சேமிப்பாளர்,
முதலீட்டாளர்: யாருக்கு எந்த முதலீடு ஏற்றது? Saver, Investor
எல். ஜான் ஸ்டீபன், PRIME INVESTMENTS
மியூச்சுவல் ஃபண்ட் விநியோகஸ்தர்
பேசி 9843096187, ARN - 83254
ஒரே
வருமானம் பெறும் இரண்டு நபர்கள் வாழ்க்கையின் இறுதியில் ஒரே அளவிலான செல்வத்தை
உருவாக்குவார்கள் என்று சொல்ல முடியாது. காரணம், அவர்களின் வருமானம் அல்ல; அந்த
வருமானத்தை அவர்கள் எப்படி பயன்படுத்துகிறார்கள் என்பதுதான்.
ஒருவர்
சேமிப்பாளராக (Saver) இருக்கலாம்; மற்றொருவர் முதலீட்டாளராக (Investor)
இருக்கலாம். இருவரும் பணத்தை ஒதுக்குகிறார்கள். ஆனால் அவர்களின் அணுகுமுறை, நிதி இலக்கு,
மனநிலை மற்றும் முடிவு அனைத்தும் வேறுபட்டதாக இருக்கும்.
சேமிப்பாளர்
பாதுகாப்பை முதன்மையாகக் கருதுகிறார். முதலீட்டாளர் வளர்ச்சியை முதன்மையாகக்
கருதுகிறார். இந்த இருவரில் யார் சரி என்ற கேள்விக்கு ஒரே பதில் இல்லை. உண்மையில்,
இருவரும் சரிதான். ஆனால் எந்த
முதலீடு யாருக்கு பொருத்தமானது என்பதைப் புரிந்துகொள்வது மிகவும் அவசியம்.
சேமிப்பாளர் யார்?
சேமிப்பாளர்
என்பது தன்னுடைய பணத்தை இழக்காமல் பாதுகாப்பாக வைத்திருக்க விரும்புபவர். அவருக்கு
முதலீட்டின் மதிப்பு தினமும் ஏறி இறங்குவது பிடிக்காது. வட்டி / வருமானம் குறைவாக
இருந்தாலும் பரவாயில்லை; ஆனால் முதலீடு பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதே அவரது
எண்ணம்.
அவருக்கு
வங்கி வைப்புத் திட்டம், அஞ்சலக சேமிப்பு, சேமிப்பு கணக்கு, வருங்கால வைப்பு நிதி,
கட்ன் சந்தை சார்ந்த மியூச்சுவல் ஃபண்டுகள் போன்ற பாதுகாப்பான முதலீடுகள்
மனநிம்மதியை அளிக்கும்.
சேமிப்பாளர்,
பங்குச் சந்தை சரிவை ரிஸ்க் ஆகப் பார்க்கிறார். அதனால் அவர் அதிக ஏற்றத் தாழ்வு
உள்ள நிறுவனப் பங்குகள், பங்குச் சந்தை சார்ந்த ஈக்விட்டி ஃபண்ட் முதலீடுகளைத்
தவிர்க்க முயற்சிப்பார்.
முதலீட்டாளர் யார்?
முதலீட்டாளர்
என்பவர் தனது பணம் காலப்போக்கில் வளர வேண்டும் என்று விரும்புபவர். அவர் குறுகிய
கால ஏற்றத் தாழ்வுகளைப் பற்றி அதிகமாக கவலைப்பட மாட்டார். நீண்ட காலத்தில் நல்ல
நிறுவனங்கள், நல்ல ஈக்விட்டி ஃபண்ட் வளர்ச்சி அடையும் என்ற நம்பிக்கையுடன் முதலீடு
செய்கிறார்.
அவருக்கு
பங்குகள், ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகள், மல்டி அசெட் ஃபண்டுகள் போன்ற வளர்ச்சி
வாய்ப்பு உள்ள முதலீடுகள் பொருத்தமானதாக இருக்கும்.
முதலீட்டாளர்,
பங்குச் சந்தை சரிவை ஒரு வாய்ப்பாகப் பார்க்கிறார். நல்ல பங்குகள் மற்றும்
ஈக்விட்டி ஃபண்டுகளை குறைந்த விலையில் வாங்கும் சந்தர்ப்பமாக அதை பயன்படுத்த
முயற்சிப்பார்.
