மொத்தப் பக்கக்காட்சிகள்

முதலீட்டு ஆலோசகர் திரு. ஏ.கே. நாராயணன் எழுதிய புது நூல்..!

How to Invest Right and Prosper 
 முதலீட்டு ஆலோசகர் ஏ.கே. நாராயணன் எழுதிய புது நூல்..! 

 முதலீட்டு ஆலோசகர்  திரு. ஏ.கே. நாராயணன் எழுதிய 'How to Invest Right and Prosper' என்கிற ஆங்கில நூல் வெளியீட்டு  அண்மையில் விழா சென்னையில் நடந்தது.

முன்னாள் தலைமை தேர்தல் கமிஷனரும் சிடிஎஸ்எல் சேர்மனுமான  திரு. டி.எஸ். கிருஷ்ணமூர்த்தி நூலை வெளியிட்டார்.

முதல் பிரதியை சுந்தரம் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் திரு. சுனில் சுப்ரமணியம் பெற்று கொண்டார்.

ஆஃம்பி அமைப்பின் முன்னாள் சேர்மனும் பிர்லா மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியுமான திரு. ஏ.பாலசுப்ரமணியன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.

 இந்த நூலை துறை சார்ந்த நிபுணர்கள் ஆய்வு செய்தனர்.

முதலீட்டு ஆலோசகர் திரு. வ. நாகப்பன்,  ''ஒரு நல்ல நூலில், அழகிய வடிமைப்பு, எளிய மொழி நடை, நல்ல கருத்து ஆகிய 3 விஷயங்கள் இடம் பெற்றிருக்கும்.இந்த நூலில் அவை இடம் பெற்றிருப்பது சிறப்பு.
இந்த நூலை வாழை இலை சாப்பாடு என்று குறிப்பிடலாம்."நிதி ஆலோசகர் திருமதி.  ஆர்த்தி கிருஷ்ணன் '' ஆசிரியரின் அனுபவ அறிவை இந்தப் புத்தகத்தில் பகிர்ந்து கொண்டிருக்கிறார். வாழ்க்கையில் சந்திக்கும் முதலீடு சம்பந்தமான பிரச்னைகளுக்கு இந்த நூலில் தீர்வு இருக்கிறது."

 முதலீட்டு ஆலோசகர்  திரு. ஷியாம் சேகர்,'' முதலீட்டாளர்கள் அவர்களின் பணத்தை இழந்துவிடக்கூடாது என்பதில் நூலாசியர் மிகத் தெளிவாக இருக்கிறார். பங்குச் சந்தை பற்றிய பயத்தை போக்கி முதலீட்டாளர்களுக்கு தெளிவை ஏற்படுத்தி இருக்கிறார், நூலாசிரியர்"

சார்டட் அக்கவுன்டன்ட் வி.பட்டாபிராம் ''பலதரப்பட்ட முதலீட்டாளர்களை மனதில் கொண்டு  இந்தப் புத்தகம் எழுதப்பட்டுள்ளது."

கிட்டத்தட்ட 900-க்கும் மேற்பட்ட மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டாளர்கள் விழிப்பு உணர்வு கூட்டங்களில் பங்கேற்றிருக்கும் கடந்த 30 ஆண்டுகளாக நிதிச் சேவை துறையில் ஈடுபட்டு வரும் ஏ.கே.நாராயணை பல நிதி ஆலோசகர்கள் மற்றும் முதலீட்டாளர் பாராட்டினர்.

நூலை வாங்க

https://notionpress.com/read/how-to-invest-right-and-prosper

7 நவ., 2018

Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - 365 நாள்கள்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

அவசர அவசிய உதவி எண்கள் help

*🔹🔸அவசர அவசிய உதவி எண்கள்* 1 அவசர உதவி அனைத்திற்கும் 911/112 2 வங்கித் திருட்டு உதவிக்கு 9840814100 3 மனிதஉரிமைகள் ஆணையம் 044-22410377 4 ம...