மொத்தப் பக்கக்காட்சிகள்

கவின்கேர் இன் இண்டிகா - திரிஷா கிருஷ்ணன் பிராண்டு தூதர் Indica

ரெம் ஹேர் கலர் பிரிவில் கால்பதிக்கும் கவின்கேர் இன் இண்டிகா;  புது தயாரிப்பான இண்டிகா நேச்சுரல் & நரீஷ் க்ரெம் ஹேர் கலரை அறிமுகப்படுத்தியுள்ளது

இதனைத் தொடர்ந்து புகழ்பெற்ற நடிகை திரிஷா கிருஷ்ணன் அவர்களை பிராண்டு தூதராக நியமித்துள்ளது

இத்தொழில்துறையில் முதன்முறையாக குறைவான டை (சாயம்) கெமிக்கல்களுடன் தயாரிப்பை சந்தையில் அறிமுகம் செய்கிறது

சென்னை, நவம்பர் 6, 2024: எஃப்எம்சிஜி பெருநிறுவனமான கவின்கேர் குழுமத்தின் பிரபல பிராண்டுகளுள் ஒன்றான இன்டிகா, இண்டிகா நேச்சுரல் & நரீஷ் க்ரெம் ஹேர் கலர் என்ற புதிய தயாரிப்பு அறிமுகம் வழியாக க்ரெம் ஹேர் கலர் வகையினத்தில் தனது நுழைவை இன்று அறிவித்துள்ளது. இந்திய ஹேர் கலர் தொழில்துறை சந்தையில் முதன்மை வகிக்கும் இன்டிகா, இத்தொழில்துறையில் ஒரு புரட்சிகரமான புதிய முயற்சியாக குறைவான டை (சாய) கெமிக்கல்களை கொண்ட ஒரு நவீன ஃபார்முலா அடிப்படையில் இன்த புதிய க்ரெம்  ஹேர் கலர் தயாரிப்பை உருவாக்கியுள்ளது.  ரூ.15 என்ற வியப்பூட்டும் விலையில் கிடைக்கும் இத்தயாரிப்பு தலைமுடிக்கு அழகான வண்ணத்தையும் மற்றும் செழுமையான பளபளப்பையும் வழங்கும் விதமாக உருவாக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த புதிய தயாரிப்பின் அறிமுகத்தை ஒட்டி புகழ்பெற்ற நடிகை திரிஷா கிருஷ்ணனை தமது பிராண்டு தூதராக இண்டிகா அறிமுகப்படுத்தியுள்ளது.

TVC Link: https://www.youtube.com/watch?v=HEwZ2HrqDlU

வெங்காய எண்ணெய், புங்கங்கொட்டை (அர்கான் ஆயில்) எண்ணெய் மற்றும் தேங்காய் எண்ணெய் என்ற ஊட்டமளிக்கும் மூன்று உட்பொருட்களை உள்ளடக்கிய ஒரு தனித்துவமான ஃபார்முலா மூலம் இண்டிகா நேச்சுரல் & நரீஷ் க்ரெம் ஹேர் கலர், தனிச்சிறப்புடன் திகழ்கிறது.  தலைமுடிக்கு புத்துயிரூட்டுவதோடு, காண்பவர்களை திரும்பிப் பார்க்க வைக்கும் அற்புதமான வண்ணத்தையும் இத்தயாரிப்பு வழங்குகிறது.  அழகு மற்றும் முடி பராமரிப்பு ஆகிய இரண்டையும் பெரிதும் மதிக்கும் நபர்களுக்காக உருவாக்கப்பட்டிருக்கின்ற இந்த புத்தம் புதிய தயாரிப்பு, தலைமுடி சேதமடையும் என்ற கவலையிலிருந்து விடுவிக்கிறது.  இதன்மூலம் தலைமுடியில் நம்பிக்கையோடு வண்ணமேற்றலாம். 100% நரைமுடியை மறைத்து விடும் திறன் கொண்ட இண்டிகா நேச்சுரல் & நரீஷ் க்ரெம் ஹேர் கலர், இந்திய நுகர்வோர்களின் மாறுபட்ட விருப்பங்களைப் பூர்த்தி செய்வதற்கென நேச்சுரல் பிளாக் 1, டார்க் பிரவுன் 3 மற்றும் பர்கண்டி 3.16 என்ற மூன்று மாறுபட்ட வண்ணங்களை வழங்குகிறது.  இந்நாட்டிலுள்ள அனைவருக்கும் தரமான தலைமுடி பராமரிப்பு கிடைக்குமாறு செய்ய வேண்டுமென்ற ஆழ்ந்த நம்பிக்கையுடன் செயல்படும் இண்டிகாவின் இத்தயாரிப்பு, நாட்டின் நகர்ப்புற மற்றும் கிராமப்புற பகுதிகள் அனைத்திலும் உள்ள அனைத்து ரீடெய்ல் அவுட்லெட்களிலும் கிடைக்கப்பெறும்.  இதன் பேரார்வம் மிக்க சந்தையாக்கல் உத்தியின் ஒரு அங்கமாக அணுகிப்பெறும் வசதி, பாதுகாப்பு மற்றும் பயனளிக்கும் தன்மை ஆகியவற்றில் புதிய தரநிலைகளை நிறுவுவது இண்டிகாவின் நோக்கமாகும்.  இதன்மூலம் தங்களது வீட்டிலேயே சௌகரியமாக இருந்து கொண்டே சலூனில் கிடைக்கக்கூடிய தரமான முடிவுகளை ஒவ்வொரு நபரும் இத்தயாரிப்பின் மூலம் அனுபவிப்பதை இண்டிகா உறுதி செய்யும்.

