செலவில்லாமல்
நீங்களே வீடு கட்டட அனுமதி பெறலாம்..! எப்படி?
கி. கேசவமூர்த்தி, நிறுவனர், Goaler
Construction and Properties
ஒரு
குடும்பத்தின் வாழ்நாள் கனவுகளில் மிக முக்கியமானது சொந்த வீடு கட்டுவது. பல ஆண்டுகள்
சேமித்து ஒரு மனையை வாங்கிய பிறகு, வீடு கட்டத் தயாராகும்போது எதிரில் நிற்கும்
முதல் பெரிய விஷயம் கட்டட
அனுமதி.
அலுவலகங்களுக்கு
அலைவது, பல்வேறு ஆவணங்களைச் சமர்ப்பிப்பது, விண்ணப்பத்தின் நிலையைத் தொடர்ந்து
கண்காணிப்பது என கட்டட அனுமதி பெறுவது பொதுமக்களுக்கு முன்பு சிரமமான செயலாக
இருந்தது.
இந்த
நடைமுறையை எளிதாக்கும் நோக்கில் தமிழக அரசு சுயசான்று அடிப்படையிலான கட்டட அனுமதி முறையை (Self-Certification Based Building Approval System)
அறிமுகப்படுத்தியுள்ளது. குறிப்பிட்ட நிபந்தனைகளுக்கு உட்பட்ட குடியிருப்பு வீடுகளுக்கு,
இணையம் வழியாக விண்ணப்பித்து அனுமதி பெறும் வசதி இதில் உள்ளது.
சுயசான்று
முறை என்றால் என்ன?
விண்ணப்பதாரரின்
மனை, சொத்து ஆவணங்கள் மற்றும் கட்டடத் திட்டம் அனைத்தும் தமிழக அரசின்
விதிமுறைகளுக்கு உட்பட்டவை என்று உறுதி அளித்து விண்ணப்பிப்பதே சுயசான்று முறை
ஆகும்.
தேவையான
தகவல்கள் மற்றும் ஆவணங்கள் சரியாக இருந்தால், விண்ணப்ப நடைமுறை எளிதாகும்.
உள்ளாட்சி அலுவலகங்களுக்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை.
இதற்கான
அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்:
https://onlineppa.tn.gov.in/SWP-web/login
முதலில்
பயனர் கணக்கை உருவாக்க வேண்டும். ஆதார் அடிப்படையிலான ஒருமுறை கடவுச்சொல் மூலம்
அடையாளத்தை உறுதி செய்யலாம். கட்டணத்தை ஜிபே, இணைய வங்கி அல்லது மின்னணு கட்டண
முறைகள் மூலம் செலுத்த முடியும்.
யார்
இந்த வசதியைப் பயன்படுத்தலாம்?
இந்த வசதி
அனைத்து வகையான கட்டடங்களுக்கும் பொருந்தாது. குறிப்பிட்ட அளவிலான குடியிருப்பு
வீடுகளுக்காகவே இந்த நடைமுறை உருவாக்கப்பட்டுள்ளது.
பொதுவாக
குறிப்பிடப்படும் தகுதிகள்:
|
விவரம் |
வரம்பு |
|
மனை பரப்பளவு |
2,500
சதுர அடி வரை |
|
கட்டட பரப்பளவு |
3,500
சதுர அடி வரை |
|
பயன்பாடு |
குடியிருப்பு
வீடு |
|
விண்ணப்பம் |
இணையம்
வழியாக |
எனினும், மனை
அமைந்துள்ள இடம், உள்ளாட்சி அமைப்பு மற்றும் நிலத்தின் சட்ட நிலை போன்றவற்றைப்
பொறுத்து விதிமுறைகள் மாறலாம். எனவே விண்ணப்பிக்கும் முன் அதிகாரப்பூர்வ
விதிமுறைகளைச் சரிபார்ப்பது அவசியம்.
முதலில்
மனை ஆவணங்களைச் சரிபாருங்கள்!
