"இந்தியாவின் மோஸ்ட் வான்டட் வீடு!". இரண்டு நாடுகளைப் பிரிக்கும் ஒரே வீடு. வியக்க வைக்கும் வீடு.!!!
ஒரே வீட்டுக்குள் இருந்து கொண்டு இரண்டு நாடுகளுக்குப் பயணம் செய்ய முடியுமா?
கற்பனைக்கு எட்டாத இந்தச் சம்பவம் இந்தியாவின் நாகாலாந்து மாநிலத்தில் நிஜமாகவே நடந்து வருகிறது.
நாகாலாந்தின் மோன் மாவட்டத்தில் உள்ள லோங்வா (Longwa) கிராமத்தில்தான் இந்த விசித்திர வீடு அமைந்துள்ளது. இந்தக் கிராமத்தின் ராஜாவான அங்க் (Angh) என்பவரது வீடு, இந்தியா மற்றும் மியான்மர் ஆகிய இரு நாடுகளின் சர்வதேச எல்லைக்கு நடுவே சரியாக அமைந்துள்ளது.
இந்த வீட்டின் சமையலறை மியான்மர் நாட்டிலும், படுக்கையறை இந்திய எல்லைக்குள்ளும் இருக்கிறது. அதாவது, இந்த வீட்டில் வசிப்பவர்கள் காலை உணவைச் சமைக்க மியான்மர் சென்றுவிட்டு, தூங்குவதற்கு இந்தியாவுக்குத் திரும்பி வருகின்றனர்.
இதற்கு எந்தவித பாஸ்போர்ட் அல்லது விசா நடைமுறைகளும் தேவையில்லை. 'கோன்யாக்' பழங்குடியின மக்கள் வாழும் இந்தக் கிராமத்தில், எல்லை என்பது ஒரு கோடு மட்டுமே; அது தங்களின் உறவையோ அல்லது வாழ்க்கையையோ பிரிக்காது என அவர்கள் நம்புகின்றனர்.
சுற்றுலாப் பயணிகளை வெகுவாகக் கவர்ந்து வரும் இந்த வீடு, இரு நாடுகளுக்கு இடையிலான கலாச்சாரப் பாலமாகத் திகழ்கிறது. எனினும், எல்லைகளில் வேலி அமைக்கும் பணிகள் நடந்தால் தங்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படுமோ என்ற கவலை இப்பகுதி மக்களிடையே எழுந்துள்ளது.
வாட்ஸ் அப்பில் பலம் வந்தது
