மொத்தப் பக்கக்காட்சிகள்

இந்தியாவின் கேப்டவுனாக கன்னியாகுமரியை மாற்ற காசாகிராண்ட் காண்ட்ராக்ட்ஸ் மற்றும் ஷைன் கோகுளோபல் நிறுவனம் ஒப்பந்தம் Casagrand Contracts

இந்தியாவின் கேப்டவுனாக கன்னியாகுமரியை மாற்ற காசாகிராண்ட் காண்ட்ராக்ட்ஸ் மற்றும் ஷைன் கோகுளோபல் நிறுவனம் ஒப்பந்தம் Casagrand Contracts

------

சிறந்த சுற்றுலா தலமாக மாற்ற 300  மில்லியன் அமெரிக்க டாலர்கள் முதலீடு

 

சென்னை, ஜனவரி  11, 2024:   பருவ கால சுற்றுலா தலமாக விளங்கும் கன்னியாகுமரி நகரினை, தொலைநோக்குப் பார்வையுடன், உணர்வுப்பூர்வமான சுற்றுலாத் தலமாக மாற்றும் நோக்குடன் காசாகிராண்டின் பொறியியல், கொள்முதல் மற்றும் கட்டுமான முயற்சியில் ஈடுபட்டுள்ள காசாகிராண்ட் காண்ட்ராக்ட்ஸ் பிரைவேட் லிமிடெட்  மற்றும் சிங்கப்பூரை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ஷைன் கோகுளோபல் நிறுவனம் ஆகியவை இணைந்து கூட்டாக செயல்பட ஒப்பந்தம் செய்துள்ளன.  'ப்ராஜெக்ட் மேன்' என்ற தலைப்பில், மேற்கொள்ளப்பட உள்ள இந்த திட்டமானது, பிராந்திய மற்றும் உலகளாவிய சிறந்த சுற்றுலாவுக்கான இடமாக கன்னியாகுமரியை மற்ற உள்ளது. மேலும் தேசிய மற்றும் சர்வதேச விருந்தினர்களுக்கான சுற்றுலா சுற்றுச்சூழல் அமைப்பை ஒழுங்கமைத்து, இப்பகுதியை இந்தியாவின் கேப் டவுனாக மாற்ற இருக்கிறது.

 

இந்த புதுமை திட்டத்திற்காக இந்நிறுவனங்கள் 300  மில்லியன் அமெரிக்க டாலர்கள் முதலீடு செய்ய உள்ளன. கன்னியாகுமரியில் ஒரு சிறந்த சுற்றுலா தலத்தை உருவாக்கும் வகையில் முதல் கட்டமாக இந்த திட்டம் 40 ஏக்கரில் அமைய உள்ளது. ப்ராஜெக்ட் மேன் திட்டமானது, கன்னியாகுமரியை பொழுதுபோக்குமிக்க, சுற்றுச்சூழலுக்கு உகந்த ஆரோக்கிய சுற்றுலா மற்றும் மாநாட்டு மையம் ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறது. அத்துடன் அப்பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் பிற தொழில்களுக்கு உறுதுணையாக இருப்பதோடு பொருளாதார வளர்ச்சியிலும் சிறந்த பங்களிப்பை வழங்கும்.

 

ப்ராஜெக்ட் மேன் திட்டத்தில் முதல் கட்டமாக அதிநவீன வசதிகளுடன் கூடிய 1000 இருக்கைகள் கொண்ட மாநாட்டு மையம் அமைய உள்ளது. அதைத் தொடர்ந்து இங்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு சிறந்த ஷாப்பிங் மற்றும் பொழுதுபோக்கு அனுபவத்தை வழங்கும் வகையில் தியேட்டர்கள் மற்றும் 100 கடைகளுடன் கூடிய பிரமாண்ட மால் ஒன்றும் கட்டப்பட உள்ளது. மேலும் இங்கு சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் வளர்ச்சிக்கு உதவிடும் வகையில் ஊக்குவிப்பு மையம் ஒன்றும் அமைக்கப்பட உள்ளதாக இந்நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. இப்பகுதியில் திறமையான மனிதவள மேம்பாட்டிற்கு ஊக்கமளிக்கும் விதமாக தொழில்முறை மற்றும் விருந்தோம்பல் பயிற்சி திட்டங்களும் இங்கு நடத்தப்பட உள்ளன. அத்துடன் 50 அறைகள் கொண்ட ஓட்டல் ஒன்றும் கட்டப்பட உள்ளது. இங்கு வரும் சுற்றுலா பயணிகள் குறைந்த கட்டணத்தில் ஆடம்பரமிக்க சிறப்பான வசதிகளை பெற முடியும். இதனைத் தொடர்ந்து எதிர்காலத்தில் மெட்டாவெர்ஸ் மூலம் ஆன்லைன் மால்கள் மற்றும் கேம்கள் என ஏராளமானவை அறிமுகப்படுத்தப்பட உள்ளன என்றும் அது குறித்த விவரங்கள் விரைவில் வெளியிடப்படும் என்றும் இந்நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

