரத்தில்
மதிப்பீடு செய்து, காப்பீட்டு ஒப்புதல் விதிகளுக்கு
இணங்கவும் சீராகவும் முடிவுகளை எடுக்கிறது
ஐசிஐசிஐ லொம்பார்ட் தனது அடுத்த அத்தியாயத்தில் காலடி
எடுத்து வைக்கும் வேளையில், இந்த புதுமைகள் 25
ஆண்டுகளாக மாறாமல் இருக்கும் ஒரு வாக்குறுதியை மீண்டும் உறுதிப்படுத்துகின்றன
- அது வாடிக்கையாளர்கள் எங்கிருந்தாலும் அவர்களுடன் இருப்பதும், அவர்கள் மதிக்கும் அனைத்தையும் பாதுகாப்பதும்
ஆகும்.
.jpg)
