விநாயகர் சதுர்த்தி சிறப்பு கட்டுரை:
முதலீட்டை ஆரம்பிக்க சிறந்த நாள்...!
சிவகாசி மணிகண்டன், நிறுவனர், www.aismoney.com
+ 91 98405 77675, ARN-33652
“அப்பா, விநாயகர்
சதுர்த்தி அன்று புதிதாக ஏதாவது தொடங்கினால் நல்லது என்று சொல்கிறார்களே... இந்த ஆண்டு
என்ன புதிதாகத் தொடங்கலாம்?” என்று கேட்டான் மகன் அருண்.
“இந்த ஆண்டு
ஒரு நல்ல நிதிப் பழக்கத்தைத் தொடங்கு. ஒவ்வொரு மாதமும் சம்பளம் வந்தவுடன் ஒரு குறிப்பிட்ட
தொகையை முதலீடு செய்வதை வழக்கமாக்கு” என்றார் அப்பா.
“மாதம் ₹5,000, ₹10,000 என்று சிறிய தொகையை முதலீடு செய்தால் என்ன பெரிய மாற்றம் வந்துவிடும்?”
என்று அருண் கேட்டான்.
அதற்கு அப்பா
சிரித்துக்கொண்டே, “மரத்துக்கு விதை சிறியதுதான். ஆனால் அது வளர்ந்த பிறகு அதன் நிழல்
பெரியது. முதலீட்டிலும் அதுதான். தொகையைவிட தொடங்கும் பழக்கமும், தொடரும் காலமும்
முக்கியம்!” என்றார்.
விநாயகர் சதுர்த்தி
என்பது விநாயகரை வழிபடும் பண்டிகை மட்டுமல்ல; புதிய முயற்சிகளைத் தொடங்குவதற்கான நல்ல
நாளாகவும் பலரும் கருதுகிறார்கள். அந்த நாளில் ஒரு நல்ல நிதிப் பழக்கத்தைத் தொடங்கினால்,
அது குடும்பத்தின் எதிர்காலத்தையே மாற்றக்கூடும்.
முதலீட்டுக்கு நல்ல நாள் எது?
“பங்குச் சந்தை
நன்றாக இறங்கட்டும்... அடுத்த மாதம் தொடங்கலாம்... போனஸ் வந்ததும் முதலீடு செய்யலாம்...”
என்று பலரும் முதலீட்டைத் தள்ளிப்போட்டுக்கொண்டே இருப்பார்கள்.
ஆனால் முதலீட்டில்
மிகப்பெரிய தடையாக இருப்பது பங்குச் சந்தை ஏற்ற இறக்கம் அல்ல. தொடங்காமல் இருப்பதுதான்!
இன்று ₹5,000-ல் தொடங்கிய முதலீடு, நாளை வருமானம் அதிகரிக்கும்போது
₹10,000 ஆகலாம். அதன்பிறகு ₹15,000 அல்லது ₹20,000 ஆகவும் உயர்த்தலாம். முக்கியமானது, முதலீடு செய்யும் பழக்கம் உருவாக
வேண்டும்.
இதற்காகவே
விநாயகர் சதுர்த்தியை ஒரு புதிய தொடக்க நாளாக எடுத்துக்கொள்ளலாம்.
மந்திரம் 1: “இன்றே தொடங்கு!”
முதலீட்டைத்
தொடங்குவதற்கு மிகப்பெரிய தொகை தேவையில்லை. மாதம் ₹5,000-ல்கூட தொடங்கலாம்.
உதாரணமாக,
மாதம் ₹5,000 முதலீடு செய்து, ஆண்டுக்கு சராசரியாக
13% வருமான வளர்ச்சி கிடைத்தால், 10 ஆண்டுகளில் முதலீடு செய்த மொத்தத் தொகை
₹6 லட்சம். அதன் மதிப்பு சுமார் ₹12.2 லட்சமாக இருக்கும்.
20 ஆண்டுகள்
தொடர்ந்து முதலீடு செய்தால், மொத்த முதலீடு ₹12 லட்சம். அதன் மதிப்பு சுமார் ₹56.7 லட்சமாக இருக்கும்.
இங்கு முதலீடு
செய்த தொகை ₹12 லட்சம் மட்டுமே. ஆனால் நீண்ட கால
கூட்டு வளர்ச்சியின் காரணமாக அதன் மதிப்பு பல மடங்கு உயர்கிறது.
மந்திரம் 2: “முதலில் முதலீடு; பிறகு செலவு!”
