2026–2028-ம் ஆண்டிற்கான கிரெடாய் சென்னை தலைவராக மெஹுல் ஹெச் தோஷி பொறுப்பேற்பு Credai Chennai
சென்னை, ஏப். 26-
2026:
கிரெடாய் சென்னையின் 10-வது தலைவராக தோஷி
ஹவுசிங் நிறுவனத்தின் இயக்குனர் மெஹுல் ஹெச் தோஷி இன்று பதவி ஏற்றுக் கொண்டார்.
சென்னையில் நடைபெற்ற பதவி ஏற்பு விழாவில் அவருடன், 2026-2028-ம் ஆண்டிற்கான புதிய நிர்வாகிகளும், செயற்குழு
உறுப்பினர்களும் பொறுப்பேற்றுக் கொண்டனர். இந்த விழாவில், மத்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை செயலாளர் எஸ்.
கிருஷ்ணன் தலைமை விருந்தினராகக் கலந்து கொண்டார்.
தேசிய கிரெடாய் துணைத் தலைவர் எம். ஏ.
மெகபூப் கவுரவ விருந்தினராகப் பங்கேற்றார். மேலும், தேசிய கிரெடாய் செயற்குழு உறுப்பினர் எஸ். ஸ்ரீதரன், இணைச் செயலாளர் சுரேஷ் கிருஷ்ண் மற்றும் தமிழ்நாடு கிரெடாய் தலைவர் டபிள்யூ.
எஸ். ஹபீப் உள்ளிட்ட மூத்த நிர்வாகிகளும் பங்கேற்றனர்.
கிரெடாய் சென்னை தலைவர் மெஹுல் ஹெச்
தோஷி தலைமையிலான புதிய நிர்வாகக் குழுவில் செயலாளராக சுமன் வூரா, பொருளாளராக எஸ். எஸ். பிரசாத் பாபு, துணைத் தலைவர்களாக
டி.எஸ்.எஸ். கிருஷ்ணன்,
விஸ்வஜித் குமார் ஆகியோர் பொறுப்பேற்றுக் கொண்டனர்.
2026-2028ம் ஆண்டிற்கான செயற்குழு உறுப்பினர்களாக பி. கிருத்திவாஸ், அஸ்லம் முகமது,
மோதிஷ் குமார், பி. விஜய் குமார், விமல் லுனாவத் மற்றும் துர்கா சதீஷ் ஆகியோரும் பொறுப்பேற்றனர்.

Mr. Mehul H Doshi, President , CREDAI Chennai
இந்த நிகழ்ச்சியில், புதிதாக பதவி ஏற்ற கிரெடாய் சென்னையின் தலைவர் மெஹுல் ஹெச் தோஷி பேசுகையில்
"கிரெடாய் சென்னையை வழிநடத்தும் பொறுப்பை ஏற்றுக்கொள்வது
எனக்குக் கிடைத்த பெருமையாகும். சென்னை நகரம் மிகப்பெரிய வளர்ச்சிக்குத் தயாராக
உள்ளது. வெளிப்படையான,
முற்போக்கான மற்றும் எதிர்காலத்திற்கு ஏற்ற ஒரு ரியல் எஸ்டேட்
துறையை உருவாக்குவதற்காக,
சம்பந்தப்பட்ட அனைவருடனும் இணைந்து பணியாற்றுவதே எங்களின்
முக்கிய நோக்கமாக இருக்கும்" என்றார்.
மேலும் 2026-2028-ம் ஆண்டிற்கான செயல்திட்டமானது அரசு, கட்டுமான நிறுவனங்கள், சமூகம் மற்றும் வாடிக்கையாளர்கள் ஆகிய நான்கு முக்கிய தூண்களை அடிப்படையாகக்
கொண்டு "சிறந்த சென்னையை உருவாக்குவோம்" என்ற இலக்கை அடிப்படையாகக்
கொண்டு இருக்கும் என்று தெரிவித்தார். இந்த நான்கு தூண்களும் ஒருங்கிணைந்து
செயல்பட்டால் மட்டுமே உண்மையான வளர்ச்சியை அடைய முடியும் என்றும் அவர் கூறினார்.