வீடு
கட்டுவதற்கு முன்பு கட்டுமானச் செலவு பற்றிய கணக்கை விட முக்கியமானது, மனை
சட்டபூர்வமானதா என்பதை உறுதி செய்வதுதான்.
சொத்து
பத்திரம், தாய்ப் பத்திரம், பட்டா மற்றும் நில அளவு விவரங்கள் அனைத்தும் சரியாக
உள்ளனவா என்பதைப் பார்க்க வேண்டும்.
அங்கீகாரம்
இல்லாத அல்லது சட்டச் சிக்கல் உள்ள மனையில் வீடு கட்டினால், பின்னர் மின்சாரம்,
குடிநீர், சொத்து வரி, வங்கிக் கடன் மற்றும் சொத்து விற்பனை போன்றவற்றில்
பிரச்னைகள் ஏற்படலாம்.
வீட்டின்
அடித்தளம் சிமென்ட் மட்டுமல்ல; சரியான ஆவணங்களும்தான்!
பழைய
மனைகளுக்கு என்ன விதிமுறை?
2016-க்கு
முன்பு பதிவு செய்யப்பட்ட சில வீட்டு மனைகளுக்கு, அவற்றின் ஆவணங்கள் மற்றும் சட்ட
நிலையைப் பொறுத்து வேறுபட்ட பஞ்சாயத்து அப்ரூவல் நடைமுறைகள் இருக்கலாம்.
அதேபோல்,
1976-க்கு முன்பே வீட்டு மனையாகப் பிரிக்கப்பட்ட நிலங்களுக்கு சில விதிவிலக்குகள்
இருக்கக்கூடும்.
ஆனால்,
``பழைய மனை என்பதால் அனுமதி தேவையில்லை'' என்று தன்னிச்சையாக முடிவு செய்யக்
கூடாது. தாய்ப் பத்திரம், பழைய வரைபடம் மற்றும் சம்பந்தப்பட்ட ஆவணங்களை வைத்து
அதிகாரப்பூர்வமாக உறுதி செய்துகொள்வது பாதுகாப்பானது.
என்னென்ன
ஆவணங்கள் தேவை?
விண்ணப்பத்திற்கு
முன்பே தேவையான ஆவணங்களைத் தயாராக வைத்துக்கொள்வது நல்லது.
பொதுவாக,
·
சொத்து
உரிமைப் பத்திரம் (கிரயப் பத்திரம்)
·
தாய்ப்
பத்திரம்
·
பட்டா
·
நில
அளவை தொடர்பான ஆவணங்கள்
·
கட்டட
வரைபடம்
·
தகுதி
பெற்ற பொறியாளரின் சான்று
·
ஆதார்
உள்ளிட்ட அடையாள ஆவணம்
·
தொடர்பு
விவரங்கள்
பழைய வீட்டை
இடித்துவிட்டு புதிய வீடு கட்டினால், சொத்து வரி ரசீது போன்ற கூடுதல் ஆவணங்களும்
தேவைப்படலாம்.
அனைத்து
ஆவணங்களிலும் உள்ள பெயர், நில அளவு மற்றும் விவரங்கள் ஒன்றுக்கொன்று பொருந்துகிறதா
என்பதை முன்கூட்டியே சரிபார்ப்பது மிகவும் முக்கியம்.
வரைபடத்தை
நிபுணரிடம் தயாரிப்பது நல்லது!
விண்ணப்பத்தை
நீங்களே இணையத்தில் செய்யலாம். ஆனால் கட்டட வரைபடத்தை அனுபவமில்லாமல் தயாரிப்பது
சரியான முடிவாக இருக்காது.
பக்கவாட்டு
இடைவெளி, கட்டட உயரம், சாலை இடைவெளி, வாகன நிறுத்துமிடம் மற்றும் மழைநீர்
சேகரிப்பு போன்ற தொழில்நுட்ப விஷயங்கள் இதில் இடம்பெறும்.
எனவே தகுதி
பெற்ற பொறியாளர் அல்லது கட்டடத் திட்ட நிபுணரின் உதவியுடன் வரைபடத்தைத் தயாரிப்பது
நல்லது.
அனுமதிக்
கட்டணம் எவ்வளவு?
