மொத்தப் பக்கக்காட்சிகள்

யூடிஐ கிரெடிட் ரிஸ்க் ஃபண்ட் ரிஸ்க் ஈடுகட்டி அதிக வருமானம்


யூடிஐ கிரெடிட் ரிஸ்க் ஃபண்ட்

யூடிஐ கிரெடிட் ரிஸ்க் ஃபண்ட் (UTI Credit Risk Fund), அதிக வருமானம் சேர்க்கும்  கடன் சார்ந்த நிதி ஆணவங்களில் (high income accruing securities) முதலீடு செய்வது மூலம் நியாயமான வருமானத்தை முதலீட்டாளர்களுக்கு அளிக்க முயற்சி செய்து எடுத்து வருகிறது. மேலும், செயல்படும்  முதலீட்டுக் கலவை மேலாண்மை (active portfolio management) மூலம் கடன் / வட்டி விகித மாற்றத்திலிருந்து மூலதனத்தை அதிகரிக்கும் வாய்ப்புகளை மேற்கொண்டு வருகிறது. இந்த மியூச்சுவல் ஃபண்ட், இரண்டு முதல் நான்கு ஆண்டுகளுக்குள் முதிர்வு காலத்தை கொண்ட உயர் வருமானம் தரக்கூடிய முதலீட்டுக் கலவையை  கொண்டிருக்கிறது.  இது ஒப்பீட்டளவில், அதிக இடர்பாடு ஈடுகட்டப்பட்ட  வருமானத்தை உருவாக்குவதற்கான திறனைக் கொண்டிருக்கிறது.

திரு. ரித்தீஷ் நம்பியார், நிதி மேலாளர், யூ.டிஐ ஏஎம்சி (Mr. Ritesh Nambiar Fund Manager, UTI AMC)கூறும் போது,  “ஆர்.பி.ஐ. புதிய கவர்னரை நியமித்துள்ளது. அவர், வட்டி விகித குறைப்பை ஆராய்ந்து வருகிறார். கச்சா எண்ணெய் விலை குறைந்து வருவது, வருமானத்தை குறைத்துள்ளது. அதேநேரத்தில், வட்டி விகித குறைப்பு என்பது பல்வேறு காரணிகளை சார்ந்திருக்கிறது. உதாரணமாக, கச்சா எண்ணெய் விலை மாற்றம், பண வீக்க விகிதம், தேர்தல் முடிவு போன்றவை சார்ந்துள்ளது.  வரும் மாதங்களில் நாட்டு மக்களை கவரும் விதமாக கவர்ச்சிகரமான பிரபலமான நடவடிக்கைகளை  மத்திய அரசு எடுக்கும்  என்று நம்புகிறோம், இது நிதி புழக்கத்தில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும். அரசாங்கம் எப்படி துணிச்சலாக இறங்கும் என தெரியவில்லை. ஆர்.பி.ஐ. குறைவான அளவில் வட்டியை குறைக்கும் என நாங்கள் எதிர்பார்க்கிறோம். ஆனால், அது பண சுழற்சியை சுலபம் ஆக்குவதன் ஆரம்பமாக இருக்காது. இத்தகையை சூழ்நிலையில், அதிக வருமானம் சேர்க்கும் நிதி ஆணவங்கள் மற்றும் குறுகிய காலம் முதல் நடுத்தர கால கடன் பத்திரங்களில் முதலீடு செய்திருக்கும், யூடிஐ கிரெடிட் ரிஸ்க் ஃபண்ட் போன்றவை முதலீட்டாளர்களுக்கு சிறந்த முதலீட்டு வாய்ப்பாக இருக்கும்.”.
           
இந்த ஃபண்ட்  மூலம், ஒரு முதலீட்டாளர்,  கடன் சார்ந்த முதலீட்டு ஒதுக்கீட்டின்  பகுதியாக ஒரு சமநிலையான முதலீட்டு கலவையை உருவாக்க முடியும். இந்த ஃபண்ட் அதன் பெஞ்ச்மார்க் ஆன க்ரைசில் காம்போசைட் பாண்ட் ஃபண்ட் இண்டெக்ஸ் (CRISIL Composite Bond Fund Index) விட அனைத்து காலத்திலும் சிறப்பாக செயல்பட்டுள்ளது.  இந்த ஃபண்ட் 2018 டிசம்பர் 31 ஆம் தேதி நிலவரப்படி, ஆரம்பம் முதல் 8.46% வருமானத்தை கொடுத்துள்ளது. இந்தக் காலத்தில் இதன் பெஞ்ச்மார்க் வருமானம் 8.30 சதவிகிதமாக உள்ளது.


Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - மாதம்

அதிக பார்வை - 365 நாள்கள்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

இலவச பங்குச் சந்தைப் பயிற்சி ஞாயிறு, 21 ஏப்ரல் 2024

இலவச  பங்குச் சந்தைப் பயிற்சி  பங்குச் சந்தையில் முதலீடு செய்ய ஆர்வம் உள்ளவரா? பங்குச் சந்தை முதலீடு பற்றி அறிய இந்த இலவசப் பயிற்சியில் சேரவ...