சம்பளம் வந்த
பிறகு முதலில் செலவுகளைச் செய்து முடித்துவிட்டு மீதமுள்ள பணத்தை முதலீடு செய்வது பலருடைய
பழக்கம்.
அதற்குப் பதிலாக,
சம்பளம் வந்தவுடன் முதலீட்டுத் தொகையைத் தனியாக எடுத்துவைத்து, மீதமுள்ள பணத்தை வைத்து
செலவுகளைத் திட்டமிடலாம்.
மாதம் ₹10,000 முதலீடு செய்பவர், 10 ஆண்டுகளில் ₹12 லட்சத்தை முதலீடு செய்வார். ஆண்டுக்கு சராசரியாக
13% வளர்ச்சி கிடைத்தால், அந்த முதலீட்டின் மதிப்பு சுமார் ₹24.4 லட்சமாக இருக்கும்.
20 ஆண்டுகளுக்கு
இதே முதலீட்டைத் தொடர்ந்தால், மொத்த முதலீடு ₹24 லட்சம். அதன் மதிப்பு சுமார் ₹1.13 கோடியாக இருக்கலாம்.
இதிலிருந்து
புரிந்துகொள்ள வேண்டியது ஒன்றுதான். சிறிய தொகையை நீண்ட காலம் தொடர்ந்து முதலீடு
செய்வது, பெரிய செல்வத்தை உருவாக்குவதற்கான அடிப்படையாக அமையும்.
மந்திரம் 3: “நீண்ட காலம் நண்பன்!”
முதலீட்டின்
உண்மையான பலன் காலம் செல்லச் செல்லத்தான் தெரியும்.
பங்குச் சந்தையில்
சில ஆண்டுகள் ஏற்றமும் இறக்கமும் இருக்கும். குறிப்பாக பங்குச் சந்தை சார்ந்த
ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்ட் திட்ட முதலீடுகளில் இடைக்கால சரிவுகள் இயல்பானவை.
அதனால், இரண்டு
அல்லது மூன்று ஆண்டுகளில் பணம் தேவைப்படும் இலக்குகளுக்காக ரிஸ்க் உள்ள ஈக்விட்டி முதலீடுகளைத்
தேர்வு செய்வது சரியான அணுகுமுறை அல்ல.
அதே நேரத்தில்,
குழந்தைகளின் உயர்கல்வி, ஓய்வுக்காலம் போன்ற 10, 15, 20 ஆண்டுகளுக்குப் பிறகு வரும்
இலக்குகளுக்கு நீண்ட கால முதலீடுகளுக்கு ஈக்விட்டி ஃபண்டைத் திட்டமிடலாம்.
காலம் அதிகமாகும்போது
கூட்டு வளர்ச்சியின் தாக்கமும் அதிகரிக்கும்.
₹5,000 முதல் ₹20,000 வரை... 20 ஆண்டுகளில் எவ்வளவு?
மாதாந்திர
முதலீட்டின் சக்தியைப் புரிந்துகொள்ள இந்தக் கணக்கைப் பாருங்கள்.
|
மாத முதலீடு |
10 ஆண்டுகளில் முதலீடு |
10 ஆண்டுகளில் மதிப்பு* |
20 ஆண்டுகளில் முதலீடு |
20 ஆண்டுகளில் மதிப்பு* |
|
₹5,000 |
₹6 லட்சம் |
₹12.2 லட்சம் |
₹12 லட்சம் |
₹56.7 லட்சம் |
|
₹10,000 |
₹12 லட்சம் |
₹24.4 லட்சம் |
₹24 லட்சம் |
₹1.13 கோடி |
|
₹20,000 |
₹24 லட்சம் |
₹48.8 லட்சம் |
₹48 லட்சம் |
₹2.27 கோடி |
*ஆண்டுக்கு
சராசரியாக 13% வளர்ச்சி கிடைக்கும் என்ற விளக்கக் கணக்கு மட்டுமே. இது உறுதியான அல்லது
உத்தரவாதமான வருமானம் அல்ல. உண்மையான முதலீட்டு மதிப்பு சந்தை நிலவரத்துக்கு ஏற்ப மாறுபடும்.
இந்த அட்டவணையில்
முக்கியமாகக் கவனிக்க வேண்டியது என்னவென்றால், மாதம் ₹20,000 முதலீடு செய்பவர் 20 ஆண்டுகளில் மொத்தம் ₹48 லட்சம் முதலீடு செய்கிறார். ஆண்டுக்கு சராசரியாக
13% வளர்ச்சி கிடைத்தால், அதன் மதிப்பு சுமார் ₹2.27 கோடியாக இருக்கலாம்.
