புதிய முதலீட்டாளர்கள் மியூச்சுவல் ஃபண்டுகளை எப்படி
அணுக வேண்டும்?
சு.ஶ்ரீதரன், நிதி ஆலோசகர், https://www.walletwealth.co.in/
பங்குச்
சந்தை ஏற்றத் தாழ்வுகளால் (Volatility), குறைவான ஃபிக்ஸட் டெபாசிட் வட்டி
விகிதத்தால் பலருக்கும் குழப்பம் ஏற்படலாம். ஆனால், இதே சூழல் புதிய
முதலீட்டாளர்களுக்கு நல்ல வாய்ப்பாகவும் மாறலாம். கட்டுப்பாடு மற்றும் திட்டமிட்ட
அணுகுமுறையுடன் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்தால் நீண்ட காலத்தில் செல்வம்
உருவாக்குவது சாத்தியமே.
பங்குச் சந்தை மாற்றம்: பயமா? வாய்ப்பா?
பங்குச் சந்தை
ஏற்றத் தாழ்வுகள் என்பது இயல்பான ஒன்று. புதிய முதலீட்டாளர்கள் இதை ரிஸ்க் ஆக
மட்டும் பார்க்காமல், குறைந்த விலையில்
பங்குகளில் / குறைவான என்.ஏ.வி மதிப்பில் பங்குச் சந்தை சார்ந்த ஈக்விட்டி
ஃபண்டுகளில் முதலீடு செய்யும் வாய்ப்பாக பார்க்க வேண்டும்.
பங்குச் சந்தை
சரிவில் முதலீடு செய்தால், பின்னர் சந்தை உயரும் போது அதிக லாபம் கிடைக்கும்.
அதனால், சந்தை மாற்றங்களை தவிர்க்காமல், புரிந்து கொண்டு அணுகுவது முக்கியம்.
முதலில் கவனிக்க வேண்டியது: சொத்து ஒதுக்கீடு
முதலீடு
செய்யும் போது முழு தொகையையும் ஒரே வகை சொத்தில் (பங்கு போன்றவை) போடுவது தவறான
நடைமுறை ஆகும்.
சொத்து
ஒதுக்கீடு (Asset Allocation) என்பது உங்கள் பணத்தை பங்குச் சந்தை, கடன் கடன்
சந்தை – எஃப்.டி, கடன் பத்திரங்கள், கடன் ஃபண்டுகள், தங்கம் / வெள்ளி போன்ற
பல்வேறு வகைகளில் பிரித்து முதலீடு செய்வது ஆகும்.
எந்த ஃபண்டில் எவ்வளவு முதலீடு செய்ய வேண்டும்?
|
முதலீட்டு வகை |
சதவீதம் |
விளக்கம் |
|
பங்கு
சார்ந்த ஃபண்ட் |
60% |
அதிக
வளர்ச்சி வாய்ப்பு |
|
கடன்
சார்ந்த ஃபண்ட் |
30% |
நிலைத்தன்மை
மற்றும் பாதுகாப்பு |
|
தங்கம்
/ வெள்ளி சேவிங்ஸ் ஃபண்ட் |
10% |
அபாயத்தை
குறைக்கும் |
இந்த
வகையான பங்கீடு, பங்குச் சந்தை சரிவில் பெரிய இழப்பைத் தவிர்க்க உதவும்.
SIP முறையின் முக்கியத்துவம்:
சீரான
முதலீட்டு திட்ட (Systematic Investment Plan - SIP) முறை புதிய
முதலீட்டாளர்களுக்கு மிகவும் ஏற்றது.
ஒரே
நேரத்தில் பெரிய தொகை முதலீடு செய்வதை விட, மாதந்தோறும் ஒரு நிரந்தர தொகையை
முதலீடு செய்வது நல்லது.
SIP ஏன் முக்கியம்?
- பங்குச் சந்தை உயர்ந்தாலும்,
குறைந்தாலும் முதலீடு தொடரும்
- சராசரி வாங்கும் விலை /
யூனிட் மதிப்பு குறையும்
- கட்டுப்பாடு உருவாகும்
- மன அழுத்தம் குறையும்
இதனால்,
நீண்ட காலத்தில் நல்ல வருமானம் கிடைக்கும்.