சேமிப்பாளர் மற்றும் முதலீட்டாளர் – அடிப்படை
வித்தியாசம்:
|
அம்சம் |
சேமிப்பாளர் |
முதலீட்டாளர் |
|
முக்கிய
இலக்கு |
பண
பாதுகாப்பு |
செல்வ
வளர்ச்சி |
|
பங்குச்
சந்தை ஏற்றத் தாழ்வு |
ரிஸ்க் |
வாய்ப்பு |
|
கால
அளவு |
குறுகிய
அல்லது மிதமான காலம் |
நீண்ட
காலம் |
|
வருமான
எதிர்பார்ப்பு |
குறைவு |
அதிகம் |
|
மனநிலை |
பாதுகாப்பு |
பொறுமை
மற்றும் வளர்ச்சி |
இந்த
அட்டவணை காட்டுவது, இருவரின் அணுகுமுறையும் முற்றிலும் வேறுபட்டது என்பதே.
பணவீக்கம் – அமைதியான எதிரி:
சேமிப்பாளர்களின்
மிகப் பெரிய சவால் பணவீக்கம். இன்று ரூ.100-க்கு வாங்கும் பொருளை 15
ஆண்டுகளுக்குப் பிறகு ரூ.180 அல்லது ரூ.200 கொடுத்து வாங்க வேண்டிய நிலை வரலாம்.
ஒருவர்
தனது பணத்தை 6% வட்டி தரும் வைப்புத் திட்டத்தில் வைத்திருக்கிறார் என்று
வைத்துக்கொள்வோம். அதே நேரத்தில் பணவீக்கம் 5% என்றால், அவரது பணம் பெயரளவில்
வளர்ந்தாலும், வாங்கும் திறன் பெரிதாக அதிகரிக்காது.
அதனால்,
பாதுகாப்பு மட்டுமே போதாது; பணத்தின் வாங்கும் திறனையும் பாதுகாக்க வேண்டும்.
நீண்ட காலத்தில் யார் அதிக செல்வம் உருவாக்குவார்?
ரூ.10 லட்சம்
முதலீடு செய்து 20 ஆண்டுகள் காத்திருக்கிறோம் என்று வைத்துக்கொள்வோம். ஃபிக்ஸட்
டெபாசிட்டில் ஆண்டுக்கு 6% வட்டி எவ்வளவாக வளரும்? ஈக்விட்டி ஃபண்டில் ஆண்டுக்கு
சராசரி வருமானம் 13% எவ்வளவாக வளரும் என்ப பார்ப்போம்.
₹10 லட்சம் 20 ஆண்டுகளில் எவ்வளவு ஆகும்?
ஒரே
முறையாக ₹10 லட்சத்தை முதலீடு செய்து, கிடைக்கும்
வட்டியையும்/வருமானத்தையும் தொடர்ந்து முதலீட்டிலேயே சேர்த்து, 20 ஆண்டுகள் வைத்திருப்பதாகக்
கருதுவோம்.
20 ஆண்டுகளுக்குப் பிறகு
|
முதலீட்டு வகை |
ஆண்டுக்கு சராசரி விகிதம் |
ஆரம்ப முதலீடு |
10 ஆண்டுகளில் |
15 ஆண்டுகளில் |
20 ஆண்டுகளில் |
20 ஆண்டுகளில் லாபம் |
|
ஃபிக்ஸட்
டெபாசிட் |
6% |
₹10 லட்சம் |
₹17.91 லட்சம் |
₹23.97 லட்சம் |
₹32.07 லட்சம் |
₹22.07 லட்சம் |
|
ஈக்விட்டி
ஃபண்ட் |
13% |
₹10 லட்சம் |
₹33.94 லட்சம் |
₹62.52 லட்சம் |
₹1.15 கோடி |
₹1.05 கோடி |
முக்கியமான வித்தியாசம்
20
ஆண்டுகளுக்குப் பிறகு,
- 6% வளர்ச்சியில்: ₹10 லட்சம் → ₹32.07 லட்சம்
- 13% வளர்ச்சியில்: ₹10 லட்சம் → ₹1.15 கோடி
- இரண்டிற்கும் இடையிலான
வித்தியாசம் சுமார் ₹83.16
லட்சம்.