 

இந்த புதுமை திட்டம் குறித்து காசாகிராண்ட் காண்ட்ராக்ட்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி திரு மன்தீப் சிங் கூறுகையில், "தென்னிந்தியாவின் முன்னணி கட்டுமான நிறுவனமாக திகழும் காசாகிராண்ட் பில்டர்ஸ், இந்த அற்புதமான திட்டத்திற்கு உயிர் கொடுக்கம் வகையில் அதன் நிபுணத்துவம் மற்றும் நெட்வொர்க்கைப் பயன்படுத்துவதில் மகிழ்ச்சி அடைகிறது. வளர்ச்சியின் ஒவ்வொரு அம்சத்திலும் வெற்றியை உறுதி செய்வதற்கும், பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிப்பதற்கும், தலைமுறைகளுக்கு ஒரு முக்கிய இலக்கை உருவாக்குவதற்கும் நாங்கள் உறுதிபூண்டுள்ளோம்.   காசாகிராண்ட் காண்ட்ராக்ட்ஸ் நிறுவனம் இந்த முக்கிய திட்டத்தின் ஒரு பகுதியாக இருப்பது குறித்து பெருமைப்படுகிறது, மேலும் இது பொருளாதார வளர்ச்சி, கலாச்சார பரிமாற்றத்திற்கான ஊக்க சக்தியாக இருப்பதோடு, கன்னியாகுமரிக்கு உலக அளவில் அங்கீகாரம் கிடைக்கும். அழகு மிகுந்த கன்னியாகுமரி பகுதியில் இந்த திட்டத்தை நாங்கள் செயல்படுத்துவது என்பது எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது என்று தெரிவித்தார்".

 

ஷைன் கோகுளோபல் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைவர் அசீசா ஜலாலுதீன் கூறுகையில், "இந்தியாவின் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சியில் தமிழ்நாட்டின் பங்கு மிக முக்கியமான ஒன்றாக உள்ளது. யாரும் எதிர்பார்க்காத விதமாக கன்னியாகுமரியில் பொருளாதார வளர்ச்சி மற்றும் சுற்றுலா மேம்பாட்டிற்கான மகத்தான வாய்ப்புகள் உள்ளது. பிராந்தியத்தில் எங்களின் முதல் திட்டமான, ப்ராஜெக்ட் மேன்  திட்டம் எங்களுக்கு மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த திட்டமாகும். இப்பிராந்தியம் மற்றும் தேசத்தின் வளர்ச்சியில் முக்கிய பங்களிக்கும் விதமாகவும், இப்பகுதியின் சுற்றுலா திறனை வெளிப்படுத்துவதற்குமான, ஒரு தனித்துவமான வாய்ப்பாக இதை நாங்கள் பார்க்கிறோம். இதற்காக நாங்கள் காசாகிராண்ட் காண்ட்ராக்ட்ஸ் நிறுவனத்துடன் இணைந்து இருப்பது குறித்து மகிழ்ச்சி அளிக்கிறது" என்று தெரிவித்தார்.

 

மேலும் அவர் கூறுகையில், "காசாகிராண்ட் காண்ட்ராக்ட்ஸ் மற்றும் எங்களின் ஷைன் கோகுளோபல் ஆகியவை புதுமையான மற்றும் நிலையான தீர்வுகளுக்கு முன்னோடி நிறுவனங்களாக உள்ளன, அவை உள்ளூர் பொருளாதாரத்தை மேம்படுத்துவது மட்டுமல்லாமல், உலக வரைபடத்தில் கன்னியாகுமரியை பருவ காலம் மட்டுமல்லாமல் ஆண்டு முழுவதற்குமான முதன்மையான சுற்றுலாத் தலமாக உயர்த்தும்" என்றும் அவர் தெரிவித்தார்.

 

காசாகிராண்ட் கான்ட்ராக்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் என்பது காசாகிராண்ட் குழுமத்தின் ஒரு துணை நிறுவனம் ஆகும். இது நாடு முழுவதும் மருத்துவமனைகள், கல்வி நிறுவனங்கள், வணிக வளாகங்கள் மற்றும் கிடங்குகள் உள்ளிட்ட குடியிருப்புகள், குடியிருப்பு அல்லாத சாலைகள், பாலங்கள் மற்றும் நெடுஞ்சாலைகள் போன்ற உள்கட்டமைப்புகளில் கவனம் செலுத்தி வருகிறது. இந்நிறுவனம் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுடன் கூட்டு சேர்ந்து நாடு முழுவதும் தரமான பிரமாண்ட கட்டுமான பணிகளில் ஈடுபட்டு வருகிறது.