கவின்கேர் நிறுவனத்தின் பர்சனல் கேர் துறையின் பிசினஸ் ஹெட் திரு. ரஜத் நந்தா இந்நிகழ்வின்போது கூறியதாவது: "இண்டிகா நேச்சுரல் & நரீஷ் க்ரெம் ஹேர் கலர் தயாரிப்புகளது அறிமுகத்தின் மூலம் க்ரெம் ஹேர் கலர் வகையினத்தில் எங்களது நுழைவை அறிவிப்பதில் நாங்கள் பெருமகிழ்ச்சியடைகிறோம்.  வாடிக்கையாளர் அனுபவத்தை மேம்படுத்துகிறவாறு புதுமையான தயாரிப்புகளை அறிமுகம் செய்து, புத்தாக்க செயல்பாடுகளில் முதன்மை பிராண்டாக தன்னை தொடர்ந்து இண்டிகா நிலைநிறுத்தியிருக்கிறது.  புத்தாக்கம் மற்றும் நுகர்வோரது நலத்தின் மீது ஆழமான அக்கறை கொண்ட ஒரு பிராண்டாக நிலைப்புத்தன்மையுள்ள அழகுக்கான தேவை வளர்ந்து வருவதை நாங்கள் உணர்ந்திருக்கிறோம்; ஒரு முன்னோடித்துவ ஃபார்முலாவைக் கொண்ட இந்த புரட்சிகர தயாரிப்பை அறிமுகம் செய்ய இதுவே எங்களை ஏதுவாக்கியிருக்கிறது.  இதற்கு முன்பு ஒருபோதும் இருந்திடாதவாறு தலைமுடியின் ஆரோக்கியத்திற்கு முன்னுரிமையளிக்கும் அதே நேரத்தில் செழுமையான, பளபளப்பான நீண்டகாலம் நீடிக்கின்ற வண்ணத்தை வழங்குவதில் எமது அர்ப்பணிப்பை இத்தயாரிப்பு எடுத்துக்காட்டுகிறது. அழகு என்பது, அணுகிப் பெறக்கூடியது என்ற எமது செய்தியை மிக நேர்த்தியாக வெளிப்படுத்துகின்ற புகழ்பெற்ற நடிகையான திரிஷா கிருஷ்ணன் உடன் இத்தயாரிப்பிற்காக இணைந்து செயல்படுவதில் நாங்கள் பெருமை கொள்கிறோம். நம்பிக்கையோடும் மற்றும் எளிதான அணுகுவசதியோடும் தங்களின் தனித்துவமான அழகை மேலும் மேம்படுத்துவதற்கு மக்களுக்கு எமது நவீன தயாரிப்புகளின் வழியாக உதவுவதே எமது நோக்கம்."