இதுதான்
நீண்டகால முதலீட்டில் கூட்டு
வளர்ச்சியின் சக்தியை காட்டுகிறது. 13% என்பது 6%-ஐ விட 7% அதிகமாக
இருந்தாலும், 20 ஆண்டுகளில் இறுதி தொகையில் மிகப்பெரிய வித்தியாசம் உருவாகிறது.
இந்த
அட்டவணை ஒரு முக்கியமான உண்மையை வெளிப்படுத்துகிறது. பாதுகாப்பான முதலீட்டில் பணம்
வளர்ந்தாலும், வளர்ச்சி முதலீட்டில் நீண்ட காலத்தில் செல்வம் பல மடங்கு
அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது.
யாருக்கு எந்த முதலீடு?
இளம் வயதினர்:
25 முதல்
35 வயதுக்குள் இருப்பவர்களுக்கு நேரம் அதிகமாக இருக்கும். அதனால் அவர்கள் அதிக
வளர்ச்சி வாய்ப்பு உள்ள முதலீடுகளில் ஒரு பெரிய பகுதியை வைத்திருக்க வேண்டும்.
நடுத்தர வயதினர்:
35 முதல்
50 வயது வரை இருப்பவர்களுக்கு குடும்பப் பொறுப்புகள் அதிகமாக இருக்கும். அதனால்
பாதுகாப்பும் வளர்ச்சியும் சமநிலையாக இருக்க வேண்டும்.
ஓய்வூதியத்திற்கு அருகில் இருப்பவர்கள்:
55
வயதுக்கு மேல் இருப்பவர்களுக்கு மூலதன பாதுகாப்பு முக்கியமாகும். அதனால் நிலையான
வருமானம் தரும் முதலீடுகள் அதிகமாக இருக்கலாம்.
ஒரே நபர் இரண்டாக இருக்க முடியுமா?
ஆம்.
உண்மையில், பெரும்பாலானவர்களுக்கு சேமிப்பாளரும் முதலீட்டாளரும் இருவரும் உள்ளனர்.
உதாரணமாக,
ஒரு குடும்பம் 12 மாத செலவிற்கு சமமான அவசர கால நிதியை வங்கி சேமிப்பு அல்லது
லிக்விட் ஃபண்டில் வைத்திருக்கலாம். அதே நேரத்தில், ஓய்வூதியம், குழந்தைகளின்
கல்வி, செல்வ உருவாக்கம் போன்ற நீண்ட கால இலக்குகளுக்காக பங்கு சார்ந்த
முதலீடுகளில் முதலீடு செய்யலாம்.
இதுவே
சரியான சமநிலை.
ஓர் எளிய வாழ்க்கை உதாரணம்
ரவி
மற்றும் குமார் என்ற இரண்டு நண்பர்கள் மாதம் ரூ.10,000 சேமிக்கிறார்கள் என்று
வைத்துக்கொள்வோம்.
ரவி முழு
தொகையையும் 7% வட்டி தரும் வைப்புத் திட்டத்தில் வைத்தார்.
குமார்
அதில் ரூ.4,000 பாதுகாப்பான முதலீட்டிலும், ரூ.6,000 பங்கு சார்ந்த மியூச்சுவல்
ஃபண்டிலும் முதலீடு செய்தார்.
20
ஆண்டுகளுக்குப் பிறகு, குமாரின் மொத்த செல்வம் ரவியை விட குறிப்பிடத்தக்க அளவு
அதிகமாக இருக்க வாய்ப்பு உள்ளது. காரணம், வளர்ச்சி முதலீட்டின் கூட்டு வளர்ச்சி.
பங்குச் சந்தை சரிவு – சேமிப்பாளருக்கு பயம்,
முதலீட்டாளருக்கு வாய்ப்பு:
கோவிட்
காலத்தில் பங்குச் சந்தை கடுமையாக சரிந்தது.
சேமிப்பாளர்,
“பங்குச் சந்தை மிகவும் ஆபத்தானது” என்று நினைத்திருக்கலாம்.
முதலீட்டாளர்,
“நல்ல நிறுவனங்கள் குறைந்த விலையில் கிடைக்கின்றன” என்று நினைத்திருக்கலாம்.
அடுத்த
சில ஆண்டுகளில் பங்குச் சந்தை மீண்டபோது, அந்தச் சரிவில் முதலீடு செய்தவர்களுக்கு
அதிக வருமானம் கிடைத்தது.