பகுதியைப்
பொறுத்து ஒருங்கிணைந்த கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
|
பகுதி |
சதுர அடிக்கு சுமார் கட்டணம் |
|
சென்னை மற்றும் நகராட்சிப் பகுதிகள் |
ரூ.100
|
|
சி.எம்.டி.ஏ. புறநகர் ஊராட்சிகள் |
ரூ.27 |
|
இதர சி.எம்.டி.ஏ. ஊராட்சிகள் |
ரூ.22 |
|
கிராம ஊராட்சிகள் |
ரூ.15 |
தமிழக அரசின்
அறிவிப்புகளுக்கு ஏற்ப கட்டணங்கள் மாறக்கூடும் என்பதால், விண்ணப்பிக்கும் நாளில்
அதிகாரப்பூர்வ இணையதளத்தில் சரிபார்ப்பது அவசியம்.
சுயசான்று
என்றால் பொறுப்பு இல்லையா?
இல்லை.
இதுதான் மிகவும் முக்கியமான விஷயம்.
சுயசான்று
முறை அனுமதி நடைமுறையை எளிதாக்குகிறது. ஆனால், தவறான தகவல்களை வழங்குவதற்கான
பொறுப்பிலிருந்து விண்ணப்பதாரரை விடுவிப்பதில்லை.
தவறான
ஆவணங்கள் அல்லது தவறான தகவல்கள் பின்னர் கண்டுபிடிக்கப்பட்டால் சட்ட ரீதியான
நடவடிக்கைகள் எடுக்கப்படலாம்.
எனவே,
``எப்படியாவது அப்ரூவல் வாங்கிவிடலாம்'' என்ற எண்ணம் ஆபத்தானது.
அனுமதி
கிடைத்த பிறகும் விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டுமா?
அனுமதி பெற்ற
வரைபடத்தின்படியே வீடு கட்டப்பட வேண்டும். தேவையான பக்கவாட்டு இடைவெளியை விட
வேண்டும். சாலைப் பகுதியை ஆக்கிரமிக்கக் கூடாது. தேவையான இடங்களில் வாகன
நிறுத்துமிடம் ஏற்படுத்த வேண்டும்.
மழைநீர்
சேகரிப்பு வசதியும் விதிமுறைகளுக்கு ஏற்ப அமைக்கப்பட வேண்டும்.
பலர் அனுமதி
பெற்ற பிறகு கூடுதல் அறை அல்லது கூடுதல் தளம் கட்ட முயற்சிக்கிறார்கள். இது
பின்னர் பெரிய பிரச்னைகளை ஏற்படுத்தலாம்.
விதிமுறை மீறினால் என்ன ஆகலாம்?
|
விதிமுறை மீறல் |
ஏற்படக்கூடிய விளைவு |
|
தேவையான இடைவெளியை விடாமல் கட்டுதல் |
அபராதம் அல்லது திருத்த நடவடிக்கை |
|
அனுமதியில்லாமல் கூடுதல் தளம் |
சட்ட நடவடிக்கை |
|
சாலை ஆக்கிரமிப்பு |
அகற்றுதல் அல்லது இடிப்பு நடவடிக்கை |
|
தவறான ஆவணங்கள் |
சட்ட ரீதியான நடவடிக்கை |
|
அனுமதி வரைபடத்தை மீறி கட்டுதல் |
திருத்த உத்தரவு அல்லது அபராதம் |
சரியான
அனுமதியால் கிடைக்கும் பலன்கள்
சரியான
அனுமதியுடன் கட்டப்பட்ட வீட்டிற்கு எதிர்காலத்தில் பல நன்மைகள் உள்ளன.
வங்கிக் கடன்
பெறுவது எளிதாகலாம். சொத்தை விற்பனை செய்வதில் சிக்கல்கள் குறையும். மின்சாரம்
மற்றும் குடிநீர் இணைப்புகளுக்கான நடைமுறைகள் எளிதாகும். முக்கியமாக, சொத்தின்
சட்டபூர்வமான நிலை வலுவாக இருக்கும்.