 

காசாகிராண்ட் கான்ட்ராக்ட்ஸ்  பிரைவேட் லிமிடெட் குறித்து: காசாகிராண்ட் குழுமத்தின் துணை நிறுவனமான காசாகிராண்ட் கான்ட்ராக்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் நாடு முழுவதும் நவீன, தனித்துவமான மற்றும் எதிர்கால குடியிருப்பு, குடியிருப்பு அல்லாத மற்றும் வணிக வளர்ச்சிகளை நிர்மாணிப்பதற்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. மருத்துவமனைகள், கல்வி நிறுவனங்கள், வணிக வளாகங்கள், கிடங்குகள் போன்ற பல்வேறு நிறுவனங்களுக்கு மூன்றாம் தரப்பு ஒப்பந்தங்களை மேற்கொள்வதில் இந்த முயற்சி கவனம் செலுத்துகிறது. கூடுதலாக, பிற டெவலப்பர்களுடன் அல்லது நேரடியாக மாநில மற்றும் மத்திய அரசாங்கங்களுடன் இணைந்து சாலைகள், பாலங்கள் மற்றும் நெடுஞ்சாலைகள் உள்ளிட்ட நாட்டின் வேகமாக விரிவடையும் உள்கட்டமைப்புக்கு பங்களிப்பதை நிறுவனம் நோக்கமாகக் கொண்டுள்ளது. காசாகிராண்ட் கான்ட்ராக்ட்ஸ்  காசாகிராண்டின் முக்கிய மதிப்புகளை நிலைநிறுத்துகிறது, இதில் கடுமையான தர சோதனைகள், நவீன பொறியியல் நடைமுறைகள், சரியான நேரத்தில் டெலிவரி, வடிவமைப்பு நிபுணத்துவம், மேம்பட்ட பாதுகாப்பு அமைப்புகள், சிறந்த வசதி மேலாண்மை, நியாயமான விலை மற்றும் பல உள்ளன.

 

காசாகிராண்ட் குறித்து: பேரார்வங்களை உருவாக்குவது மற்றும் மதிப்பினை வழங்குவது மீது பொறுப்புறுதி கொண்ட ஒரு நிறுவனமாக 2004-ல் தொடங்கப்பட்ட காசாகிராண்டு, ஐஎஸ்ஓ சான்றிதழ் பெற்ற ஒரு முன்னணி ரியல் எஸ்டேட் நிறுவனமாகும். சென்னை, பெங்களூரு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய நகரங்களில் 38 மில்லியன் சதுரஅடிக்கும் அதிகமான பரப்பளவில் ப்ரீமியம் தரத்திலான குடியிருப்பு வளாகங்களை இந்நிறுவனம் உருவாக்கியிருக்கிறது. 140-க்கும் அதிகமான குடியிருப்பு வளாகங்களில் சிறந்த வசதிகளோடு வசித்துவரும் 37,000-க்கும் கூடுதலான மகிழ்ச்சியான குடும்பங்கள் இந்நிறுவனத்தின் அர்ப்பணிப்பு உணர்விற்கும் பொறுப்புறுதிக்கும் சாட்சியமாக திகழ்கின்றன. எமது நம்பிக்கையை பிரதிபலிக்கின்ற உயர்தரத்திலான வாழ்விட அமைவிடங்களை உருவாக்குவது என்ற கோட்பாட்டின் அடிப்படையில் இந்நிறுவனத்தின் பயணம் பத்தொன்பதாவது ஆண்டில் கால்பதித்திருக்கிறது. ரூ.8000 கோடிக்கும் அதிகமான மதிப்பில் பல செயல்திட்டங்களை மேற்கொள்ளவிருக்கும் காசாகிராண்டு, நிலைத்து நீடிக்கும் மதிப்பீடுகள், நேர்மை மற்றும் தரம் ஆகிய உயரிய பண்பியல்புகளை கொண்டு இன்னும் சிறப்பான வளர்ச்சியை நோக்கி பயணிக்கிறது.

 

 

Photo Caption:

 

Mr. Mandeep Singh, COO of Casagrand Contracts signing MoU with Dr.h.c Azeeza Jalaludeen, Founder and Chairperson, Our SHINE GOGLOBAL Ltd

Mr. Mandeep Singh, COO of Casagrand Contracts with Dr. H. C Azeeza Jalaludeen, Founder and Chairperson, Our SHINE GOGLOBAL Ltd

 

 

Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - 365 நாள்கள்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

அவசர அவசிய உதவி எண்கள் help

*🔹🔸அவசர அவசிய உதவி எண்கள்* 1 அவசர உதவி அனைத்திற்கும் 911/112 2 வங்கித் திருட்டு உதவிக்கு 9840814100 3 மனிதஉரிமைகள் ஆணையம் 044-22410377 4 ம...