இதுதான் நீண்ட
கால முதலீட்டில் கூட்டு வளர்ச்சி உருவாக்கும் மாற்றம்.
மந்திரம் 4: “பங்குச் சந்தையை வெல்ல முயற்சி செய்யாதே!”
“பங்குச் சந்தை
எப்போது உச்சத்தில் இருக்கிறது?”, “எப்போது சரியும்?”, “எப்போது முதலீடு செய்யலாம்?”
என்று தொடர்ந்து கணித்துக்கொண்டிருப்பது முதலீட்டாளரை குழப்பத்தில் ஆழ்த்திவிடும்.
பங்குச் சந்தையின்
குறுகிய கால நகர்வுகளைச் சரியாகக் கணிப்பது எளிதான விஷயம் அல்ல.
அதனால், நீண்ட
கால இலக்குக்காகத் திட்டமிட்டு, ஒழுங்காக மாதாந்திர முதலீடு செய்வது பலருக்கு ஏற்ற
அணுகுமுறையாக இருக்கும்.
பங்குச் சந்தை
சரிந்தால் பயந்து முதலீட்டை நிறுத்துவதற்குப் பதிலாக, தங்களுடைய நிதி இலக்கு, கால அளவு,
ரிஸ்க்கைத் தாங்கும் திறன் ஆகியவற்றை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.
சந்தையை கணிப்பதைவிட,
நமது முதலீட்டை ஒழுங்காக நடத்துவது முக்கியம்.
மந்திரம் 5: “முதலீட்டை மட்டும் பார்க்காதே; நிதி இலக்கைப்
பார்!”
முதலீடு என்பது
பணத்தைப் பெருக்குவதற்கான ஒரு கருவி மட்டுமே. உண்மையான நோக்கம் நமது வாழ்க்கை நிதி
இலக்குகளை நிறைவேற்றுவதுதான்.
குழந்தையின்
உயர்கல்விக்கு எவ்வளவு தேவை?
ஓய்வுக்குப்
பிறகு மாதம் எவ்வளவு செலவு ஆகும்?
சொந்த வீடு
வாங்க எவ்வளவு பணம் தேவை?
அவசர கால
செலவுக்கு எவ்வளவு தொகை ஒதுக்க வேண்டும்?
இந்தக் கேள்விகளுக்குப்
பதில் தெரிந்த பிறகே முதலீட்டுத் திட்டத்தை அமைப்பது சிறந்தது.
உதாரணமாக,
20 ஆண்டுகளுக்குப் பிறகு ஓய்வு பெறப்போகிற ஒருவர், இன்று மாதம் ₹10,000 முதலீடு செய்வதை வெறும் “முதலீடு” என்று பார்க்காமல்,
“என்னுடைய ஓய்வுக்கால நிதிக்கான முதல் படி” என்று பார்க்க வேண்டும்.
மியூச்சுவல் ஃபண்ட் மூலம் தொடங்கலாமா?
நீண்ட கால
இலக்குகளுக்காக பல முதலீட்டாளர்கள் ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்ட் மூலம் மாத முதலீடான
எஸ்.ஐ.பி தேர்வு செய்கிறார்கள்.
ஆனால் எந்த
ஃபண்டில் முதலீடு செய்வது என்பது ஒருவருடைய நிதி இலக்கு, முதலீட்டுக் காலம், ரிஸ்கைத்
தாங்கும் திறன் ஆகியவற்றைப் பொறுத்தது.
முதலீடு செய்வதற்கு
முன் அவசரகால நிதி, மருத்துவக் காப்பீடு, தேவையான ஆயுள் காப்பீடு போன்ற அடிப்படை நிதிப்
பாதுகாப்புகள் இருக்கிறதா என்பதையும் கவனிக்க வேண்டும்.
குழந்தைகளுக்கும் முதலீட்டுப் பழக்கத்தைக் கற்றுக்கொடுங்கள்!
விநாயகர் சதுர்த்தி
நாளில் குழந்தைகளுக்கு ஒரு சிறிய தொகையைச் சேமிக்கக் கொடுத்து, அதிலிருந்து ஒரு பகுதியை
முதலீடு செய்வது எப்படி என்பதை கற்றுக்கொடுக்கலாம்.