இது தொடர்பாக தனது எண்ணங்களை பகிர்ந்து கொண்ட பிரபல நடிகை திரிஷா கிருஷ்ணன், "கவின் கேர் நிறுவனத்திற்காக எனது இரண்டாவது பிராண்டு விளம்பரமாக இது இருப்பதால், சொந்த வீட்டிற்கு வருவது போன்ற உணர்வு எழுகிறது.  சந்தைக்கும் மற்றும் அதன் வழியாக நுகர்வோர்களுக்கும் பல்வேறு பிராண்டுகள் வழியாக கவின்கேர் வழங்கியிருக்கின்ற பல புதுமையான தயாரிப்புகளை நான் எப்போதும் வியந்து பாராட்டியிருக்கிறேன்.  இன்றைய தினம் கவின்கேர் குழுமத்தைச் சேர்ந்த இண்டிகாவின் நேச்சுரல் & நரீஷ் க்ரெம் ஹேர் கலர் என்ற புரட்சிகரமான, புதுமையான தயாரிப்பை பெருமிதத்தோடு நான் அறிமுகம் செய்கிறேன்.  இந்நாட்டிலுள்ள அனைத்து குடும்பங்களும் அறிந்த பிரபல பிராண்டாக இண்டிகா இருக்கிறது.  இந்திய நுகர்வோர்கள் மத்தியில் வலுவான நன்மதிப்பை அது பெற்றிருக்கிறது.  இத்தயாரிப்பின் விளம்பர தூதராக இதனை இன்று அறிமுகம் செய்வதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.  நாம் பயன்படுத்துகின்ற தயாரிப்புகள் குறித்து அக்கறையும், விழிப்புணர்வும் கொண்டவர்களாக நாம் இருக்கும் இக்காலகட்டத்தில் குறைவான டை (சாய) கெமிக்கல்களை உள்ளடக்கிய இத்தயாரிப்பின் மூலம் கெமிக்கல்களின் தீங்கான விளைவுகள் பற்றி கவலைப்படாமல், சுய பராமரிப்பிற்கு இண்டிகா தொடர்ந்து நமக்கு வழிகாட்டி வருகிறது.

இத்தொழில்துறையில் இத்தகைய வகையினத்தில் முதன் முறையாக அறிமுகம் செய்யப்படும் இண்டிகா நேச்சுரல் & நரீஷ் க்ரெம் கலர், ஆரோக்கியமான விருப்பத்தேர்வுகளை அழகுடன் சேர்த்து வழங்குவதில் வெற்றி கண்டிருக்கிறது." என்று கூறினார்.

பிலீவ்டிரினிட்டின் நிறுவனர் சமர்த் ஸ்ரீவத்சவா  இதுபற்றி கூறியதாவது: "நுகர்வோர்களுடன் பகிர்ந்துகொள்ள உண்மையிலேயே ஒரு புதிய செய்தியினை இண்டிகா நேச்சுரல்  & நரீஸ் க்ரெம்  ஹேர் கலர் கொண்டிருக்கிறது.  இத்தயாரிப்பு பொருளின் ஆதாயங்கள் மற்றும் நுகர்வோர்களின் எண்ணங்கள் குறித்து மிகத்தெளிவான தகவலையும், அறிவுறுத்தலையும் இண்டிகாவின் முதுநிலை பிராண்டு மேலாளர் திரு. சாஹில் சம்ப்யால் எங்களுக்கு வழங்கினார்.  அதிக உண்மைத்தனத்துடன் இத்தயாரிப்பின் ஆதாயப்பலன்களை உயிரோட்டமுள்ளதாக முன்னிலைப்படுத்துவதே எமது பணியாக இருந்தது.  பிலீவ்டிரினிட்டி – ன் கிரியேட்டிவ் குழுவான ஹனோஸ் மொக்ரேலியா (கிரியேட்டி துறை தலைவர்) மற்றும் அமன் கான் (கிரியேட்வ் இயக்குனர்) ஆகியோரோடு ஜாய்னா முகர்ஜி (இயக்குனர்) மற்றும் மின்டோ சிங் (கிளாசிக்ஸ் திரைப்படங்கள்) ஆகியோரின் ஒருங்கிணைந்த பங்களிப்பு உயிரோட்டமுள்ள, அற்புதமான திரைப்படமாக இவ்விளம்பர படத்தை உருவாக்கியிருக்கிறது.  திரிஷா கிருஷ்ணன், மிக அழகான பெண்ணாக, காண்பவர்களை இதில் ஈர்த்திருக்கிறார்.  இந்த விளம்பர திரைப்படம், பார்க்கும் அனைவரையும் பரவசப்படுத்தும் என்பதில் ஐயமில்லை."