உணர்ச்சிகளை கட்டுப்படுத்துங்கள்
பங்குச் சந்தை
சரிந்தால் பயந்து விற்கும் பழக்கம் மற்றும் சந்தை உயர்ந்தால் அதிகமாக வாங்கும்
பழக்கம் முதலீட்டாளர்களுக்கு நஷ்டத்தை தரும்.
அதனால்,
முதலீட்டில் உணர்ச்சியை விட திட்டமிடல் முக்கியம்.
நீண்ட கால நோக்கு அவசியம்
ஈக்விட்டி
மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு என்பது குறுகிய கால லாபத்திற்காக அல்ல. குறைந்தது 5
முதல் 10 ஆண்டுகள் வரை முதலீடு செய்யும் நோக்குடன் இருக்க வேண்டும்.
நீண்ட
காலத்தில் சந்தை ஏற்றத் தாழ்வுகளை சமன் செய்து நல்ல வளர்ச்சி தரும்.
சரியான ஃபண்டை தேர்வு செய்வது எப்படி?
புதிய
முதலீட்டாளர்கள் கீழ்கண்ட அம்சங்களை கவனிக்க வேண்டும்:
- ஃபண்டின் கடந்த கால
செயல்திறன்
- ரிஸ்க் நிலை
- செலவு விகிதம் (Expense
Ratio)
- ஃபண்ட் மேலாளர் அனுபவம்
தவிர்க்க வேண்டிய பொதுவான தவறுகள்
- ஒரே நேரத்தில் முழு தொகை
முதலீடு செய்தல்
- குறுகிய காலத்தில் லாபம்
எதிர்பார்த்தல்
- பங்குச் சந்தை வீழ்ச்சியில்
எஸ்.ஐ.பி முதலீட்டை நிறுத்துதல்
- ஆலோசனை இல்லாமல் தேர்வு
செய்தல்
இந்தத்
தவறுகளை தவிர்ப்பது முதலீட்டு வெற்றிக்கு முக்கியம்.
பங்குச் சந்தை மாறுபாடுகள் பயமளிக்கலாம்.
ஆனால், அதே நேரத்தில் அது புதிய முதலீட்டாளர்களுக்கு நல்ல ஆரம்ப வாய்ப்பாகவும்
அமையும்.
சொத்து
ஒதுக்கீடு, SIP கட்டுப்பாடு, நீண்ட கால நோக்கு ஆகிய மூன்றையும் பின்பற்றினால்,
மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு ஒரு வலுவான செல்வ உருவாக்க கருவியாக மாறும்.
நிதி
உலகில் வெற்றி பெறுவது வேகமாக அல்ல, தொடர்ச்சியாக செயல்படுவதில் தான் உள்ளது.
கூடுதல்
விவரங்கள் மற்றும் முதலீட்டுக்கு..!
சு.ஶ்ரீதரன், நிதி ஆலோசகர், https://www.walletwealth.co.in/
S.Sridharan, Founder, https://www.walletwealth.co.in/
If you need any advice on investments,
do call us at 9940116967.
Team Wallet Wealth,
AMFI Registered Mutual Fund
Distributor
2nd Floor,
No.8A, 2nd Main
Road, Nanganallur,
Chennai – 600 061
Ph: 044-48612114
https://www.walletwealth.co.in/
ARN
173466
மியூச்சுவல்
ஃபண்ட் முதலீடு, மருத்துவக் காப்பீடு, ஆயுள் காப்பீடு உள்ளிட்ட அனைத்து வகையான காப்பீடு
எடுக்கவும், திரு சு..ஶ்ரீதரன்
அவர்களை தொடர்பு கொள்ளலாம்.
முன்னணி
தனிநபர் நிதி மேலாண்மை இதழ் நாணயம் விகடன் –ல் திரு.சு..ஶ்ரீதரன் எழுதிய கட்டுரைகளை படிக்க..https://www.vikatan.com/author/855-sridharan-s
Disclaimer:
மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு சந்தை ரிஸ்க்களுக்கு உட்பட்டது. முதலீடு செய்யும் முன் திட்டம் சார்ந்த அனைத்து ஆவணங்களையும் சரியாகப் படித்துப் பார்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. மியூச்சுவல் ஃபண்ட் மூலம் நிச்சயமான ஆதாயங்கள் கிடைக்கும் என்பதற்கு உத்தரவாதம் கிடையாது.