“பணம் கிடைத்தவுடன்
முழுவதையும் செலவு செய்யக்கூடாது. ஒரு பகுதியை சேமிக்க வேண்டும்; ஒரு பகுதியை முதலீடு
செய்ய வேண்டும்” என்ற எண்ணத்தை சிறு வயதிலேயே உருவாக்கினால், அது அவர்களின் எதிர்கால
நிதி வாழ்க்கைக்கு மிகப்பெரிய உதவியாக இருக்கும்.
இந்த விநாயகர் சதுர்த்தியில் ஒரு தீர்மானம்!
இந்த விநாயகர்
சதுர்த்தியில் புதிய ஆடை வாங்குவது, வீட்டை அலங்கரிப்பது, விநாயகரை வழிபடுவது ஆகியவற்றுடன்
இன்னொரு நல்ல காரியத்தையும் தொடங்கலாம்.
அது “என்
எதிர்காலத்துக்காக ஒவ்வொரு மாதமும் ஒரு குறிப்பிட்ட தொகையை முதலீடு செய்வேன்” என்ற
தீர்மானமாக இருக்கட்டும்.
மாதம் ₹5,000 என்றாலும் பரவாயில்லை. ₹10,000 என்றாலும் சரி. வசதி இருந்தால் ₹20,000 அல்லது அதற்கும் அதிகமாக இருக்கலாம். மியூச்சுவல்
ஃபண்டில் பல திட்டங்களில் மாதம் குறைந்தபட்சம் ரூ.100 கூட முதலீடு செய்ய முடியும்.
தொகை சிறியதாக
இருக்கலாம். ஆனால் தொடர்ந்து முதலீடு செய்யும் பழக்கம் பெரியதாக இருக்க வேண்டும்.
சம்பளம் சம்பளம் அதிகரிக்கும் போது முதலீட்டுத் தொகையை அதிகரித்தால் நிதி இலக்கை
விரைந்து அடைய முடியும்; சீக்கிரம் செல்வம் சேர்க்க முடியும்.
விநாயகர் சதுர்த்தி
தடைகளை நீக்கும் பண்டிகை. இந்த ஆண்டு நம்முடைய நிதி வாழ்க்கையில் இருக்கும் “முதலீட்டைத்
தள்ளிப்போடும்” தடையையும் நீக்குவோம்.
இன்று தொடங்கும்
ஒரு சிறிய முதலீடு, 10 ஆண்டுகளில் ஒரு நல்ல தொகையாகவும், 20 ஆண்டுகளில் ஒரு பெரிய செல்வமாகவும்
மாறக்கூடும்.
எனவே, முதலீட்டைத்
தொடங்க நல்ல நாள் எது என்று தேடிக்கொண்டிருக்க வேண்டாம். நீங்கள் தொடங்கும் நாளே உங்கள்
முதலீட்டுக்கு நல்ல நாள்!
கூடுதல் விவரங்கள் மற்றும் முதலீட்டுக்கு
தொடர்பு கொள்ளவும்
திரு. சிவகாசி மணிகண்டன்
நிறுவனர்,
+ 91 98405 77675
AMFI Registered Mutual Fund
Distributor - ARN-33652
மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு, நிதி ஆலோசனை, ஆயுள் மற்றும் மருத்துவக் காப்பீடு எடுக்க திரு. சிவகாசி மணிகண்டன் அவர்களை அணுகலாம்.
நாணயம் விகடன் வெளியாகி உள்ள திரு. சிவகாசி மணிகண்டன் கட்டுரைகளை படிக்க
https://www.vikatan.com/author/aismoneycom
யூடியூப் வீடியோக்கள் பார்க்க
https://www.youtube.com/channel/UC7-lJ58kPJoRdmDipteAexA
தலைமை அலுவலகம்
சிவகாசி மணிகண்டன், MBA
(F&M), [MBA, I & FP],
FChFP, CIS, AMFI, CII (London)
Managing
Director - AISMONEY
No.
21, MBT Road, (Opp) Indian Bank, Walajapet - 632 513
Ranipet Dt. TN, India.
+ 91 98405 77675
+ 91 96777 66393 (Office)
support@aismoney.com
Disclaimer:
மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு சந்தை ரிஸ்க்களுக்கு உட்பட்டது. முதலீடு செய்யும் முன் திட்டம் சார்ந்த அனைத்து ஆவணங்களையும் சரியாகப் படித்துப் பார்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. மியூச்சுவல் ஃபண்ட் மூலம் நிச்சயமான ஆதாயங்கள் கிடைக்கும் என்பதற்கு உத்தரவாதம் கிடையாது.