இண்டிகா குறித்து: 1995-ம் ஆண்டில், இண்டிகா ஹெர்பல் ஹேர் என்பதன் அறிமுகத்தின் மூலம் இண்டிகா பிராண்டு அதன் பயணத்தை தொடங்கியது.  2009-ம் ஆண்டில், நுகர்வோர்களிடமிருந்து கிடைத்த கருத்துகளின் அடிப்படையிலும் மற்றும் 10 நிமிடங்களில் ஹேர்கலர் என்ற புத்தாக்க கண்டுபிடிப்பின் அடிப்படையிலும் இந்த புராடக்ட் மீண்டும் அறிமுகம் செய்யப்பட்டது.  2015-ம் ஆண்டில், இண்டிகா ஈசி ஷாம்பூ ஹேர்கலர் என்பதனை இண்டிகா சந்தையில் அறிமுகம் செய்தது.  மிக விரைவிலேயே இந்நாட்டில் நம்பர் 1 ஷாம்பூ ஹேர்கலர் பிராண்டாக இது உருவெடுத்து, தனது நிலையை தொடர்ந்து தக்கவைத்துக் கொண்டிருக்கிறது (ஏசி நீல்சன் ஆய்வின் படி).

கவின்கேர் பிரைவேட் லிமிடெட் குறித்து: கவின்கேர் பிரைவேட் லிமிடெட், தனிநபர் பராமரிப்பு, தொழில்முறை பராமரிப்பு, பால்பொருட்கள், ஸ்நாக்ஸ், உணவுகள், பானங்கள், மற்றும் சலூன்கள் ஆகிய தொழிற்பிரிவுகளைக்கொண்டு, இயங்கி வரும் பன்முக செயல்பாடுள்ள ஒரு எஃப்எம்சிஜி பெருநிறுவனமாகும். இதன் பிராண்டுகள் தொகுப்பில் ஷாம்புகள் (சிக், மீரா, கார்த்திகா மற்றும் நைல்), ஹேர் வாஷ் பவுடர்கள் (மீரா மற்றும் கார்த்திகா), தேங்காய் எண்ணெய் (மீரா), ஸ்கின் கிரீம்கள் (ஃபேர் எவர், ஸ்பின்ஸ்), டியோடரண்ட் மற்றும் டால்க் (ஸ்பின்ஸ்), ஊறுகாய்கள் மற்றும் நொறுக்குத்தீனிகள் (ருச்சி, சின்னிஸ் & கார்டன்), ஹேர் கலர்ஸ் (இன்டிகா), ரீடெய்ல் சலூன் தயாரிப்புகள் (ராகா புரொஃபஷனல்), பானங்கள் (மா), பால் பொருட்கள் (கவின்ஸ்),மற்றும் விலங்குகளுக்கான மருத்துவமனை (சஞ்சு)ஆகியவை உள்ளடங்கும். 

இதன் பெரும்பாலான பிராண்டுகள் அவைகளுக்குரிய தயாரிப்பு வகையினங்களில் முதலிடத்தை தக்கவைத்துக் கொண்டிருக்கிற பிராண்டுகளாகும். நவீன சாதனங்கள் மற்றும் தொழில்நுட்ப திறன்கொண்ட ஒரு பிரத்யேக ஆராய்ச்சி மற்றும் உருவாக்கல் மையமானது, இந்த பல்வேறு துறைகள் முன்னேற்றம் காண்பதற்கு தொடர்ந்து பெரிதும் உதவி வருகிறது. மிகப்பெரிய அளவில் சந்தையாக்கல் செய்வதற்கான யுக்திகளையும், அம்சங்களையும் மிகச்சரியாக புரிந்துகொண்டிருக்கும் இந்நிறுவனம், தேசிய அளவிலான சந்தையில் மிக வலுவாக காலூன்றி இருக்கிறது. "பேரார்வமும், பெருமகிழ்ச்சியும் கொண்ட பணியாளர்கள் வழியாக புத்தாக்கத்தை ஊக்குவித்து மக்களால் பெரிதும் விரும்பப்படும் பிராண்டுகளை உருவாக்குவதன் மூலம், தொழில்துறையின் வளர்ச்சியை விட கணிசமான அளவு இன்னும் சிறப்பாக நாங்கள் வளர்ச்சி காண்போம்" என்ற தனது கார்ப்பரேட் செயல்நோக்கம் மற்றும் திட்டத்தின் மீது வலுவான அடித்தளத்தை அமைத்திருப்பதே கவின்கேரின் வெற்றிக்கு காரணமாகும்.

 

 

Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - மாதம்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

மெல்ல அழிந்த இயற்கை உணவுகள்..! Food

*மெல்ல அழிந்த_இயற்கை உணவுகள்..!* ஆப்பிள் இன்று இந்திய சந்தையினை வியாபித்து நின்றாலும், சில ஆலயங்களின் பிரசாதம் என்ற அளவுக்கு வந்துவிட்டாலும்...