சுந்தரம் ஹோம் ஃபைனான்ஸ்; சங்கரன் கோயில் மற்றும் அம்பையில் கிளை SHL
சென்னை,
மார்ச் 25, 2026: சுந்தரம் ஹோம் ஃபைனான்ஸ் தென் தமிழகத்தில் வளர்ந்து வரும் வணிகப்
பிரிவில் தனது இருப்பை விரிவுபடுத்துவதாக அறிவித்துள்ளது. இந்த வாரம் தென் தமிழகத்தில்
உள்ள இரண்டு வரலாற்றுச் சிறப்புமிக்க கோயில் நகரங்களான சங்கரன் கோயில் மற்றும் அம்பாசமுத்திரத்தில்
புதிய வளர்ந்து வரும் வணிகப் கிளைகளைத் திறந்து தனது இருப்பை விரிவுபடுத்தியுள்ளது.
இந்த
பிரிவில் மலிவு வீட்டு வசதி நிதி மற்றும் பணி மூலதனக் கடன்கள் அடங்கும்.
இந்த
பிரிவில் தனது தொடர்ச்சியான விரிவாக்கத்தின் ஒரு பகுதியாக தென் தமிழகத்தில் மேலும்
5 கிளைகளைத் திறக்க திட்டமிட்டுள்ளது. அடுத்த 12 மாதங்களில் இப்பகுதியில் இந்தப் பிரிவில்
ரூ. 200 கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயித்துள்ளது.
இந்த
விரிவாக்கம் குறித்து கருத்து தெரிவித்த சுந்தரம் ஹோம் ஃபைனான்ஸ் நிறுவனத்தின் நிர்வாக
இயக்குநர் டி. லட்சுமிநாராயணன், “நாங்கள் அக்டோபர் 2022-ல் வளர்ந்து வரும் வணிகப்
பிரிவில் கால் பதித்தோம். முதலில் தென் தமிழ்நாட்டில் மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டாரப்
பகுதிகளில் புதிய கிளைகளை அமைத்தோம். கடந்த மூன்றரை ஆண்டுகளில், இந்தப் பிராந்தியத்தில் நாங்கள் 15 கிளைகளை
நிறுவியுள்ளோம். எங்களின் விரிவாக்கத்தின் அடுத்த கட்டத்தில், தென் தமிழ்நாட்டில் உள்ள
அடுக்கு 4 மற்றும் 5 நகரங்களுக்கு விரிவடைந்து, எங்கள் இருப்பை மேலும் வலுப்படுத்த
விரும்புகிறோம்” என்றார்.
சுந்தரம்
ஹோம் ஃபைனான்ஸ் தமிழ்நாடு, ஆந்திரா, தெலங்கானா மற்றும் கர்நாடகா முழுவதும் 100-க்கும்
மேற்பட்ட வளர்ந்து வரும் வணிகக் கிளைகளைக் கொண்டுள்ளது.
டிசம்பர்
31, 2025 அன்று முடிவடைந்த முதல் ஒன்பது மாதங்களுக்கு ரூ. 4911 கோடி வழங்கல் மூலம்
சுந்தரம் ஹோம் ரூ. 212 கோடி நிகர லாபத்தைப் பதிவு செய்துள்ளது.
சுந்தரம் ஹோம் ஃபைனான்ஸ் தொழில் முனைவோருக்கு வீட்டுக் கடன்கள், மனைக் கடன்கள், வீட்டு மேம்பாடு மற்றும் நீட்டிப்பு கடன்கள், மலிவு விலை வீட்டு நிதி, சொத்து அடமானக் கடன்கள் மற்றும் சிறு டிக்கெட் கடன்களை வழங்குகிறது.