முற்போக்கான,
அனைவரையும் உள்ளடக்கிய, நிலைத்து நிற்கக்கூடிய
மற்றும் எதிர்காலத்திற்குத் தயாரான ஒரு சிறந்த சென்னையை உருவாக்குவதற்கான கூட்டு
முயற்சியாக ஒவ்வொரு திட்டமும் அமையும் என்றார்.
இந்நிகழ்ச்சியில் இந்திய
அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை செயலாளர் எஸ். கிருஷ்ணன் பேசுகையில், அடுத்தக் கட்ட வளர்ச்சியை ரியல் எஸ்டேட் துறை முன்னெடுத்துச் செல்லும் ஒரு
முக்கியமான கட்டத்தில் சென்னை உள்ளது. உலகளாவிய திறன் மையங்களின் விரைவான
விரிவாக்கத்திற்கு உதவுவது முதல், உயர்தரமான மற்றும்
சுற்றுச்சூழலுக்கு உகந்த அலுவலக இடங்களை உருவாக்குவது வரை, எதிர்காலத்திற்கு ஏற்ற ஒரு நகரத்தை உருவாக்குவதில் கட்டுமான நிறுவனங்களுக்கு
முக்கிய பங்கு உள்ளது. அதே நேரத்தில், சாமானிய மக்களுக்கு சேவை
செய்யும் வகையில் அவர்களின் தேவைகளையும் நாம் பூர்த்தி செய்ய வேண்டும்.
முற்போக்கான திட்டங்கள்,
விரிவடையும் மெட்ரோ ரயில் மற்றும் வெளிப்படைத்தன்மை
ஆகியவற்றின் காரணமாக நகர்ப்புற மேம்பாட்டில் சென்னை முன்னுதாரணமாக திகழும் என்று
தெரிவித்தார்.
கிரெடாய் தேசிய அமைப்பின்
துணைத் தலைவர் எம். ஏ. மெகபூப் பேசுகையில், இந்த ஆண்டு, எங்கள் துறையின் சமுதாய மேம்பாடாக மரம் நடுதல் மற்றும் காடுகளை வளர்ப்பதற்கு
கிரெடாய் தேசிய அமைப்பு அதிக முக்கியத்துவம் அளிக்கிறது. தமிழ்நாடு அரசுடன்
இணைந்து நிலங்களை அடையாளம் கண்டு, குறிப்பாக மேற்குத்
தொடர்ச்சி மலைப்பகுதிகளில் சிறப்பான காடு வளர்ப்பு முயற்சிகளை மேற்கொள்ளுமாறு
கிரெடாய் சென்னை மற்றும் தமிழ்நாடு அமைப்புகளை நான் கேட்டுக்கொள்கிறேன். எங்களின்
புதிய முயற்சியின் மூலம்,
தாங்கள் விற்கும் ஒவ்வொரு வீட்டிற்கும் 30 மரக்கன்றுகளை நடுவதை ஒவ்வொரு கட்டுமான நிறுவனமும் செய்ய ஊக்குவிக்கிறோம்.
இதன் மூலம் வீடு வாங்குபவர்களுக்கு உரிமை, சான்றிதழ் மற்றும்
அவர்களின் பசுமைப் பங்களிப்பைக் கண்காணிக்கும் திறன் ஆகியவை வழங்கப்படுகின்றன. இது
வெறும் அடையாளத்திற்காக மரம் நடுவதைத் தாண்டி, சுற்றுச்சூழலைத்
தொடர்ந்து பாதுகாக்கும் ஒரு நடவடிக்கையாக மாற வேண்டும் என்றார்.
கிரெடாய் தேசிய
அமைப்பின் செயற்குழு உறுப்பினர் எஸ். ஸ்ரீதரன், கிரெடாய் தேசிய இணைச்
செயலாளர் சுரேஷ் கிருஷ்ண் மற்றும் கிரெடாய் தமிழ்நாடு தலைவர் டபிள்யூ. எஸ். ஹபீப் ஆகியோர், பதவி ஏற்பு விழாவின் போது புதிதாகப் பொறுப்பேற்றுக் கொண்ட குழுவினருக்கு
வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டனர்.