மொத்தப் பக்கக்காட்சிகள்

பெண்கள் ஆண்களிடம் இதைத்தான் எதிர்பார்க்கிறார்கள்... Women

பெண்கள் ஆண்களிடம் இதைத்தான் எதிர்பார்க்கிறார்கள்...

எல்லா பெண்களும் ஆண்களிடம் வீடு, கார், ஆறு டிஜிட்ல சம்பளம், அழகு எதிர்ப்பார்ப்பதில்லை.

நல்ல பக்குவமான பெண்களுக்கு தெரியும் வாழ்க்கையின் அர்த்தமும் அதன் தேவையும். அப்படிப்பட்டவர்கள் ஆண்களிடம் எதிர்ப்பார்ப்பது,

• தனக்காக ஒருவன். பெண் எப்பவுமே மற்றவர்களுக்காக வாழக்கூடிய ஜீவன். அதனாலயே அவள் தனக்கான ஒருவன் இருக்க வேண்டும் என்று ஆசைப்படுவாள். சாப்பிட்டியா, எப்படி இருக்கன்னு தன்னைப்பற்றி சிந்திக்கும் ஒருவன் வேண்டும்னு நினைப்பாங்க. அப்படி ஒரு ஆண் கிடைத்தால், கண்டிப்பா அந்த பெண் அவனை பொக்கிஷம் போல பார்த்துப்பாள்.

• பெண்கள் அதிகமா காதல் வைச்சிட்டா அவங்களுக்கு பொஸஸிவ்வும் அதிகமா இருக்கும். தன்னுடையவன் மற்ற பெண்களிடம் சிரிச்சி பேசுறது கூட சின்ன கோபத்தை உண்டுப்பண்ணும். அதை புரிந்து ஆண்கள் நடந்துக்கிட்டா நல்லாயிருக்கும்.

• சோகமாக இருக்கும் பொழுது தோள் குடுக்கும் ஒரு தோழனாய். கண்ணீரை துடைத்துவிடும் ஒரு காதலனாய். அரவனைப்பு தருவதில் ஒரு தாயாக இருக்கும் ஆண்மகன் வேண்டும்.

• பெண் எல்லாரையும் நினைத்து அழ மாட்டாள், எல்லாரையும் பார்த்து சிரிக்கவும் மாட்டாள். இதையெல்லாம் உங்களுக்காக பண்ணுனா நீங்க எவ்வளவு ஸ்பெஷல்ன்னு தெரிஞ்சிக்கோங்க. அதை விட்டுட்டு ஏன் எப்பவும் அழுமூஞ்சா இருக்கன்னு கேட்காதீங்க.

• நீங்க எங்க இருக்கீங்க, எப்படி இருக்கீங்ஙன்னு அடிக்கடி கால் பண்ணிக்கேட்பதற்க்கு காரணம் நீங்க பத்திரமா இருக்கீங்களானு பார்க்க தான். அதுதெரியாமல் ஏன் அடிக்கடி கால் பண்ணி நச்சரிக்கிரன்னு திட்டாதீங்க.

• 24 மணி நேரமும் வேலையிலேயே பிஸியாக இருக்கும் ஆண்களே! உங்கள் கடைக்கண் பார்வைக்காக ஏங்கும் பெண்ணை பார்க்க கூடாதா?

• தன்னை பெருமையாக பார்க்கும், தனக்கு சரிசமமான உரிமை தரும், தன் சுயமரியாதையை மதிப்பளிக்கும் ஒரு ஆணே ஒரு பெண்ணின் எதிர்ப்பார்ப்பு.

• மொத்தத்தில் ஒரு பெண் ஆணிடம் எதிர்ப்பார்ப்பது, கொட்டிக்குடுக்கும் அன்பு, கொட்டு கொடுக்காமல் சொல்லும் அறிவுரை, தன்னை குழந்தையை போல பாவிக்கும் மனப்பக்குவம், கோவப்படும் போது கொஞ்சி சமாதான படுத்துவது. இது போல சின்ன சின்ன விஷயங்களை தெரிஞ்சி வைச்சிக்காம பொண்ணுங்களை புரிஞ்சிக்க முடியலைன்னு டையலாக் பேசாதீங்க. 
Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - மாதம்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

ஜாக்கிரதை டிஜிட்டல் கைது

MINISTRY OF HOME AFFAIRS IC Indian Cybor Orme Coordination Contre ஜாக்கிரதை டிஜிட்டல் கைது இது எப்படி நடக்கிறது? மோசடி செய்பவர்கள், உங்கள் ப...