சுயசான்று
அடிப்படையிலான கட்டட அனுமதி முறை, வீடு கட்டும் பொதுமக்களுக்கு நேரத்தையும்
தேவையற்ற அலைச்சலையும் குறைக்கும் ஒரு நல்ல வாய்ப்பு.
ஆனால்,
விண்ணப்பத்தை நீங்களே செய்வது எளிது என்பதற்காக, தொழில்நுட்ப மற்றும் சட்ட விஷயங்களை
அலட்சியப்படுத்தக் கூடாது. சரியான
மனை ஆவணங்கள், விதிமுறைக்கு உட்பட்ட கட்டட வரைபடம் மற்றும் உண்மையான தகவல்கள்
இருந்தால், இடைத்தரகர் செலவைத் தவிர்த்து பல நடவடிக்கைகளை நீங்களே மேற்கொள்ள
முடியும்.
வீடு
அழகாக கட்டப்படுவது மட்டும் முக்கியமல்ல... அது சட்டபூர்வமாகவும் பாதுகாப்பாகவும்
கட்டப்படுவதுதான் உண்மையான நிம்மதி!
கி. கேசவமூர்த்தி, நிறுவனர், www.goaler.co.in
வீடு கட்ட பிளான் போடுவது, கட்டடம் கட்டுவது, உள் அலங்காரம் உள்ளிட்ட அனைத்து தேவைகளுக்கும் Goaler
Construction and Properties நிறுவனத்தை அணுகலாம்.
Kesavamoorthy அவர்கள் Goaler Construction and
Properties நிறுவனத்தின் தலைவராக செயல்பட்டு வருகிறார். இந்த நிறுவனம் சொத்து முதலீட்டு ஆலோசனை, கட்டிட நிர்மாணம் மற்றும் உள் அலங்காரத் திட்டங்கள் போன்ற துறைகளில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
ரியல் எஸ்டேட், சிவில் இன்ஜினியரிங் மற்றும் தொழில்முனைவோர் வளர்ச்சி போன்ற தலைப்புகளில் பல முக்கிய வணிக கூட்டங்கள் மற்றும் நிகழ்ச்சிகளில் அவர் பல தாக்கம் உள்ள உரைகளை வழங்கியுள்ளார்.
அவரது அனுபவங்களும் கருத்துகளும் பல தொழில்முறை நிபுணர்களையும் புதிய தொழில்முனைவோர்களையும் தொடர்ந்து ஊக்குவித்து வருகின்றன.
பல ஆண்டுகளாக மதிப்புமிக்க வணிக மற்றும் சமூக அமைப்புகளில் பல்வேறு தலைமைப் பொறுப்புகளை அவர் வகித்துள்ளார். மேலும் பல தேசிய மற்றும் சர்வதேச வணிக மற்றும் சமூக அமைப்புகளில் செயலில் ஈடுபட்ட உறுப்பினராகவும் உள்ளார்.
வலுவான சர்வதேச வணிக வலையமைப்பை கொண்டுள்ள அவர், United Arab Emirates, United States, Canada, United Kingdom, Switzerland, Singapore, Malaysia, மற்றும் Japan போன்ற நாடுகளில் உள்ள வணிக நிபுணர்களுடன் நெருங்கிய தொடர்புகளை கொண்டுள்ளார்.
நாணயம் விகடன் இதழில் வெளியான கி. கேசவமூர்த்தி கட்டுரைகளை படிக்க https://bit.ly/4uczNkb
மின்னஞ்சல்: info@goaler.co.in, kesavamoorthy1985@gmail.com
தொலைபேசி எண்கள்: 044 - 3500 3771, +91 81222
11118
டோல் ஃப்ரீ எண்: 1800 419 9004
முகவரி:
கோலர் கன்ஸ்ட்ரக்ஷன் அண்ட் ப்ராப்பர்டீஸ் (Goaler Construction and Properties)
பிளாட் எண்:
18A, முதல் மேன் ரோடு,
ராஜீவ் நகர், வானகரம்,
சென்னை – 600 077.
Digital V. Card: https://goaler.co.in/Kesavamoorthy/