இதனால், பங்குச்
சந்தை ஏற்றத் தாழ்வை நாம் எப்படி பார்க்கிறோம் என்பதே நீண்ட கால முடிவை
தீர்மானிக்கிறது.
நிதி சுதந்திரத்திற்கு என்ன செய்ய வேண்டும்?
நிதி
சுதந்திரம் பெற விரும்புபவர்கள் சேமிப்பை மட்டும் நம்பி இருக்க முடியாது. சேமிப்பு
அவசியம். ஆனால் சேமிப்பு மட்டுமே போதாது. பணம் வளர வேண்டும். அதற்காக ஒரு பகுதி
முதலீடாக மாற வேண்டும்.
ஒரு நல்ல நடைமுறை:
- முதலில் அவசர கால நிதியை
உருவாக்குங்கள்.
- ஆயுள் காப்பீடு மற்றும் மருத்துவக்
காப்பீடு பாதுகாப்பை உறுதி செய்யுங்கள்.
- குறுகிய கால இலக்குகளுக்கு
பாதுகாப்பான சேமிப்பை பயன்படுத்துங்கள்.
- நீண்ட கால இலக்குகளுக்கு
பங்கு சார்ந்த முதலீடுகளை பயன்படுத்துங்கள்.
- ஆண்டுதோறும் முதலீட்டு
ஒதுக்கீட்டை மறுஆய்வு செய்யுங்கள்.
சேமிப்பாளரும்
முதலீட்டாளரும் இருவரும் தவறானவர்கள் அல்ல. இருவரும் சரிதான். ஆனால் அவர்களின் இலக்கு வேறுபடுகிறது. பாதுகாப்பு
தேவைப்படும் பணத்திற்கு சேமிப்பு சரியானது. வளர்ச்சி தேவைப்படும் பணத்திற்கு
முதலீடு சரியானது.
பணத்தை
முழுவதும் சேமிப்பில் வைத்தால் பணவீக்கம் செல்வத்தை மெதுவாகக் குறைக்கக்கூடும்.
முழுவதும் அதிக ரிஸ்க் உள்ள முதலீட்டில் வைத்தால் மன அமைதி பாதிக்கப்படலாம்.
எனவே, சேமிப்பாளரின் பாதுகாப்பையும், முதலீட்டாளரின்
வளர்ச்சியையும் இணைக்கும் சமநிலையான அணுகுமுறையே நீண்ட கால செல்வத்தை உருவாக்கும்
சிறந்த வழியாகும். பாதுகாப்பான சேமிப்பும், திட்டமிட்ட முதலீடும் சேரும்
இடத்தில்தான் உண்மையான நிதி சுதந்திரம் உருவாகிறது.
கூடுதல்
தகவல்கள் மற்றும் முதலீட்டுக்கு….
எல். ஜான் ஸ்டீபன், PRIME INVESTMENTS
AMFI பதிவுசெய்யப்பட்ட மியூச்சுவல் ஃபண்ட் விநியோகஸ்தர்
தொலைபேசி எண்: 9843096187
இமெயில் முகவரி: johnstephen84@gmail.com
ARN - 83254
மதுரையை சேர்ந்த பிரைம் இன்வெஸ்ட்மென்ட்ஸ் நிறுவனம், ஆயுள் காப்பீடு, மருத்துவக் காப்பீடு,
மியூச்சுவல் ஃபண்டுகள், நிதித் திட்டமிடல் ஆகிய சேவைகளை அளித்து வருகிறது.
முன்னணி தனிநபர் நிதி இதழ் நாணயம் விகடனில் எல். ஜான் ஸ்டீபன், எழுதிய கட்டுரைகளைப் படிக்க
https://www.vikatan.com/author/luu-jaannn-sttiipnnn-nirvaak-iykkunr-piraim-innnvesttmennntts
Disclaimer:
மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு
சந்தை ரிஸ்க்களுக்கு உட்பட்டது. முதலீடு செய்யும்
முன் திட்டம் சார்ந்த அனைத்து ஆவணங்களையும் சரியாகப் படித்துப் பார்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. மியூச்சுவல் ஃபண்ட் மூலம் நிச்சயமான ஆதாயங்கள்
கிடைக்கும் என்பதற்கு உத்தரவாதம் கிடையாது.